நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

30 August 2012

கண்டுபிடிப்பாளர்களின் வரலாறு -இன்று ஆல்பர்ட் ஐஸ்ட்டீன்

albert einstein
Albert Einstein
1945ம் ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் தேதி. உலக வரலாற்றில் ஒரு கறுப்பு தினம். அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று ஐப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னமானது ஹிரோஷிமா. மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாகக் கிழிந்தது நாகாசாகி. ஆயிரமாயிரம் அப்பாவி உயிர்கள் அநியாயமாகப் பலியான அந்தச் செய்தி கேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மியழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்துச் சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு உற்பத்தியாவதற்கு அடிப்படையாக இருந்தது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நன்மைக்காகவே பயன்பட வேண்டும் என்று நம்பிய அவர்தான் இருபதாம் நூற்றாண்டின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.

1879ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி ஜெர்மனியில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார் ஐன்ஸ்டைன். அவர் பிறப்பிலேயே ஓர் மேதை கிடையாது. உண்மையில் அவர் மூன்று வயது வரை பேசாததால் அவருக்குக் கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். வகுப்பிலும் அவர் சராசரி மாணவராகத்தான் இருந்தார்.

அவருக்கு அறிவியல் மீது ஆர்வம் பிறந்த போது நான்கு வயது. ஒருமுறை அவருக்கு compass எனப்படும் திசை காட்டியைப் பரிசாகத் தந்தார் அவரது தந்தை. அதன் உள் இருந்த காந்தம் அவரை அறிவியல் உலகை நோக்கி ஈர்த்தது.

பள்ளியில் சொந்தமாகவே calculus என்ற கணிதக் கூறைக் கற்றுக் கொண்டார் ஐன்ஸ்டைன். பின்னர் சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினார். அவரது கேள்விகளுக்குப் பதில் தர முடியாமல் ஆசிரியர்கள் திகைத்ததாகவும் அடுத்து என்ன கேட்கப் போகிறார் என்று அஞ்சியதாகவும் ஒரு குறிப்பு கூறுகிறது.

சிறு வயதிலிருந்தே வார்த்தைகளாலும் சொற்களாலும் சிந்திப்பதைக் காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன். அவருக்கு வயலின் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. இசை மேதை மோசாட்டின் தீவிர ரசிகராக இருந்த அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்குத் திறமை இருந்தது.

அவருக்குப் பதினைந்து வயதான போது இத்தாலியின் மிலான் நகருக்கு அவர்கள் குடியேறினர். அங்கு அவரது தந்தை வர்த்தகத்தில் நொடித்துப் போனதும் ஸ்விட்சர்லந்துக்குச் சென்றார் ஐன்ஸ்டைன். புகழ் பெற்ற Swiss Federal Polytechnic நுழைவுத் தேர்வில் அவர் தோல்வியடைந்தார். ஆனால் அடுத்த ஆண்டு அவரைச் சேர்த்துக் கொண்டது அந்தப் பலதுறைத் தொழிற் கல்லூரி. அதிலிருந்து தேர்ச்சி பெற்றதும் ஸ்விஸ் குடியுரிமை பெற்றார் ஐன்ஸ்டைன்.

அவருக்குக் கிடைத்த முதல் வேலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்களை பதிவு செய்து அவற்றை ஆராய்வது. அந்த வேலையில் அதிக ஓய்வு நேரம் இருந்ததால் அவர் சொந்தமாகப் பல ஆராய்ச்சிகளைச் செய்ய உதவியாக இருந்தது. ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதத் தொடங்கினார். 1905ம் ஆண்டு Zurichபல்கலைக் கழகத்தில் அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. 

கண்ணுக்குப் புலப்படாத அணுவைப் பற்றியும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப் பற்றியும் ஆராய்ந்த ஐன்ஸ்டைன் Theory of Relativity என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதுதான் சார்பியல் கோட்பாடு. அந்தக் கோட்பாடு மூலம் அவர் உவகுக்குத் தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல் வாய்ப்பாடுதான் E = mc(square). விஞ்ஞான உலகத்திற்கே அது ஒரு அடிப்படை மந்திரமாகக் கருதப்படுகிறது. அந்தக் கண்டுபிடிப்பைச் செய்த போது அப்போது அவருக்கு வயது 26தான்.

1921ம் ஆண்டு அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்க விரும்பியது நோபல் குழு. ஆனால் சார்பியல் கோட்பாடு குறித்து அப்போது விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அதற்காக அல்லாமல் photo electric effect என்ற கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

முதலாம் உலகப் போரில் ஜெர்மனி கலந்து கொண்டதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார் ஐன்ஸ்டைன். பின்னர் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த போது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வரும் என்று உணர்ந்த அவர் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்.

1939ம் ஆண்டு வேறு சில இயற்பியல் வல்லுநர்களுடன் இணைந்து அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதினார் ஐன்¢ஸ்டைன். அப்போது ஹிட்லரின் ஆட்சியில் இருந்த ஜெர்மனிக்கு அணுகுண்டைத் தயாரிக்கும் வல்லமை இருப்பதாகவும் வெகுவிரைவில் அணுகுண்டைத் தயாரிக்கக் கூடும் என்றும் அதில் எச்சரித்திருந்தார் ஐன்ஸ்டைன். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று. ஜெர்மனி அணுகுண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பினார் ஐன்ஸ்டைன். ஆனால் ரூஸ்வெல்ட் நிர்வாகமோ ஐன்ஸ்டைனுக்குத் தெரியாமலேயே சொந்தமாக அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. அதன் விளைவுதான் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உலக வரலாற்றை ஒரு கணம் இருட்டடிப்பு செய்த நாகாசாசி ஹிரோஷிமா சம்பவம்.

E = mc(square) என்ற மந்திரம்தான் அணுகுண்டின் அடிப்படையாக அமைந்தது. அந்தத் தவிப்பு இறப்பு வரை ஐன்ஸ்டைனை உறுத்தியிருக்கும். ஆனால் அந்த ஒரு கறுப்புப் புள்ளியைத் தவிர்த்து ஐன்ஸ்டைனின் கோட்பாட்டால் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறது உலகம். உண்மையில் சர் ஐசக் நியூட்டனின் கண்டுபிடிப்புகள் பைபளின் பழைய ஏற்பாடு மாதிரி என்றால் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு பைபளின் புதிய ஏற்பாடு மாதிரி என ஓர் ஒப்பீடு கூறுகிறது.

தங்கள் இனத்தவர் என்று பெருமைப்பட்ட இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கே அதிபராகும் படி ஐன்ஸ்டைனுக்கு அழைப்பு விடுத்தது. நான் அரசியலுக்கு லாயக்கில்லாதவன் என்று சொல்லி அந்தப் பதவியை ஏற்க மறுத்து விட்டார் ஐன்ஸ்டைன்.

ஸ்விட்சர்லாந்தில் பயிலும் போது மிலவா என்ற பெண்ணைக் காதலித்து மணந்தார் ஐன்ஸ்டைன். இரு பிள்ளைகளுக்குத் தந்தையானார். பின் மணமுறிவு ஏற்படவே எல்சா என்ற உறவுப் பெண்ணை மணந்து கொண்டார். எல்சா சிறிது காலத்திலேயே இறந்து விட சுமார் இருபது ஆண்டுகள் தனித்தே வாழ்ந்தார் ஐன்ஸ்டைன்.

அணுகுண்டு தயாரிப்பதற்கு அவருடைய சார்பியல் கோட்பாடுதான் அடிப்படை என்றாலும் யுத்தங்களை அறவே வெறுத்தவர் ஐன்ஸ்டைன். உலக அமைதிக்காகக் குரல் கொடுத்த அவர் 1955ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி தனது 76வது வயதில் காலமானார்.

நவீன அறிவியல் ஐன்ஸ்டைனுக்கு மிகப் பெரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. எதையுமே ஆழமாகச் சிந்திக்கக் கூடியவர் அவர். ஒருமுறை உங்களுக்கு இன்னும் எதைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் என்று ஒருவர் கேட்க, 
கடவுள் இந்த உலகை எப்படிப் படைத்தார் என்பதை ஒரு நாள் நான் கண்டுபிடித்து விட வேண்டும் என்று கூறினாராம்
 ஐன்ஸ்டைன்.  அவருக்கு வானம் வசப்பட்டதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஆழமான சிந்தனை. மற்றது அறியப்படாதவற்றைப் பற்றிய அளவிட முடியாத தாகம். அந்த ஆழமான சிந்தனையும் இயற்கையைப் பற்றிய தாகமும் நமக்கு இருந்தால் நமக்கும் அந்த வானம் வசப்படும்

நன்றி: வானம் வசப்படும் அழகிய பாண்டியன்

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்....

26 August 2012

சாதனை மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்



நீல் ஆம்ஸ்ட்ராங்கின் முழு பெயர் நீல் ஆல்டென் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 1930-ம் ஆண்டில் ஆகஸ்டு 5-ந்தேதி ஒகயோவில் உள்ள வபாகொனெட்டாவில் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை ஆடிட்டராக பணிபுரிந்தார். எனவே அவர் பல இடங்களுக்கு சென்று பணிபுரிந்தார். ஆகவே இவர் வபாகொனெட்டாவில் உள்ள தனது தாத்தா, பாட்டியுடன் தங்கியிருந்தார். அவர்களுடன் குழந்தை பருவத்தை கழித்தார்.


19 August 2012

பெருநாள் நல்வாழ்த்துக்கள்



அஸ்ஸலாமு அலைக்கும்! 

முப்பது நாட்களும் நோன்பு நோற்கக்கூடிய
உடல் சுகத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் இந்நன்நாளில்... 


நோன்பிருந்தவர்கள் அனைவரும் ஏழை
எளியவருக்கு பித்ரா என்னும் தானதர்மங்களை
வழங்கி மகிழ்ச்சியுறுவோம்..

நம்முடைய ஜகாத் என்னும் தர்மத்தை முறைப்படி
ஏழை எளியவர்களுக்கு வழங்குவோம்....
சந்தோஷமான இந்த நன்நாளின் மகிழ்ச்சியை
உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்...
உலகத்தில் பல பகுதிகளில் வாழும் என் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த 
பெருநாள் நல்வாழ்த்துக்கள்
.....
இந்த வருடம் போல் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வருடங்களிலும் ரமலானை நோன்பை சிறப்பான முறையில் நோற்கக்கூடிய பாக்கியத்தையும், நீண்ட‌ ஆயுளையும், பூரண சுகத்தையும் நம் அனைவருக்கும் தரவேண்டுமென இந்நன்னாளில் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்...

                                                                 **************


இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...


TNPSC குரூப் II (12-08-2012) கேள்விகளுக்கான விடைகள்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம்  12-08-2012 நடைப்பெற்ற TNPSC Group II (Aug 2012)  தேர்வுக்கு விடைகளை அறியும் ஆர்வத்தில் இருப்பீர்கள். ஈரோட்டில் வினாத்தாள் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டில் நடந்த தேர்வு செல்லாது மாற்றாக இத்தேர்வு வேறு ஒரு நாளில் நடைபெறும் என்று தெரிவித்து விட்டது. வினாத்தாள் எப்படி வெளியானது என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    நீங்கள் எழுதிய அந்தத் தேர்வை அரசு நடத்திய மாதிரி தேர்வு என நினைத்துக் கொள்ளுங்கள். குரூப் 4 தேர்வு நடந்த அன்றிரவே வினாத்தாளை அரசு வெளியிட்டது.குரூப் 2 தேர்வு ரத்தானதால் விடைகளை அரசு வெளியிடவில்லை. தேர்வு ரத்து செய்யப்பட்டது என்றாலும், அதை தேர்வு எழுதி விடைகளை எதிர் பார்த்திருந்த மாணவர்களின் ஆர்வம் குறையவே இல்லை. 

   தேர்வு எழுதியவர்களுக்கு பயன்படும் வகையில் ரேடியன் ஐ.ஏ. எஸ் அகாடமியால் வெளியிடப்பட்ட  விரிவான பதில்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் உங்களை மதிப்பீடு செய்ய விரும்பினால்... 

  PDF வடிவில் இருக்கும் இந்த விடைகளை, நீங்கள் எழுதியுள்ள விடைகளோடு ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள்.. 

        தேர்வுத்தாளின் விடைகளைப் பெற இந்த இணைப்பில் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.....



1
GENERAL KNOWLEDGE
2. GENERAL TAMIL


இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்...

மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல் நிலைத் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு விண்ணப்பங்கள்



கடலூர் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல் நிலைத் தேர்வில் பங்கேற் பவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இது குறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

வரும் 2013ம் ஆண்டு அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல் நிலை தேர்வு பயிற்சி மாணவர்களை தேர்வு செய்வதற்காக வரும் அக்டோபர் 7ம் தேதி நுழைவுத் தேர்வு நடக்கிறது.அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தின் சார்பாக நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடலூரில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வரும் செப்டம்பர் 4ம் தேதி வரைவிண்ணப்பங்கள் வழங்கப்படும். 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 4ம் தேதி மாலை.5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் இதர பிரிவினர் எழுத்து மூலமாக மனுவை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு குறைந்த பட்ச கல்வி தகுதி, பி.ஏ.,பி.எஸ்சி., பி.காம்., மற்றும் தொழிற்பட்டப்படிப்பான பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.வி.எஸ்சி., பி.எஸ்சி., (விவசாயம்), அங்கீகரிக்கப்பட்டபட்டப்படிப்புகள் படித்து முடித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் கல்வி, வயது, இருப்பிடம் ஆகிய சான்றிதழ்களுடன் நகல்களை சரிபார்த்த பின்னர் விண்ணப்பங்கள் வழங்கப்படும். 

விண்ணப்பதாரர்கள் 21 வயதிற்கு மேற்பட்டவராகவும், பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளாகவும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 33 வயதிற்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இந்த பயிற்சி மையத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்....

13 August 2012

குரூப்-2 தேர்வு ரத்து வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதன் எதிரொலி

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் வினாத்தாள் வெளியானதாக வந்த தகவலை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலும், ஈரோடு மாவட்டத்திலும் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் வெளியானதாக தேர்வு எழுதியவர்கள் புகார் கூறினார்கள்.

கம்பைநல்லூரில் சுரேஷ் குமார் என்பவர் ரூ. 3 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்த தகவலையொட்டி 5 பேர் சிக்கியுள்ளனர். இதேபோல ஈரோட்டில் ஒரு பெண் கேள்வித்தாளை தேர்வுக்கு முன்னதாக வைத்திருந்ததாக தேர்வர்கள் புகார் கூறினர். இந்த 2 சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர்கள் விசாரணை நடத்தினார்கள்.

குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாள் எப்படி வெளியே வந்தது? இதை வெளியிட்டது யார்? துறை அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கட்ட விசாரணை முடிந்து தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர்கள் அறிக்கையினை டி.என்.பி.எஸ்.சி. தலைவருக்கு அனுப்பினர். இதையடுத்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்வாணைய செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தேர்வில் முறைகேடு நடந்ததாக வந்த புகார்களையடுத்து தேர்வை ரத்து செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆலோசனைக்குப் பிறகு, குரூப்-2 தேர்வை ரத்து செய்வதாக நட்ராஜ் அறிவித்தார். மேலும் இத்தேர்வை மீண்டும் எப்போது நடத்துவது என்பது குறித்து 10 நாளில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

                                                                                                     நன்றி: மாலைமலர்

11 August 2012

டி.என்.பி.எஸ்.சி-VAO பொதுத்தமிழ் (சாகித்ய அகாடமி)-பாகம்-2


பொதுத்தமிழ் பிரிவில் நாம் பார்க்க போவது சாகித்ய அகாடமி விருதுகளை பற்றி...

சாகித்ய அகாடமி விருது 1954, மார்ச் 12-ல் தோற்றுவிக்கப்பட்டது

இவ்விருது இந்திய அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட 24 இந்திய அலுவலக மொழிகளில் வெளியான சிறந்த படைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

இவ்விருது பெற்ற புத்தக்த்திலிருந்து கேள்விகள் கண்டிப்பாக இடம் பெறும் வர்ய்ப்புகள் அதிகம்.. நடந்து முடிந்த TNPSC-IV-ல் கேள்வி இடம் பெற்றது என்பது யாவரும் அறிந்ததே...

தமிழில் சாகித்ய அகாடமி பெற்ற புத்தகங்கள்... 
ஆண்டுபுத்தகத்தின் பெயர்ஆசிரியர்பிரிவு
2011காவல் கோட்டம்சு.வெங்கடேசன்நாவல்
2010சூடிய பூ சூடற்கநாஞ்சில் நாடன்சிறுகதைகள்
2009கையொப்பம்புவியரசுகவிதை
2008மின்சாரப்பூமேலாண்மை பொன்னுசாமிசிறுகதைகள்
2007இலையுதிர்காலம்நீல பத்மநாதன்நாவல்
2006ஆகாயத்திற்கு அடுத்த வீடுமு. மேத்தாகவிதை
2005கல்மரம்திலகவதிநாவல்
2004வணக்கம் வள்ளுவஈரோடு தமிழன்பன்கவிதை
2003கள்ளிக்காட்டு இதிகாசம்வைரமுத்துநாவல்
2002ஒரு கிராமத்து நதிசிற்பிகவிதை
2001சுதந்திர தாகம்சி.சு.செல்லப்பாநாவல்
2000விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்தி.க.சிவசங்கரன்விமர்சனம்
1999ஆலாபனைஅப்துல் ரகுமான்கவிதை
1998விசாரணைக் கமிஷன்சா.கந்தசாமிநாவல்
1997சாய்வு நாற்காலிதோப்பில் முகமது மீரான்நாவல்
1996அப்பாவின் சினேகிதர்அசோகமித்திரன்சிறுகதைகள்
1995வானம் வசப்படும்பிரபஞ்சன்நாவல்
1994புதிய தரிசனங்கள்பொன்னீலன்நாவல்
1993காதுகள்எம்.வி.வெங்கட்ராம்நாவல்
1992குற்றாலக்குறிஞ்சிகோ.வி.மணிசேகரன்நாவல்
1991கோபல்லபுரத்து மக்கள்கி.ராஜநாராயணன்நாவல்
1990வேரில் பழுத்த பலாசு.சமுத்திரம்நாவல்
1989சிந்தாநதிலா.ச.ராமாமிர்தம்சுயசரிதை
1988வாழும் வள்ளுவம்வா. செ. குழந்தைசாமிஇ.விமர்சனம்•
1987முதலில் இரவு வரும்ஆதவன்சிறுகதைகள்
1986இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்க.நா.சுப்பிரமணியம்இ.விமர்சனம்•
1985கம்பன் ; புதிய பார்வைஅ. ச. ஞானசம்பந்தன்இ.விமர்சனம்•
1984ஒரு கவிரியைப் போலலட்சுமி (திரிபுரசுந்தரி)நாவல்
1983பாரதி : காலமும் கருத்தும்தொ. மு. சி. இரகுநாதன்இ.விமர்சனம்•
1982மணிக்கொடி காலம்பி. எஸ். இராமையாஇ. வரலாறு#
1981புதிய உரைநடைமா. இராமலிங்கம்விமர்சனம்
1980சேரமான் காதலிகண்ணதாசன்நாவல்
1979சக்தி வைத்தியம்தி. ஜானகிராமன்சிறுகதைகள்
1978புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்வல்லிக்கண்ணன்விமர்சனம்
1977குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதிநாவல்
1975தற்காலத் தமிழ் இலக்கியம்இரா. தண்டாயுதம்இ.விமர்சனம்•
1974திருக்குறள் நீதி இலக்கியம்க. த. திருநாவுக்கரசுஇ.விமர்சனம்•
1973வேருக்கு நீர்ராஜம் கிருஷ்ணன்நாவல்
1972சில நேரங்களில் சில மனிதர்கள்ஜெயகாந்தன்நாவல்
1971சமுதாய வீதிநா. பார்த்தசாரதிநாவல்
1970அன்பளிப்புகு. அழகிரிசாமிசிறுகதைகள்
1969பிசிராந்தையார்பாரதிதாசன்நாடகம்
1968வெள்ளைப்பறவைஅ.சீனிவாச இராகவன்கவிதை
1967வீரர் உலகம்கி. வா. ஜெகநாதன்இ.விமர்சனம்•
1966வள்ளலார் கண்ட ஒருமைப்பாடும. பொ. சிவஞானம்சரிதை நூல்
1965ஸ்ரீ ராமானுஜர்பி.ஸ்ரீ. ஆச்சார்யாசரிதை நூல்
1963வேங்கையின் மைந்தன்அகிலன்நாவல்
1962அக்கரைச் சீமையிலேமீ.ப.சோமுபயண நூல்
1961அகல் விளக்குமு. வரதராசன்நாவல்
1958சக்கரவர்த்தித் திருமகன்கி. இராஜாஜிஉரைநடை
1956அலைஓசைகல்கிநாவல்
1955தமிழ் இன்பம்ரா. பி. சேதுப்பிள்ளைகட்டுரை
*இலக்கிய விமர்சனம்   

இலக்கிய வரலாறு
                                                                                                             நன்றி: Wikipedia

VAO தேர்வுக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ளன... முழு முயற்சியோடு படியுங்கள். வெற்றி பெறுங்கள்... வாழத்துக்கள்....

இன்ஷா அல்லாஹ மீண்டும் அடுத்த பதிவில்...

உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லுங்கள்,