நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

29 February 2012

BSNL -ன் மிகக் குறைந்த விலை டேப்லெட்

BSNL -ன் மிகக் குறைந்த விலை டேப்லெட்: பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்யலாம்!

பிரபல டெலிகாம் நிறுவனமான BSNL மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை வெளியிட்டுள்ளது. BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3250 விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது.

உலகிலேயே மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை ஆகாஷ் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டது. சில பிரச்சினைகளால் இந்த கணினிகள் வருவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. ஆகவே ஆகாஷ் கணினிகளுக்கு முன்பதிவு செய்து காத்திருக்காமல் அதே விலை உள்ள புதிய T-PAD IS701R கணினிகளை முன்பதிவு செய்து பெற்று கொள்ளுங்கள். மார்ச் 5 இருந்து இந்த கணினிகள் விற்பனைக்கு வருகின்றன.


Features:
 • இணையத்தில் வேகமாக உலவலாம். யூடியுப் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம், மற்றும் ஈமெயில்கள் வசதிகளை உபயோகித்து கொள்ளலாம்.
 • கூகுளின் Android 2.3 மென்பொருளை கொண்டு இயங்குவதால் லட்சக்கணக்கான இலவச மென்பொருட்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
 • Wifi மற்றும் GPRS மூலம் இணைய வசதியை உபோகித்து கொள்ளலாம்.
 • பிரபல சமூக தளங்களை சுலபமாக உபயோகித்து கொள்ளலாம்.
 • மின் புத்தகங்களை படித்து கொள்ளலாம் மற்றும் பல வசதிகளும் உள்ளது.
Specification:
 • CPU - IMAP210 1GHz 
 • O/S - Android 2.3 
 • RAM - DDR2 256MB
 • FLASH - 2GB 
 • TF card - TF card support to 32G 
 • Wifi - 802.11b/g/n
 • LCD resolution - 7” TFT, 16:9, 800*600 
 • Touch screen - resistive touch screen 
 • G-Sensor - Rotator screen, 3D games 
 • Camera - 0.3MP 
 • USB - USB x 1 
 • Battery - Li-ion 3000mah 5V2A 
 • Video - Max.1280*720 MKV(H.264 HP) AVI RM/RMVB FLV WMV9 MP4 
 • Flash Support - Adode Flash 10.3 
 • Email - Send/receive email online
 • Audio - MP3/WMA/APE/FLAC/AAC/OGG/AC3/WAV
 முன்பதிவு செய்ய:
 1. இந்த மலிவு விலை டேப்லேட் கணினிகளை முன்பணம் ஏதும் செலுத்தாமல் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதற்க்கு முதலில் இந்த லிங்கில் PRE-BOOK NOW கிளிக் செய்து இந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
 2. அதில் உள்ள PRE-BOOK NOW என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
 3. அடுத்து ஒரு Pop-up விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுடைய சரியான விவரங்களை கொடுத்து கீழே உள்ள Submit பட்டனை அழுத்தவும்.
 4. இப்பொழுது நீங்கள் முன்பதிவு செய்ததை உறுதி செய்யும் விதமாக உங்கள் bookking Id கொடுப்பார்கள் அதை குறித்து கொள்ளுங்கள்.
 5. அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்குள் உங்களை அந்த நிறுவனத்தினர் ஈமெயில் மூலமாகவோ அல்லது தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்வார்கள்.
 6.  Delivery date மற்றும் பணம் செலுத்தும் முறை இரண்டையும் உங்களுக்கும் உறுதி படுத்துவார்கள்.
 7. மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் கீழே அவர்கள் கொடுத்திருக்கும் தொலைபேசி எண் மூலமாகவோ, ஈமெயில் முகவரி மூலமாகவோ விசாரித்து கொள்ளலாம்.
Link PRE-BOOK NOW

25 February 2012

உங்களுக்கும் காத்துகிட்டு இருக்கு என்கவுண்ட்டர்....

சட்டங்கள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்... மாற்று கருத்துக்கு இடமே இல்லை. உலகத்துலேயே கடுமையான சட்டம் உள்ள அரபு நாடுகளில் கூட யாரையுமே விசாரணை இல்லாமல் தண்டிப்பதில்லை. சென்னையில குளிர் கொஞ்சம் அதிகம் போல, அதனால் தான் இந்த கொள்ளை காரங்க நைட் தூங்கும் போது கூட ஷீ போட்டுக்கிட்டு தான் தூங்கினாங்க போல இருக்கு. என்னமா ரீல் விடுறானுங்க.  (இது கதை இல்ல நிஜம்ங்க சத்தியமா  நம்புங்கோ)

கேமரா இல்லாத வங்கிகளில் கொள்ளை நடந்ததுன்னு சொன்னாங்க, ஆனா போலிஸ் கலர் போட்டோ வெளியிட்டு பத்து மணி நேரத்துக்குள்ள என்கவுண்ட்டர். 30 லட்சம் கொள்ளை அடித்தவர்களுக்கு என்கவுண்ட்டராம், ஆனா ஒரு லட்சத்து எழுபது ஆறாயிரம் கோடி அடிச்சவங்க நீதிமன்றத்துல ஜாமீன் கேட்டு காத்திருக்காங்க.. பல கொலைகளை செய்து விட்டு ரவுடிகள் ஊரில் சுற்றி கொண்டு தான் இருகிறார்கள் .... (இனிமே அஞ்சு வருசத்துக்கு கொள்ளைகள் நடக்காது அப்பாடா.இதற்கு அரசியல்வாவாதிகளுக்கு மட்டும் விதிவிலக்கு!)  

இறையாண்மை கூட பணம் இருந்தா வேற மாதிரி போல. திருடனாய், பொது மக்களாய் கொள்ளை அடித்தால் இது தான் கதி. பொழக்க தெரியாத பசங்க, இவங்களும் அரசியல் வாதியோ, அரசு அதிகாரியாகவோ ஆயிற்று அப்புறம் கொள்ளை அடிச்சிருக்கணும், அப்ப ஜாமீன் கொடுத்து, சல்யுட் அடிச்சு அனுப்பி விட்டுருப்பாங்க. 5 பேர அரெஸ்ட் பண்ண துப்பில்லாம சுட்டுருக்காங்க.. இதுக்கு பாராட்டு வேற.. நல்ல வேளை பழக்க தோசத்துல தோஷத்தில் நில அபகரிப்பு வழக்கு போடாமல் இருந்தாங்களே. அதுவே பெரிய விஷயம். (அரசியல இதெல்லாம் சாதரணமப்பா!!)

ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருக்கும் சிலரை அவ்வீட்டைச் சுற்றி வளையம் அமைத்திருக்கும் காவல்துறையினரால் உயிருடன் பிடிக்க முடியாதா? மயக்கம் ஏற்படுத்தும் கையெறிகுண்டைத் தூரத்திலிருந்து வீட்டிற்குள் வீசினால் மட்டும் போதுமே, எவ்வித தாக்குதலோ சேதாரமோ இன்றி அவ்வீட்டிலிருப்பவர்கள் அனைவரையும் உயிருடன் பிடிக்க முடியுமே? இதற்கான வசதி தமிழகக் காவல்துறையினரிடம் இல்லையா...

கொஞ்சம் விட்டா திமுக ஆட்சியில் பயிற்சி பெற்ற கொள்ளையர்கள்ன்னு சொல்லுவாங்க. காக்கி சட்டைகளை மட்டுமே நம்பி ஆட்சி நடத்தி விடலாம் என்கிற நம்பிக்கை தப்பு. அப்படின்னா இதுக்கு பேரு ஜனநாயக நாடு இல்லை. சந்தேகத்தின் பேரில் கைது செய்வதே தவறென வாதாடும் நாட்டில், சந்தேகத்தின் பேரில் சுட்டே கொல்வது சரியா... 

தண்டனைகள் மிகக்கடுமையாக இருக்கவேண்டியது தான், ஆனால் அதை யார் நிர்ணயிப்பது என்பது தான் முக்கியம். பணம் இருக்கிறவங்க கிட்ட சட்டம் மண்டியிடுவதும் பணம் இல்லாதவங்ககிட்ட பாம்பாய் சீறுவதும் இங்கே தாங்க நடக்குது. தண்டிப்பதற்கு முன்னாடி யார் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்படவேண்டும். என்கவுண்டர் என்பது ஒரு தப்பை மறைக்க இன்னொரு தப்பு செய்வது. என்ன இருந்தாலும் சட்டத்தை கையில் எடுக்க இவர்கள் யார்? இந்த கொள்ளை அடிச்சா முப்பது லட்சத்துக்கு முன்னாள், ஐந்து உயிர் என்பது மிகப்பெரிய விஷயம். 

இதை ஆதரிக்கும் புண்ணியவான்களே, உங்க வீட்டு பிள்ளைங்க இதே மாதிரி திருட்டு கேஸ்ல மாட்டிக்கிட்டு என்கவுட்டர்ல சுட்டா சரின்னு சொல்லுவீங்களா? இதை ஆதரித்து சினிமா வசனமா எழுதுறீங்க, ஜனநாயகம், அரசியலைமைப்புன்னா என்னன்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க. இதற்கு அரபு நாடுகள உதாரணம் காட்டிரிங்க அங்கு என்கவுண்ட்டர் இல்லைங்கோ ...  அது என்ன லாஜிக்ன்னே புரியல, எல்லா என்கவுண்ட்டர்களிலும் கண்டிப்பாக இரண்டு போலிஸ்க்கு மட்டும் காயம் ஏற்படுது. ஒருவேளை அந்த ரெண்டு பேரு தான் சிரிப்பு போலிசோ?

விரைவில் எதிர் பார்க்கலாம் தலைப்பு செய்திகளில் பிக்பாகெட் அடித்தவன் என்கௌண்டேரில் சுட்டு வீழ்த்தப்பட்டான், என்கவுண்ட்டர்க்கு எதிர்ப்பா பதிவு போட்டவர்கள் என்று பட்டியல் நீளும்.. (போலீஸ் காரைய்யா இது முழுவதுமாக என் சொந்த கருத்துக்கள் இல்லையா ... சில தளங்களிருந்து திரட்ட பட்டவையா i am approval). நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சத  சொல்லுங்க... எதுக்கல்லாம் என்கவுண்ட்டர் போடலாம்னு!!!!

24 February 2012

தினம் ஒரு தகவல் - இன்று வைரம்வாங்க தெரிஞ்சுக்கலாம் வைரம்! 

இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.

உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது. இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்'' என்ற பழமொழியும் வந்தது. அந்த வைரம் பற்றிய அடிப்படை தகவல்களும் கூடவே சில சுவாரஸ்யமான தகவலும் பார்ப்போமா?

வைரம் எப்படித் தான் உருவாகிறது?

பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.

வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்?

இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

 வைரம் ஏன் இவ்வளவு ஜொலிக்கிறது?

வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Internal Reflection (TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர். அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் ஜொலிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.
வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும். இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.

வைரத்தை ஏன் காரட்(Carat) முறையில் எடை போடுகிறார்கள்?

இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்படுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர். ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை. இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது.

ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம். அதாவது 5 காரட் 1 கிராம் எடை.

சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும்?

ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள்.
உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட்.

 ப்ளு ஜாகர்(Blue Jager) வைரம் என்றால் என்ன?

தென் ஆப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு Blue Jager என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை.

வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன்?

ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 டன் (35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது.

இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது?

இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.

பெல்ஜியம் கட்டிங் என்றால் என்ன?
 
முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்ஜியம் கட்டிங்.

வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே, அதனை உண்மையா?

வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும். பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை Hardness என்கிறோம்.

வைரத்தில் தோஷம் என்றால் என்ன?

அடிப்படையில் வைரம், நன்றாக ஒருங்கிணைந்த கார்பன் மூலக்கூறுகளால் ஆனது. ஒரு வைரம் உருவாகும் போது, சில சமயம் இயற்கையில் முழுமையான கட்டமைப்பு இல்லாத கார்பன் மூலக்கூறுகளின் அணுக்கள் வைரத்தின் உள்புகுந்து இணைந்து அதனோடு வளர்ந்து விடும். இவை கறுப்பு நிறம் கொண்டவை. இதற்கு மற்றொரு வேதியியல் பெயர் கிராபைட்.

வைரம் பட்டை தீட்டியதும் இது உள்ளே தனியாக கறுப்பாக காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் Black Pique / Black Spot என்பார்கள். நம் நாட்டில் இதற்கு தோஷம் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது?

வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர்பச்சை, வயலட் கலர்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது.

இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது?

கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் Tower of London என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.

இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது?

தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட Golden Jubilee தான் மிகப்பெரியது இதன் எடை : 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது.ஈரான் நாட்டின் இரும்புப் பெண்கள்!

ஈரான் நாட்டின் இரகசிய ஆயுதங்கள் என்கிற தலைப்பில் இணையத் தளம் ஒன்றில் வெளியாகி உள்ள செய்தி இது. ஈரான் நாட்டுப் பெண்கள் மிகவும் கடினமான போர் வித்தைகளை பயின்று வருகின்றனர். இவர்களைத் தான் அமெரிக்கா ஈரானின் இரகசிய ஆயுதங்கள் என்று நினைத்துப் பயப்படுகின்றதோ தெரியவில்லை.
23 February 2012

கோடையை குளுமையாக்கும் நுங்கு!இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் படைத்தது. கோடை காலம் வந்துவிட்டாலே நுங்கு சீசன் தொடங்கிவிடும். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரவே இயற்கையானது நுங்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. நுங்கு பனை மரம் தரும் அரிய மருந்தாகும். இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.


குளுமை தரும் நுங்கு

கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

துவர்ப்பு சுவை

பனங்காயை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும். அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

அம்மைநோய்

அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.

பதநீரும், நுங்கும்

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே அலாதிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளுமையை ஏற்படுத்தும்.

வேர்குரு போக்கும் நுங்கு

கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள்.  பனை நுங்கின் சாறெடுத்து வியர்க்குருவில் தடவி வர வியர்க்குரு குறையும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.

22 February 2012

சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க..


கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். இதில் சில நார் உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது. அதனால் மேல் தோலை மட்டும் சீவி விட்டு நசுக்கி சமையலில் பயன்படுத்தலாம்.

கீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது மலத்தை நன்றாக இளக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றை சேர்த்தும் சமைக்கலாம்.

கீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும்.

காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.

கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றோர்தான் மாற்ற வேண்டும். சின்ன வயதில் இருந்தே குழந்தைகளுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க படுத்த வேண்டும்.

கீரை உணவுகளை எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும். எனவே, தினமும் உணவில் ஒரு கீரையாவது எடுத்து கொள்ளுங்கள்.

19 February 2012

திருக்குறள் கனக சுப்ரமணிபஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?

நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு. எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல் ஏமாத்திக்கொண்டு என்று...

ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார்.

டிக்கட் கொடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால் அப்போதுதான் ஆரம்பிக்கிறது..அப்படி என்னதான் செய்கிறார்? கல்லாரில் பேருந்து சிறிது நேரம் நிற்கும் போது.....

பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார். சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார். தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார். அன்றைய தினம் எந்த பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷ நாளும் இல்லை என்றால் பயணியில் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். 

அதாவது இவர் பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......

ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைகைதிகளுக்கு பாடம் நடத்துகிறார். ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார். போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.

இவரைப்பற்றி ஒரு கட்டுரை நேற்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது. இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த கட்டுரையை படிக்க இங்கு கிளிக் செய்யவும் ...

நன்றி:  Fecebook நண்பர் பாரிவேல் முருகேசன்


கோடை காலமே வருக!!


வசந்த காலமான பனிக்காலத்திற்கு விடை கொடுத்துவிட்டு, அடுத்து வரும் கோடை காலத்திற்கு வரவேற்பு கொடுக்கும் காலம் வந்துவிட்டது. வெயிலின் தாக்கமும், வெப்பமும் இனி நம்மை பயமுறுத்தும்.
கோடையும், உஷ்ணமும் பிரிக்க முடியாதது. அதனால் கோடையில் அதிக சூடு உடலைத் தாக்குகிறது. அப்போது, `பாடி டெம்பரேச்சர் ரெகுலேஷன்' எனப்படும் உடல் உஷ்ணத்தில் சமச்சீரற்ற தன்மை உருவாகிறது. கோடை காலத்தில் மிகுந்த சுகாதாரதன்மையுடன் உணவுகளை சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் நோய்கள் போட்டிபோட்டிக் கொண்டு நம்மை தாக்கும்.

இந்த கோடை காலத்தில் உடலை சமநிலைக்கு வைத்திருப்பதில் நமது உணவுப் பழக்க வழக்கங்கள் முதல் இடத்தைப் பிடிக்கின்றன.
கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் காத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வெறும் தண்ணீர் இந்த பணியைச் செய்து விட முடியாது. அதற்கு உதவியாக முதலில் வருவது காய்கறிகள்.
காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது மிகவும் சிறந்தது. அதிகமாய் வேகவைத்தோ, பொரித்தோ உண்பதில் எந்த விதமான பயன்களும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
fruit-salad-ck-320083-l

 பழங்கள்உண்பது கோடைக்காலத்துக்கு மிகவும் அவசியமானது. நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதுடன், உடலின் வெப்பத்தையும் கட்டுப்படுத்துகிறது.
காய்கறிகளும், பழங்களும் அதிகம் உண்பது உடலின் தண்ணீர் தேவையையும், குளிர் தேவையையும் நிறைவேற்றுவதுடன், அவற்றிலிருக்கும் வைட்டமின்கள், மினரல், விஷ எதிர்ப்பு தன்மை, நார்ச்சத்து இவையெல்லாம் கோடையில் நோய் வராமலும் நம்மைக் காத்துக் கொள்கின்றன.

தர்பூசணியில் 90 விழுக்காடு தண்ணீரே இருப்பதால், உடலின் தண்ணீர் தேவைக்கு சிறந்தது தர்பூசணி. தர்பூசணியை விட அதிக தண்ணீர் சத்துள்ள ஒரு காய்கறி உண்டு. அது தான் வெள்ளரிக்காய் ! வெள்ளரிக்காயை அதிகமாய் உட்கொள்ளுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.
உடலின் வெப்பம் வெளியேற வேண்டியதும், உடல் குளிர வேண்டியதும் கோடை காலத்தின் தேவைகளில் ஒன்று. அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்ணும் கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுப் பொருட்கள் உதவும். குறிப்பாக வேக வைத்த உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்டா ரொட்டி, அரிசி இவை.
அப்படியே வாழைப்பழம் சாப்பிடுவது கூட கோடைகாலத்தில் உடலை நலமுடன் வைத்திருக்கும் என்கிறார் இங்கிலாந்து மருத்துவர் டாக்டர் டாயில்.
காய்கறிகளினால் சூப் தயாரித்து அதைக் குளிர வைத்து உண்பது கோடைக்குச் சிறந்தது என்கிறார் அமெரிக்காவின் மருத்துவர் மூர்ஸ். கூடவே காய்கறி சாலட் இருந்தால் மிகவும் நல்லது !
சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். மிக முக்கியமாய் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் பாட்டில் குளிர்சாதனங்கள், மற்றும் தற்போது புற்றீசலாய் கிளம்பியிருக்கும் “எனர்ஜி டிரிங் (Energy Drink)” சமாச்சாரங்கள்.
குளிர்சாதனப் பொருட்கள், பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள், இவையெல்லாம் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. உங்கள் பணத்தையும் உடல்நலனையும் அழிப்பதற்காக வண்ண வண்ண பாட்டில்களில் கண்ணைக் கவரும் விளம்பரங்களோடு வரும் பானங்களை தவிருங்கள். தண்ணீர் நிறைய அருந்துதலே சிறப்பானது.
நன்றாகப் பொரித்த உணவு வகைகளை ஒதுக்குங்கள். சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், சிக்கன் ஃபிரை வகையறாக்களை முழுவதுமாய் ஒதுக்குங்கள். மூன்று வேளை மூக்கு முட்ட உண்பதை விட நான்கைந்து தடவைகளாக கொஞ்சம் கொஞ்சமாய் உண்பதே கோடையில் சிறப்பானது.
‘ஐஸ் காபி’, ‘ஐஸ் டீ’ போன்ற பானங்கள் கோடை காலத்துக்கு உகந்ததல்ல. அவை எந்தக் காலத்துக்கும் உகந்ததல்ல என்பது வேறு விஷயம். எனவே அவற்றை விட்டு தள்ளியே நிற்பதே நல்லது. இருக்கவே இருக்கிறதே இளநீர், மோர், எலுமிச்சை பழச் சாறு போன்றவை !
செயற்கைஆடைகளை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான நிறத்திலான ஆடைகள் அணிந்தால் அவை உஷ்ணத்தை உடலுக்குள் ஈர்க்கும். அதனால் உடல் பாதிக்கும். இள நிறம் உஷ்ணத்தை நிராகரிக்கும். அதனால் இளநிற ஆடைகளையே அணிய வேண்டும்.

உணவுப் பழக்கத்தில் ஒழுங்கைக் கடைபிடித்தாலே கோடையில் வாடாமல் தப்பிக்கலாம்!!

மினரல் வாட்டரை வீட்டிலேயே தயாரிக்கலாம்
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, எதிர்காலத்தில் குடிநீரை காசு கொடுத்து வாங்கியாக வேண்டும் என்று யாரேனும் சொல்லியிருந்தால் நாம் வாய்விட்டுச் சிரித்திருப்போம். ஆனால்,  இன்று நகரங்களில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலுமே காசு கொடுத்து ‘கேன் வாட்டர்’ வாங்குகிறோம். ஒரு கேன் சில நூறுகளை செலவழித்து வாங்க வேண்டியிருக்கிறது. ஆயினும் அந்த கேனில் வரும் நீர் எப்படி தயாரிக்கப்பட்டது, எத்தனை நாளாக கேனில் அடைத்து வைக்கப்பட்டது என்பதெல்லாம் நமக்கு வெளிப்படையாக தெரிவதில்லை. அதைவிட இது நிச்சயமாக பாதுகாக்கப்பட்ட குடிநீர்தானா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.


சோடிஸ் என்பது ....


சூரிய ஒளி மூலம் தண்ணீரை சுத்திகரிக்கும் எளியமுறைகளை தான் சோடிஸ் (SODIS – Solar Water disinfection) என்கிறோம்.  சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த நீரியல் ஆய்வு நிறுவனமான ஏவாக், இந்த முறையை கண்டறிந்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது. ஏழை மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்த பல லட்சம் ஏழை மக்களுக்கு சோடிஸ் ஒரு வரப்பிரசாதம். நீரில் உருவாகும் உடல்நலத்துக்கு எதிரான நுண்கிருமிகளை இம்முறை பெரும்பாலும் அழித்துவிடுகிறது என்று பல்வேறு அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் (WHO), யூனிசெஃப் மற்றும் ரெட் க்ராஸ் நிறுவனங்கள் இம்முறையை மக்களுக்கு பரிந்துரைக்கின்றன.


எப்படி தயாரிப்பது?

சோடிஸ் முறை மிகவும் சுலபமானது. பெட் (PET) பாட்டில்கள் இதற்குப் போதுமானது. கண்ணாடி பாட்டில்களும் பயன்படுத்தலாம். ஆனால், சூரிய ஒளியை கண்ணாடி பாட்டில்களைவிட பெட் பாட்டில்கள் எளிமையாக கடத்தும். குளிர்பானங்கள் கூட பெட் பாட்டில்களில்தான் இப்போது விற்பனைக்கு கிடைக்கின்றன.  தரமான பெட் (PET) பாட்டில்கள் குறைந்த விலைக்கே கடைகளில் கிடைகின்றன. அதிகபட்சம் மூன்று லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட் பாட்டில்கள்தான் இம்முறைக்கு ஏற்றவை. வண்ணங்களில் கிடைக்கும் பெட் பாட்டில்கள் சூரிய ஒளி ஊடுருவ தடையாக இருக்கும். எனவே, வண்ணமற்ற பாட்டில்தான் சிறந்தது.


சோப்பு கொண்டு நன்கு கழுவப்பட்ட பெட் பாட்டிலில் குடிநீரை நிரப்பி, குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் நேரடியாக சூரிய ஒளி படும்படி வைத்துவிட்டால் போதும். சூரியக் கதிரில் வெளிப்படும் அல்ட்ரா வயலட் (Ultra Violet) கதிர்கள் செய்யும் மாயத்தால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் ரெடி. நீங்கள் காசு கொடுத்து கேன் வாட்டர் வாங்குபவராக இருந்தாலும், சோடிஸ் முறையைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கது.


மேகமூட்டமாக இருக்கும் நாட்களில் அடுத்தடுத்த நாட்களில் பாட்டிலை வெயிலில் காயவைக்க வேண்டும். தொடர்ச்சியாக மழை பொழியும் மழை நாட்களில் சோடிஸ் முறையை செயல்படுத்த முடியாது. அப்போது வானில் இருந்து பொழியும் நேரடி மழைநீரை சேகரித்து அருந்துவதே பாதுகாப்பானது.

சோடிஸ் முறை வீடுகளுக்கு மட்டுமே ஏதுவானது. அதிகளவிலான குடிநீரைப் பயன்படுத்தும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், அலுவலகங்களில் செயல்படுத்துவது கடினம். ஆனாலும் இங்கே புழங்கும் தனி மனிதர்கள் தமக்கென்று பிரத்யேகமாக பாதுகாக்கப்பட்ட குடிநீரை தயாரித்துக் கொள்ளமுடியும்.


நன்றி: புதிய தலைமுறை

-----------------------------------------------------------------------------------------


நட்பை விலைக்கு வாங்க முடியாது
தகுதியானவர்களுக்கு இலவசமாக வழங்கபடுகிறது...

------------------------------------------------------------------------------------------

 உங்களுக்கு இந்த வலைப்பூ பிடித்திருந்தால் உங்கள்
கருத்துரைகளை இட்டு செல்லவும்...


16 February 2012

10ஆம் வகுப்பு - பொது தேர்வு புதிய மாதிரி வினா விடை


பொது தேர்வு எழுத நேரம் நெருங்கி விட்டது ...


பத்தாம் வகுப்பு எழுத இருக்கும் உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு திருத்தபட்ட புதிய (சமச்சீர்) பொது தேர்வு மாதிரி வினா தாள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.தமிழ் முதல் தாள்
இங்கு கிளிக் செய்யவும்


தமிழ் இரண்டாம் தாள்
இங்கு கிளிக் செய்யவும்ஆங்கிலம் முதல் தாள்
இங்கு கிளிக் செய்யவும்ஆங்கிலம் இரண்டாம் தாள்
இங்கு கிளிக் செய்யவும்கணிதம்
இங்கு கிளிக் செய்யவும்அறிவியல்
இங்கு கிளிக் செய்யவும்சமூக அறிவியல்
இங்கு கிளிக் செய்யவும்


உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு தொலைகாட்சி, செல்போன், ரேடியோ இல்லாத அமைதியான சூழலை உருவாக்கி கொடுங்கள்...

அவர்களுடைய வாழ்க்கையை மாற்ற போகும் தருணம் இது தான் ....

உங்கள் வீட்டு பிள்ளைகள் தேர்வில் அதிக மதிப்பென் பெற்று வெற்றி பெற ஏகன் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.....

-----------------------------------------------------------------------------------------------
இந்த வலைப்பூ பிடித்திருந்தால் நீங்கள் கருத்துரைகளை பதிந்து விட்டு செல்லவும்
.-----------------------------------------------------------------------------------------------

15 February 2012

கேன்சர்: அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டியவைகள்நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:
 • ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை  கேன்சருக்கான செல் உருவாகிறது.
 • ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

14 February 2012

காதலர் தினம் தேவையா?

இந்த தினத்தில் இந்த கட்டுரை அவசியமானதாக இருக்கும் என்றே நம்புகிறேன்... நாம் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு நாம் எங்கே சென்று கொண்டிருக்கோம் என்பதை இந்த கட்டுரையின் மூலம் விளங்கிகொள்ளலாம் விபச்சாரத்தின் மறு பெயர் “காதல்”.உலகியல் மாற்றத்தில் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காணக் கிடைக்கிறது.

இதன் முக்கிய பகுதியாக ஒழுக்க சீர்கேட்டை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காகவே நாட்களும், வாரங்களும் பிரிக்கப்பட்டு அனாச்சாரங்கள் அதில் அரங்கேற்றப்படுகின்றன.

 • முத்தமிடுவோர் தினம்,
 • நிர்வாணமாக இருப்போர் தினம்,
 • இறுகக் கட்டியணைப்போர் தினம்,
 • ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம்,
 • பாலுணர்வைத் தூண்டுவோர் தினம் 

என்று நாளுக்கு நாள் தினங்களைப் பிரித்து வைத்து அதனைக் கொண்டாடி மகிழ்வதை ஒரு ஆரோக்கியமான செயல்பாடாக மேற்குலகு கருதுகின்றது.

கடந்த ஜனவரி மாதத்தில் நிர்வாணமாக இருப்போர் தினம் என்றொன்றை ரஷ்ய மக்கள் கொண்டாடியதும், ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் நிர்வாணமாக காட்சி தந்ததையும் மிகப் பெரிய சாதனையாக ஊடகங்கள் கொண்டாடின.

அதே ஜனவரி மாதத்தில் முழு உடம்பையும் காட்டிக் கொண்டு திரியும் சுமார் இருபத்தி ஐயாயிரம் பெண்களை ஓரிடத்தில் கூட்டி உலகிலேயே அதிகமான நிர்வாணிகள் ஒன்றினைந்த இடம் என்ற உலக சாதனையை(?) படைத்தமை ஒழுக்க விழுமியங்களை பேணிப் பாதுகாப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.

இது வரைக்கும் பல நாடுகளிலும் ஒழுக்க சீர் கேட்டை ஆதரிக்கும் தருதலைகள் முன்வைத்த ஒரு கோரிக்கைகளில் ஒன்றுதான் பாலியல் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். அதில் ஆண் பெண் வித்தியாசமின்றி பாலியல் தொடர்பான செய்திகள் செயல்பாட்டுடன் விபரிக்கப்பட வேண்டும் என்பது.

பல நாடுகளும் இந்தக் கோரிக்கையை கண்டு கொண்டாலும், வெளிப்படையாக அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடாமல் இருந்தன. ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் பாலியல் தொடர்பான கற்கைகள் மற்றும் செயல்பாட்டு விளக்கம் கொடுக்கும் கல்லூரியை ஒரு பெண் ஆசிரியர் (?) ஆரம்பித்துள்ளார்.

தாய்ப் பாலில் “ஐஸ் க்ரீம்”

குழந்தைக்காக தாயிடம் இருந்து கிடைக்கும் தாய் பாலை விற்பனைப் பொருளாக ஆக்கிய கொடுமையை தற்கால நவீன (?) யுகத்தில் நாம் பார்க்கக் கிடைக்கிறது எவ்வளவு பெரிய அவலம்?


ஆம் தாய்ப் பால் மூலம் செய்யப்பட்ட “ஐஸ் க்ரீம்” ஆஸ்த்ரேலியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. வெட்கக் கேட்டின் உச்சத்திற்கே மேற்கத்தேயம் சென்று விட்டது.

விபச்சாரத்திற்கு துணை போகும் பெற்றோர்கள்.

மேற்கு நாடுகளின் தற்போதைய நிலை எந்தளவுக்கு மோசமான காலாசாரத்தை தோற்றுவித்துள்ளது என்றால், ஒரு பெண் பிள்ளை சக மாணவர்களுடன் சுற்றுலா செல்கிறாள் என்றால் குறிப்பிட்ட பிள்ளையின் பெற்றோர் பிள்ளையில் கைப் பையில் (ஹேன் பேக்) கருத்தடை மாத்திரைகளை வைத்து அனுப்ப வேண்டும். இல்லாத பட்சத்தில் அரசாங்கம் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கும்.

நவீனம் என்ற பெயரில் ஒழுக்க நாகரீகம் கேள்விக் குறியாக்கப்படும் அவலம் நிகழ்வதை எத்தனை பெற்றோர்கள் உணர்கிறார்கள்?

கழிசடைகளுக்கு ஒரு தினமா?

கலாசார சீர்கேட்டுக்கு தினங்களை உண்டாக்கிய கழிசடைகள் சிலர் பெப்ரவரி 14ம் தேதியை காதலர்கள் தினம் என்று அழைக்கிறார்கள்.

கிறித்தவ மத போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

நமது இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாசாரம் என்ற பேயரில் ஒழுக்கம் இங்கும் கேள்விக் குறியாக்கப் படுகின்றது.

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு காதலியே இல்லையா? நீயேல்லாம் வாழ்ந்தே பயனில்லை என்று நண்பர்கள் (?) பேசிக்கொள்ளும் அளவிற்கு முக்கியமான விஷயமாக மாறி விட்டது.

கவலைக் குறிய விஷம் என்னவெனில் இஸ்லாமிய இளைஞர்களும், இளம் பெண்களும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வோ இஸ்லாமிய ஒழுக்க வாழ்வைப் பற்றிய நம் பெற்றோர்களிடத்திலும், பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.

மனிதத் தன்மையின் அடிப்படை வெட்கமே!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான், "நீ வெட்கப்படவில்லை என்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள்'' என்பதும். 

அபூ மஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள், (புகாரி – 3483)

வெட்க உணர்வு இல்லாதவர்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நபியவர்கள் சொல்வதிலிருந்து வெட்கம் என்ற உணர்வு எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அது மட்டுமன்றி வெட்கம் இஸ்லாமியனிடம் இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளிலும் ஒன்றாகும்.

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள். (நூல்: நஸயீ 3183)

மேற்கூறிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.

விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

செல்போனும் குழந்தைச் சீரழிவும்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளம் பெண்களிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.

ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளாக மாறாமல் தடுக்கலாம்.

இந்த காதல் என்ற சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. இதன் காரணமாக தற்காலத்தில் திருமணத்திற்கு முன் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் மாத்திரம் காதல் விகாரத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 (தினமணி – தமிழ்நாடு பதிப்பு 8-5-2010).

என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!

ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசிட் ஊற்றினான் போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம்.

மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர். 

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.

இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

பிப்ரவரி 14 ஆம் தேதியும் டிசம்பர் 1 ஆம் தேதியும் நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது (தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை).

அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாமல் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்


நன்மைகளை ஏவுவோம்!! தீமைகளை தடுப்போம்!!!


-------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள் 
-------------------------------------------------------------------------------------------------------------------------