நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

30 October 2012

"நீலம்" புயல் தப்பிக்க சில வழிகள்...

டந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நீலம் புயல் சென்னை நோக்கி வருவதால் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீலம் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க சில வழிகளை பார்ப்போம்...

கடலோர மக்களே கவனம்
குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீனவர்களே கடலுக்குள் போகாதீர்கள்
கடல் சீற்றமாக இருந்து வருவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக் கூடாது என்று கடந்த 3 நாட்களாகக் கூறப்பட்டு வருகிறது. தற்போது புயல் கரையைக் கடக்க இருப்பதால் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகளும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

பீச் பக்கம் எட்டிப்பார்க்காதீங்க...
சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை தவிர மகாபலிபுரத்துக்கு அருகே உள்ள கோவளம், விஜிபி, நீலாங்கரை, பாலவாக்கம் உள்ளிட்ட அனைத்து கடற்கரைக்கும் செல்வதைத் தவிர்க்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். அத்துடன் மக்கள் கூடும் கடற்கரைப் பகுதிகளில் போலீசாரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்கம்பங்கள் சாயலாம்
பொதுவாக மழைகாலத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மின்சாரம் பாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. புயல் காலங்களில் முறிந்து விழும் மரங்கள், மின்கம்பங்கள் அருகே செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மரங்கள் விழலாம் - கீழே ஒதுங்காதீர்கள்
புயலடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மரங்களின் கீழே மழைக்கு பாதுகாப்பு என ஒதுங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் மழை நீரில் நடந்து போவதைத் தவிர்க்கவும்

சுவிட்சுகளை முடிந்தவரை ஆப் செய்யுங்கள்
புயல் காற்று வீசும் நிலையில் வீடுகளில் மின்சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கான சுவிட்சுகளை கூடுமானவரை அணைத்தே வைக்கவும்.

மெழுகுவர்த்திகள் ஸ்டாக் இருக்கட்டும்
மின்சாரம் துண்டிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வீட்டில் மெழுகுர்த்திகளை போதிய அளவில் வைத்துக் கொள்வது நல்லது. தற்போதைய நிலம் புயலுக்கான முன்னெச்சரிக்கையின் போது வானிலை மையமும் கூட தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

அவசர உதவிக்கு...
புயல் மற்றும் மழை வெள்ளம் குறித்த விவரங்களை அறிய சென்னையில் தகவல் மையம் திறக்கப்பட்டிருக்கிறது. இதன் தொலைபேசி எண்: 044-28447727 . சென்னையில் புயல், மழை பற்றிய அறிய 044-28447734 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

நன்றி! தட்ஸ் தமிழ்

இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில்...


28 October 2012

தினம் ஒரு தகவல்: மெட்ராஸ் பஞ்சம் (வரலாற்று சுவடுகள்)

சுமார் 375 ஆண்டு வரலாறு கொண்ட மெட்ராஸ் மாநகரம் நல்லது, கெட்டது என நிறைய விஷயங்களைப் பார்த்துவிட்டது. மெட்ராசையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட நிகழ்வுகள் எல்லாம் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை இந்த நகரம் சந்தித்த பஞ்சங்கள். பஞ்சத்தால் பறிபோன உயிர்களும், பஞ்சத்தோடு போராடிய உயிர்களும் நிறைய பாடங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றன.


23 October 2012

சிரிக்க!!! சிந்திக்க!! சில புகைப்படங்கள் (மின்சாரம்)

என் முகப்பக்கத்திலிருந்து...


நிலவை காட்டி சோறு ஊட்டினாள் - அன்று
நிலவு வெளிச்சத்தில் சோறு ஊட்டினாள் - இன்று
# மின்வெட்டு

20 October 2012

செல்போனும், மனிதனின் தீயஎண்ணங்களும்

செல்போன்கள் ஆளுக்கு இரண்டு என மாறிவிட்ட இன்றைய சூழலில் செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் மலிந்து கிடக்கின்றன. செல்போன் குற்றங்களில் முதல் இடத்தில் நிற்கிறது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் !

பத்து கல்லூரி மாணவர்களின் செல்போன்களைப் பரிசோதித்தால் அதில் ஆறு பேருடைய செல்போன்களிலாவது நிச்சயம் இருக்கும் சில ஆபாசப் படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள்.

18 October 2012

காணவில்லை (மின்சாரம்)

tneb


பெயர் : மின்சாரம்

வயது : சுமார் 200 ஆண்டுகள்

அடையாளம்: தொட்டால் ஷாக் அடிக்கும்

பெற்றோர்: பெஞ்சமின் பிராங்கிளின்

முகவரி: தமிழக மின்சார வாரியம்

பிரிவாள்வாடும் பிள்ளைகள்: பேன், லைட், கிரைண்டர், மிக்சி, அயர்ன்பாக்ஸ், பிரிட்ஜ் மற்றும் தமிழ்நாட்டு மக்கள்

அருமை மின்சாரமே உன்னை காணாமல் நாங்கள் (தமிழக மக்கள்) நிம்மதியான உறக்கம் இன்றி, மாணவர்களின் படிப்பு கெட்டு, பணிகள் கெட்டு, வியாபாரம், தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு, வருமான்ம் பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம்.. ஆகவே, நீ எங்கிருந்தாலும் உடனடியாக எங்களிடம் திரும்பி வந்து விடு....
இப்படிக்கு,
தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என வாக்குறுதியை நம்பி ஓட்டு போட்ட அப்பாவி தமிழக மக்கள்

முக்கிய குறிப்பு:
கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்


இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் ...

08 October 2012

TNPSC GROUP IV தேர்வு முடிவுகள்

tnpsc
                                           
07-07-2012 அன்று நடைப்பெற்ற TNPSC GROUP IV 2012 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம் இன்று வெளியிட்டுள்ளது. 

நீதிமன்ற வழக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது..

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழுள்ள லிங்கில் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.... 

GROUP IV RESULT CLIK HERE

அரசு ஊழியராக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் நம்ம ஊர் இணையதளம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது...

மேலும் அவர்களுடைய பணி சிறப்பாக அமைய வேண்டும் என இறைவனிடன் துவா செய்கிறேன்.....

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...
02 October 2012

TNPSC VAO (30-09-2012) கேள்விகளுக்கான விடைகள்tnpsc

30-09-2012 நடைப்பெற்ற TNPSC VAO 2012 (30-09-2012) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம்.. 

PDF வடிவில் இருக்கும் இந்த விடைகளை, நீங்கள் எழுதியுள்ள விடைகளோடு ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள்.. 

தேர்வுத்தாளின் விடைகளைப் பெற இந்த இணைப்பில் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.
....

1
GENERAL KNOWLEDGE
2. GENERAL TAMIL
3. GENERAL ENGLISH


மூன்று பகுதிகளுக்கான வினா விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. டிக் மார்க் செய்துள்ள விடைகள் சரியானதாக இருக்கும்..

சில தளங்கள் தங்களது ட்ராபிஃக் ரேங்கை அதிகப்படுத்தும் நோக்குடன் நேற்றிலிருந்து தவறான தகவல்களை அளித்து வருகிறது.. அரசு இணைய தளத்தை தவிர மற்ற தளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...

அடுத்து வரும் TNPSC குரூப் II (மறு தேர்வு தேர்விற்கு தயாராகுங்கள்...

வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்...


இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்....