நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

30 July 2012

ஒலிம்பிக் வரலாறு மற்றும் கடந்து வந்த பாதை

ஒலிம்பிக் வரலாறு:

கி.மு. 776. பண்டைய கிரேக்க நாட்டின் ஒலிம்பியா நகரில் நடந்த விளையாட்டுப் போட்டியே முதலாவது ஒலிம்பிக் போட்டி என வரலாறு பதிவு செய்துள்ளது. மன்னர் எஜியஸூடன் நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற ஹெர்குலிஸ், தமது வெற்றியின் அடையாளமாக ஒலிம்பியா என்னும் மைதானத்தை உருவாக்கியதோடு அங்கு விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தினார். கிரேக்க கடவுள் ஜீயஸூக்கு (Zeus) எடுக்கப்படும் திருவிழாக்காலங்களில் தான் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் 12க்கும் மேற்பட்ட கிரேக்க நகரங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அப்போதும் இந்தப் போட்டிகள், நான்கு வருடங்களுக்கு ஒருமுறைதான் நடத்தப்பட்டன. தடகள ஓட்டப்பந்தயம், மல்யுத்தம், குத்துச்சண்டை, குதிரையோட்டம், மற்றும் ராணுவ வீர விளையாட்டுகள் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. அங்குவசித்த அப்போலனியஸ் என்ற வரலாற்றாசிரியர் எழுதி வைத்த குறிப்புகள்தான் பண்டைய கால ஒலிம்பிக் போட்டிகள் பற்றி அறிய உதவுகிறது.

ஒலிம்பிக் போட்டிகள், எத்யேஸ் மன்னர் காலம்வரை நீடித்து வந்தது. ரோமாபுரி ஆட்சியாளர் தியோடோஷயஸின் விளையாட்டுகள் மீதான வெறுப்பினால், கி.மு 393ல், 203வது ஒலிம்பிக்ஸோடு பண்டைய ஒலிம்பிக்ஸுக்கு ஒரு முடிவு கட்டப்பட்டது.
நவீன ஒலிம்பிக் போட்டிகள்:

அடுத்த 1500 வருடங்களுக்கு ஒலிம்பிக் போட்டிகளே நடக்கவில்லை. கி.பி. 1894ல் கூபர்ட்டின் என்ற பிரெஞ்சுக்காரர், டர்பனில் விளையாட்டு ஆர்வலர்களை ஒன்று திரட்டினார். நவீன ஒலிம்பிக் போட்டிகள் இந்த இடத்திலிருந்து ஆரம்பித்தன. புராதன கால ஒலிம்பிக்ஸ் போலவே நவீன ஒலிம்பிக் போட்டிகளும் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1896 ஏப்ரல் 6-ல் கிரேக்கத்தில் உள்ள ஏதென்ஸ் மைதானத்தில், முதல் நவீன ஒலிம்பிக் போட்டியை மன்னர் ஜார்ஜ் தொடக்கி வைத்தார். இந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட வில்லை.

தடகளம், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ் என 43 போட்டிகள் நடைபெற்றன. கி.மு 490ல், நடந்த மாரத்தான் போரில் வென்ற வெற்றிச் செய்தியை மராத்தான் நகரிலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள ஏதென்ஸுக்கு ஓடி வந்து சொன்ன கிரேக்க வீரர், மகிழ்ச்சியான செய்தி, தோழர்களே! நாம் வென்றோம்!" என்று கூறி, உயிர் துறந்தார். இவருடைய நினைவாக மாரத்தான் என்ற ஓட்டப்பந்தயமும் சேர்க்கப்பட்டது. முதல் பரிசாக வெள்ளிப் பதக்கமும் இரண்டாவது பரிசாக வெண்கலப் பதக்கமும் அளிக்கப்பட்டன.

இரண்டாவது ஒலிம்பிக்ஸில் (பாரிஸ், 1900) கிரிக்கெட், புறாவைத் துப்பாக்கியால் சுடுதல் போன்ற விளையாட்டுகள் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டு பிறகு அடுத்த ஒலிம்பிக்ஸிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன. மூன்றாவது ஒலிம்பிக்ஸிலிருந்து (செயிண்ட் லூயிஸ், 1904) முதலில் வெற்றி பெறுபவர்களுக்குத் தங்கப் பரிசு கொடுக்கப்பட்டது. 1896 முதல் 2008 வரை 29 ஒலிம்பிக் போட்டிகள் நடை பெற்றுள்ளன. உலகப் போர் காரணமாக 1940, 1944 ஆண்டுகளில் ஒலிம்பிக்ஸ் நடக்கவில்லை.

ஐந்து வளையங்கள்:

அனைத்து மக்களிடையே விளை யாட்டு நட்புறவைக் குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டவை - ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்ட ஐந்து வளையங்கள். இந்த 5 வளையங்களும் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் (வட மற்றும் தென்) அமெரிக்கா எனும் ஐந்து கண்டங்களைக் குறிப்பிடுவதாகும். ஒவ்வொரு வண்ணமும் வெவ்வேறு நிறமுடையவை. அவையாவன நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை மற்றும் சிகப்பு.

ஒலிம்பிக் தீபம்:

பழங்கால மற்றும் நவீன ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடர்பை உணர்த்தும் ஜோதியாக ஒலிம்பிக் தீபம் இருக்கிறது. ஒலிம்பிக்ஸ் தீப்பந்தம் கிரேக்கத்தில் உள்ள ஒலிம்பியா நகரில் சூரியக் கிரணங்களால் பற்ற வைக்கப்பட்டு, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாட்டுக்கு எடுத்து வரப்படுகிறது.

ஒலிம்பிக் வரலாற்றுத் துளிகள்:
 • 1936ல் ஜெர்மனியில் ஹிட்லர் மேற்பார்வையில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பின அத்லெட் வீரரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார். தங்க வென்ற அத்தனை பேரையும் பார்த்துப் பேசிய ஹிட்லர் ஜெஸ்ஸி ஓவன்ஸை மட்டும் கண்டு கொள்ளவேயில்லை. ஓவன்ஸுக்கு ஏற்பட்ட அவமானத்தால் கறுப்பர்கள் அடைந்த வலி 1968 மெக்ஸிகோ ஒலிம்பிக்ஸில் வெளிப்பட்டது. 200மீ ஓட்டப் பந்தயத்தில் கறுப்பின அமெரிக்கர்களான ஸ்மித்தும் கார்லோஸும் முறையே தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள். பரிசு வாங்க வரும்போது இருவரும் கறுப்புப் பட்டையை அணிந்து, அமெரிக்க தேசிய கீதம் ஒலித்தபோது கறுப்பு க்ளவுஸ் அணிந்த கைகளை உயர்த்திக் காட்டி தங்கள் கோபத்தை உலகுக்குக் காட்டினார்கள்.
 • 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸ் போட்டியின்போது, ரஷ்ய ராணுவம் ஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்ததைக் கண்டித்து மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகியது அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும்.. இந்த போட்டியில் 80 நாடுகள் மட்டுமே பங்கெடுத்தன,
 • 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில், மாஸ்கோ ஒலிம்பிக்கை (1980) புறக்கணித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சோவியத் யூனியனும் அதன் 13 தோழமை நாடுகளும் அமெரிக்கா ஒலிம்பிக்கை புறக்கணித்தன. அதற்கு ரஷ்யா சொனன காரணம் தன் நாட்டு வீரர்களின் பாதுகாப்பில் சந்தேகங் கள் இருக்கின்றன என்று.
 • 1988 சியோல் ஒலிம்பிக்ஸில், 1920-ல் ஏற்றப்பட்ட கொடியைதான் 1984-ம் ஒலிம்பிக் வரை பயன்படுத்தினர்.இந்த ஒலிம்பிக்கில் தான் பழைய கொடி மாற்றப்பட்டது. புதிய கொடி ஏற்றப்பட்டது. டேபிள் டென்னிஸ் முதன் முறையாக நடத்தப்பட்டது,
 • 1992 ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் 25வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. சோவியத் யூனியன் சிதறிய நிலையில், ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் சேர்ந்து "ஒருங்கிணைந்த அணி' என்ற பெயரில் பங்கேற்றன. மேற்கு, கிழக்கு ஜெர்மனி இணைந்த நிலையில், ஒன்றுபட்ட ஜெர்மனியாக களமிறங்கியது. 32 ஆண்டு தடைக்கு பின் தென் ஆப்ரிக்கா பங்கேற்றது சிறப்பம்சம். துவக்க விழாவில் மாற்றுத்திறனாளியான அன்டோனியோ ரிபல்லோ மிகவும் வித்தியாசமாக அம்பு மூலம் ஜோதியை ஏற்றி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார்
 • 1996 ஏதென்சில் ஒலிம்பிக்ஸில், 1896ல் நவீன ஒலிம்பிக் துவங்கியது. இதன் அடிப்படையில் அமெரிக்காவின் அட்லாண்டாவில் 1996ல் நடந்த 26வது ஒலிம்பிக், நூற்றாண்டு போட்டியாக கொண்டாடப்பட்டது. முதல்முறையாக பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை (10,320) ஐந்து இலக்கை தொட்டது. அமெரிக்க அதிபர் கிளிண்டன் போட்டிகளை துவக்கி வைத்தார். குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார். முதல் 8 நாட்கள் போட்டிகள் சிறப்பாக நடந்த நிலையில், 9வது நாளில் ஒலிம்பிக் நூற்றாண்டு பார்க்கில் "பைப்' குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். 111 பேர் காயமடைந்தனர். 
 • 2000 ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 27 வது ஒலிம்பிக் போட்டி மிக பிரமாண்டமாக நடந்தது. சுமார் 10,651 வீரர், வீராங்கனைகள் பல்வேறு வகையான போட்டிகளில் பங்கேற்றனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் உறுப்பினராக உள்ள 200 நாடுகளில், 199 நாடுகள் பங்கேற்று சாதனை படைக்கப்பட்டன. தடை காரணமாக ஆப்கானிஸ்தான் மட்டும் பங்கேற்கவில்லை
  ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக பளுதூக்குதல் பிரிவில் பெண்கள் பங்கேற்றனர். இந்த வாய்ப்பை சூப்பராக பயன்படுத்தினார் ஆந்திராவை சேர்ந்த "இரும்பு பெண்' கர்ணம் மல்லேஸ்வரி. ஏற்கனவே, உலக சாம்பியன், ஆசிய சாம்பியன் பட்டங்களை வென்றிருந்த இவர், சிட்னியில் மீண்டும் திறமை நிருபித்தார். 69 கி.கி., எடைப்பிரிவில் அசத்திய மல்லேஸ்வரி வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற மகத்தான சாதனை படைத்தார்.
  சிட்னி 2000, ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் எத்தியோப்பியாவின் கெசாக்னி அபேரா, தெஸ்பாயி டோலா மற்றும் கென்யாவின் எரிக் வெனைனா மத்தியில் பலத்த போட்டி நிலவியது. மிகவும் களைப்படைந்த டோலா தன்னால் வெனைனாவை முந்த இயலாது என்பதை புரிந்து கொண்டார். உடனே சக வீரரான அபெராவை அழைத்து இன்னும் வேகமாக ஓடும்படி கேட்டுக் கொண்டார். 22 வயதான அபேராவும் அதிவேகமாக ஓடி தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் மிக இளம் வயதில் மாரத்தானில் தங்கம் வென்றவர் என்ற பெருமையை அபேரா பெற்றார்.
 • 2004 ஏதேன்ஸ், ஒலிம்பிக் பிறந்த பூமியான கிரீஸ் தலைநகர் ஏதென்சில் 28வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. 201 நாடுகளை சேர்ந்த 10,625 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பாரம்பரிய கிரேக்க கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக, துவக்க விழா அமைந்தது. ஜோதியை கிரீஸ் வீரர் நிக்கோலஸ் கக்லமனாகிஸ் ஏற்றி வைத்தார்.
  துப்பாக்கி சுடுதல் "டபுள் டிராப்' பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்  ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். இதன் மூலம் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதலாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணியாற்றிய இவர், காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷப் போட்டிகளில் திறமையை நிருபித்தார். ஏதென்ஸ் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்று கோடிக்கணக்கான இந்திய உள்ளங்களை மகிழச்செய்தார்.
 • 2008 சீனத்தலைநகர் பீஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்தியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. முக்கிய போட்டிகள் நடந்த பீஜிங் தேசிய மைதானம் பறவை கூடு போல அழகாக வடிவமைக்கப்பட்டது. "டன்' கணக்கில் இரும்பு பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த "பேர்ட்ஸ் நெஸ்ட்' மைதானம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சீன ஜிம்னாஸ்டிக் வீரரான லீ நிங், அரங்கத்தின் உயரமான பகுதியில் இருந்து கயிறு மூலம் பறந்து வந்து ஜோதியை ஏற்றினார். சீனா 51 தங்கப்பதக்கத்துடன் முதலிடத்தையும், அமெரிக்கா 36 தங்கத்துடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
  10 மீ., துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற சேர்ந்த அபினவ் பிந்த்ரா(29), தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் சுஷில் குமார், குத்துச்சண்டையில் விஜேந்தர் ஆகியோர் வெண்கலம் வென்றனர். 2008 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 1 தங்கம், 2 வெண்கலம் வென்று 50வது இடம் பிடித்தது.
  எட்டு தங்கம் வென்ற அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ஸ் மிக அதிகமான தங்கம் வென்ற நட்சத்திர வீரர். ஆப்கனிஸ்தான், தஜிகிஸ்தான், பஹ்ரைன், மொரிசியஸ், சூடான், டோகா போன்ற நாடுகள் வரலாற்றின் முதல் ஒலிம்பிக் பதக்கம் பெற்று சாதனை படைத்தன.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்...

இந்த பிளாக் பற்றிய உங்கள் கருத்துக்களை கூறுங்கள்...

28 July 2012

ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்ஒலிம்பிக் போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு வழங்கப்பட உள்ள பதக்கங்கள் எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை ... 


தினம் ஒரு தகவல்: பிரிட்ஜ் பராமரிப்பு


தினம் ஒரு தகவல் பகுதியில் இன்று நாம் பார்க்க போவது. வீட்டில்  உபயோகப்படுத்தும் பிரிட்ஜை எவ்வாறு பராமரிக்கலர்ம் என்பதை பற்றி கொஞசம் தெரிந்து கொள்ளலாம்..
 1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
 2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.
 3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.
 4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
 5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.
 6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
 7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
 8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.
 9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
 10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.
 11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
 12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
 13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்
 14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.
 15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.
 16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.
 17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.
 18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.
 19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
 20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்..

இந்த பிளாக் பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...


27 July 2012

டி.என்.பி.எஸ்.சி (VAO) வரலாறு (வாஸ்கோடாகாமா முதல் இந்தியா சுதந்திரம் வரை)ந்தியா சுதந்திர போராட்ட வரலாறு கால வரிசைப்படி தொகுக்கப் பட்டுள்ளது. வரலர்ற்றினை கால வரிசைப்படி ஞாபகம் வைத்துக் கொண்டால் இலகுவாக மறந்து விடாது... 

1498 - வாஸ்கோடகாமா இந்திய வருகை
1600 - இந்தியாவில் வாணிபம் செய்ய கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி
1615 - ஜஹாங்கீர் அரண்மனைக்கு கம்பெனியார் வருகை
1757 - பிளாசி யுத்தம்
1770 - வங்காளப் பஞ்சம், சன்னியாசி எழுச்சி
1779 - கட்டபொம்மன் தூக்கு
1806 - வேலூர் கோட்டை புரட்சி
1857 - முதல் இந்திய சுதந்திரப் போர்
1858 - பிரிட்டிஷாரின் நேரடி அதிகாரம்
1877 - விக்டோரியா மகாராணி டில்லியில் முடிசூட்டல்
1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
1905 - கர்சன் பிரவுவால் கொண்டு வரப்பட்ட வங்காளப் பிரிவினை
1906 - முஸ்ஸீம் லீக் உதயம்
1908 - திலகர், வ.உ.சி. கைது
1911 - டெல்லி தர்பார், டெல்லி இந்தியாவின் தலைநகரானது, ஆஷ் கொலை, வங்க பிரிவினை ரத்து
1913 - கத்தர் கட்சி உதயம்
1914 - முதல் உலகப் போர் ஆரம்பம்
1915 - காந்தியின் இந்திய வருகை
1916 - லக்னோ ஒப்பந்தம், கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடுதல்
1918 - முதல் உலகப்போர் முடிவு
1919 - ஜாலியன் வாலாபாக் படுகொலை, ரௌலட் சட்டம்
1920 - கிலாபாத், ஒத்துழையாமை இயக்கம் துவக்கம் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் உதயம்
1921 - மாப்ளர் எழுச்சி
1922 - சௌரி சௌரா மக்கள் எழுச்சி, ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்படல்
1925 - கான்பூர் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
1927 - சைமன் குழு புறக்கணிப்பு (அதில் இந்தியர் யாரும் இல்லாததால்)
1928 - சைமன் கமிஷன் வருகை, லாலா லஜபதிராய் இறப்பு
1929 - டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங்கின் குண்டு வீச்சு, லாகூர் காங்கிரஸில் முழுசுதந்திரத்திற்கான தீர்மானம், ஆர்வாம் பிரபு உடன்படிக்கை
1930 - உப்பு சத்தியாக்கிரகம், முதல் வட்ட மேஜை மாநாடு, சட்டமறுப்பு இயக்கம், சிட்டகாங் புரட்சி
1931 - பகத்சிங் தூக்கிடப்படல், காந்தி இர்வின் ஒப்பந்தம், இரண்டாம் வட்டமேஜை மாநாடு (காந்தி பங்கேற்பு)
1934 - அகில இந்திய கிஸான் சபை, அகில இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உதயம்
1935 - இந்திய அரசாங்க சட்டம் கொண்டுவரப்பட்டது
1937 - பார்வர்டு பிளாக் கட்சி உதயம்
1939 - செப் 1 ஆம் நாள் இரண்டாம் உலகப் போர் துவக்கம்
1940 - தனிநபர் சத்தியாக்கிரகம்
1942 - கிரிப்ஸ் துதுக்குழு இந்தியா வருகை, வெள்ளையனே வெளியேறு தீர்மானம்
1943 - நேதாஜி இந்திய ராணுவம் அமைத்து சுதந்திர இந்தியா பிரகடனம் செய்தல்
1946 - கப்பற்படை எழுச்சி
1947 - இந்தியா சுதந்திரமடைதல். இந்தியா மற்றும் பாகிஸ்தான் தனித்தனியாக டோமினியன் அந்தஸது பெற்றது,

இது உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என என்னுகிறேன்..

மேலும் அதிகமான தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்நாடு பாட புத்தகங்களை வாசியுங்கள்....

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்... 

இந்த பிளாக் பற்றி உங்கள் கருத்துரைகளை சொல்லுங்கள்...

24 July 2012

டி.என்.பி.எஸ்.சி. (VAO) பொது அறிவு-பாகம் 1

 • விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் விலங்கு நாய்.
  அதன் பெயர் லைகா (Laika) அதை அனுப்பிய நாடு ரஷ்யா
 • பசுவிற்கு வியர்வைச் சுரப்பிகள் அதன் மூக்கில் இருக்கும்
 • யானையின் நாசி, மேலுதட்டின் மாறுபட்ட வடிவமே
  துதிக்கை
 • யானையின் வெட்டுப்பற்களே தந்தங்கள்
 • உலகின் மிகப்பெரிய பாம்பான அனகோண்டா முட்டையிடாது,
  குட்டி ஈனும்
 • மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன
 • ஒரு புள்ளி இடத்தை 70,000 அமீபாக்களால் நிரப்ப முடியும்
 • ஒலிச் செறிவை அளக்கும் அலகு
  டெசிபெல்
 • விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்
  கல்பனா சாவ்லா (ஆண்டு 1997)
 • இயற்கை இழைகள் எனப்படுவது
  பருத்தி, சணல், கம்பளி
 • ரோபோ(Robot)வின் தந்தை யார்?   ஐசக் அசிமோ
 • வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர்
  ஜேம்ஸ் ஜீல்
 • தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் இடங்கள் 
  கயத்தாறு (திருநெல்வேலி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி)
 • தொலைநோக்கியைக் கண்டுபிடித்தவர்
  கலிலியோ (
  ஆண்டு 1609)
 • சூரிய ஒளி புவியை வந்தடைய ஆகும் கால்ம்
  8 நிமிடங்கள் 20 விநாடிகள்
 • ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது?
  பாலைவனத்தில்
 • வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது?
  வைட்டமின் ‘பி
 • வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?
  சீனா
 • பட்டுப் புழு உணவாக உண்பது?
  மல்பெரி இலை
 • உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
  கியூபா
 • மகாவீரர் பிறந்த இடம் எது?
  வைஷாலி
 • சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
  பார்மிக் அமிலம்
 • 'மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?
  அரிஸ்டாட்டில்.
 • காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
  பென்சிலின்.
 • உலக அமைதிக்கான நோபல் பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?
  நார்வே.
 • போர்க்களம் என வர்ணிக்கும் நாடு எது?
  பெல்ஜியம்.
 • உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
  அக்டோபர் 30
 • சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?
  ஜப்பான்

நட்புடன்
M.Y. Noor Mohammed

இன்ஷா அல்லா அடுத்த பதிவில் சந்திக்கிறேன்....

இந்த பிளாக் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்...

21 July 2012

டி.என்.பி.எஸ்.சி-VAO-பெரும் பாலைவனங்கள்-பாகம் 2


பாலைவனம்


நாம் வாழும் இந்த உலகத்தில் மனிதன் வசிக்க முடியாத பல பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் பாலைவனங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாமே.


18 July 2012

டி.என்.பி.எஸ்.சி-VAO (நூல்கள்-நூலாசிரியர்கள்)-பாகம்-1TNPSC பொது தமிழ் பற்றி கொஞ்ம் கற்று கொள்வோம்.. அரசு வேலைக்காக தயார் படுத்தி கொள்ளும் சகோதரர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்


பாரதியார்
குயில்பாட்டு
கண்ணன் பாட்டு
பாப்பா பாட்டு
பாஞ்சாலிசபதம்
ஞானரதம்
அக்னி குஞ்சு
பூலோக ரம்பை
சந்திரிகையின் கதை
புதியஆத்திச்சூடி
சீட்டுக் கவி
..............................................................................
நா. பார்த்த சாரதி
தமிழ் இன்பம்
ஆற்றங்கரையினிலே
ஊரும் பேரும்
குறிஞ்தி மலர்
பொன் விலங்கு
சமுதாய வீதி
துளசி மாடம்
..............................................................................
கல்கி
பொன்னியின் செல்வன்
சிவகாமியின் சபதம்
பார்த்திபன் கனவு
கள்வனின் காதலி
அலையோசை
தியாக பூமி
மகுடபதி
..............................................................................
தி. ஜானகிராமன்
மோகமுள்
அமிர்தம்
அம்மா வந்தாள்
மரப்பசு
நளபாகம்
மலர்மஞ்சம்
உயிர்த்தேன்
அன்பே ஆரமுதே
செம்பருத்தி
..............................................................................
 ரா.பி. சேதுப்பிள்ளை
தமிழின்பம்
திருவள்ளுவர் நூல் நயம்
ஆற்றங்கரையினிலே
கடற்கரையினிலே
கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்
தமிழ் விருந்து
ஊரும் பேரும்
தமிழர் வீரம்
வேலின் வெற்றி
தமிழ்நாடு நவமணிகள்
வேலும் வில்லும்
..............................................................................
பாரதிதாசன்
குடும்ப விளக்கு
பாண்டியன் பரிசு
இருண்ட வீடு.
பிசிராந்தையார்
அழகின் சிரிப்பு
குறிஞ்சித் திரட்டு
இளைஞர் இலக்கியம்
எதிர்பாராத முத்தம்
நல்ல தீர்ப்பு
.............................................................................
அருணகிரிநாதர்
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
திருப்புகழ்
திருவகுப்பு
சேவல் விருத்தம்
மயில் விருத்தம்
வேல் விருத்தம்
திருவெழ கூற்றிகை
.............................................................................
அறிஞர் அண்ணா
ஓர் இரவு
வேலைக்காரி
ரங்கோன் ராதா
நீதித் தேவன் மயக்கம்
பார்வதி பி.ஏ.
கண்ணீர் துளிகள்
பிடிசாம்பல்
கலிங்கராணி
தசாவதாரம்
நல்ல தம்பி
............................................................................
திரு.வி.கல்யாணசுந்தரனார்
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
முருகன் அல்லது அழகு
சீர்தீருத்தம் அல்லது இளமை விருந்து
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைக்துணை
சைவத்திறவு
சமரச தீபம்
தமிழ் தென்றல்
இந்தியாவும் விடுதலையும்
.......................................................................
கலைஞர் மு.கருணாநிதி
குறளோவியம்
சங்கத்தமிழ்
நெஞ்சுக்கு நீதி
பொன்னர் சங்கர்
ரோமாபுரி பாண்டியன்
தூக்குமேடை
மணி மகுடம்
.............................................................................
ஜெயகாந்தன்
உன்னைப்போல் ஒருவன்
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
கல்லுக்குள் ஈரம்
அக்னி பிரவேசம்
யுவசாந்தி
.............................................................................
வைரமுத்து
தண்ணீர் தண்ணீர்
கொடி மரத்தின் வேர்கள்
கள்ளிகாட்டு இதிகாசம்
.............................................................................
கோமல் சுவாமிநாதன்
பெருமாளே சாட்சி
ஒரு இந்தியக்கனவு
யுத்தகாண்டன்
ராஜபரம்பரை
அலைகாற்று
குமார விஜயம்
.............................................................................
அடுத்த பயனுள்ள பதிவில் சந்திக்கிறேன்,,,,
உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லுங்கள்,,12 July 2012

காலத்தால் அழியாத பழமொழிகள்

great words

பழங்கால பழமொழிகள் இன்றும் நடைமுறையில் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இன்று பார்ப்போம்.

 • அகத்தினழகு முகத்தில் தெரியும்
 • அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்
 • அடியாத மாடு படியாது
 • அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது
 • அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
 • அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
 • அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும்
 • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
 • அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்
 • அரசன் குடுமியையும் அம்பட்டன் பிடிப்பான்
 • அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன
 • அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்
 • ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
 • ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்
 • ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்
 • ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற
 • ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
 • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது
 • ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை
 • ஆழம் தெரியாமல் காலை விடாதே
 • ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை
 • ஆறிலும் சாவு நூறிலும் சாவு
 • ஆனைக்கும் அடிசறுக்கும்
 • இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்
 • இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை
 • உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது
 • உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
 • எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்
 • எறும்பூரக் கல்லும் தேயும்
 • ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்
 • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
 • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
 • கடுகு சிறிதானாலும் காரம் பெரிது
 • கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்
 • கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
 • கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
 • கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல
 • கழுதை அறியுமா கற்பூர வாசனை?
 • கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்
 • கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை
 • காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
 • காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்
 • காகம் திட்டி மாடு சாகாது
 • காய்த்த மரம்தான் கல்லடிபடும்
 • காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்
 • காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
 • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
 • குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு
 • குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்
 • குரைக்கிற நாய் கடிக்காது
 • கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு
 • கொல்லன் தெருவில் ஊசி விற்பது போல்
 • கோழி மிதித்துக் குஞ்சு சாகாது
 • கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்
 • சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல
 • சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்
  • சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது
  • சுவரிருந்தால் தான் சித்திரம் வரையலாம்
  • தடியெடுத்தவன் தண்டக்காரன்
  • தம்பியுள்ளான் படைக்கஞ்சான்
  • தன் வினை தன்னைச் சுடும்
  • தனிமரம் தோப்பாகாது
  • தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன
  • தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு
  • தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
  • நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்
  • நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை
  • நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்
  • நிறைகுடம் தளும்பாது
  • பசி வந்தால் பத்தும் பறந்திடும்
  • பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்
  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது
  • பனை மரத்தடியில் பால் குடித்தது போல
  • பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்
  • பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்
  • புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது
  • பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்
  • பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்
  • போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
  • மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
  • மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்
  • மின்னுவதெல்லாம் பொன்னல்ல
  • முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு
  • முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல
  • முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்
  • முடியுள்ள சீமாட்டி எப்படியும் முடிப்பாள்
  • மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்
  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்
  • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
  • விரலுக்குத் தக்கதே வீக்கம்
  • விளையும் பயிரை முளையிலே தெரியும்
  • வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்
  • வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்
  • வெளுத்ததெல்லாம் பாலல்ல
  • பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்
  • பூவிற்றகாசு மணக்குமா?
  • பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்
  • பேராசை பெருநட்டம்
  • பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
  • வேலிக்கு ஓணான் சாட்சி
  • தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்
  • சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும?
  ----------------------------------------------------------------------------------------
  உங்களுக்கு இந்த வலைப்பூ பிடித்திருந்தால் 
  உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லலாமே,,

  -----------------------------------------------------------------------------------------


  11 July 2012

  TNPSC குரூப் IV (07-07-2012) கேள்விகளுக்கான விடைகள்


  07-07-2012 நடைப்பெற்ற TNPSC Group IV 2012 (07-07-2012) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம்.. 


  PDF வடிவில் இருக்கும் இந்த விடைகளை, நீங்கள் எழுதியுள்ள விடைகளோடு ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள்.. 

  தேர்வுத்தாளின் விடைகளைப் பெற இந்த இணைப்பில் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.....


  1
  GENERAL KNOWLEDGE
  2. GENERAL TAMIL
  3. GENERAL ENGLISH

  4.  HINDU RELIGIOUS (SAIVAM & VAINAVAM) 


  மூன்று பகுதிகளுக்கான வினா விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. டிக் மார்க் செய்துள்ள விடைகள் சரியானதாக இருக்கும்..

  வெற்றிப் பெற அனைவருக்கும் வாழ்த்துகள்.. சில தளங்கள் தங்களது ட்ராபிஃக் ரேங்கை அதிகப்படுத்தும் நோக்குடன் நேற்றிலிருந்து தவறான தகவல்களை அளித்து வருகிறது.. அரசு இணையதளத்தை தவிர மற்ற தளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...

  அடுத்து வரும் TNPSC குரூப் II மற்றும் VAO தேர்விற்கு தயாராகுங்கள்...


  வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்...


  ----------------------------------------------------------------------------------------
  உங்களுக்கு இந்த வலைப்பூ பிடித்திருந்தால் 
  உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லலாமே,,

  -----------------------------------------------------------------------------------------

  10 July 2012

  பயனுள்ள மருத்துவ குறிப்புகள்-பாகம் I

  மருத்துவம்

  • சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளான வர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
  • வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்... உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.
  • நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.
  • காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.
  • வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்... வெறும் கொய்யா இலைகளை மெல்வது தான்.
  • சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.
  • வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
  • நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.
  • உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.
  • மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்,
  ----------------------------------------------------------------------------------------
  உங்களுக்கு இந்த வலைப்பூ பிடித்திருந்தால் 
  உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லலாமே,,

  -----------------------------------------------------------------------------------------

  09 July 2012

  தெரிந்து கொள்ள வேண்டிய தினங்கள்


  உலகின் முக்கிய தினங்கள்
  ஜனவரி
  26
   உலக சுங்க தினம்
  ஜனவரி
  30
   உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
  பிப்ரவரி
  14
   உலக காதலர் தினம்
  மார்ச்
  08
   உலக பெண்கள் தினம்
  மார்ச்
  15
   உலக நுகர்வோர் தின