நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

10 January 2013

புகை உங்களுக்கு நண்பனா? படியுங்கள்...

புகை (சிகரெட்)வரலாறு: ஆரம்பத்தில் செவ்விந்தியர்கள் மத்தியில் மட்டும் காணப்பட்டது இந்தப் பழக்கம். வட அமெரிக்காவில் பரவலாக பயிரிடப்பட்டிருந்த புகையிலை, ஐரோப்பியரின் வருகையைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்துக்கும் பரவியது என்பதுதான் இந்த உயிர்க்கொல்லிப் பயிரின் சரித்திரம்.

புகைப்பது உயிர்க்கு இறுதிபயக்கும் (Smoking is Injurious to Health) என நாம் வாங்கும் சிகரெட் அட்டைகளிலேயே விளம்பரப்படுத்தப்பட்டும், புகைப்பவர்கள் புகைத்து கொண்டு தான் உள்ளனர். சொல்லப்போனால் ஊதுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் உள்ளது. ஆனால் புகைப்பது தேவையற்ற வேண்டாட ஒரு கொடிய கெட்ட பழக்கம். இது என்றும் எப்போதும் தவிர்க்கப்பட வேண்டும்.
         "புகை நமக்கு பகை" அவை வெறும் ஏட்டளவில் தான்...
புகை! மனிதனுக்கு பகை! என்பது வெறும் ஏட்டளவில் உள்ள வாசகம் தான் மாறாக நடைமுறையில் நாம் பார்ப்போமேயானால்,அது மனிதனுக்கு நண்பனாகவே திகழ்கிறது. எந்த அளவுக்கு எனில் மனிதனின் ஆறாவது விரலாக புகையிலையை உள்ளடக்கிய அந்த சிகரெட் திகழ்கிறது. மனைவி இல்லாமலும் இருந்து விடுவேன் மயக்கமில்லாமல் [புகை] ஒரு வினாடி கூட இருக்கமுடியாது என்று சொல்லும் புகை பிரியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். 

இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் 850 கோடி சிகரெட்டுகள் விற்கப்படுவதாகவும், அதில் 84 கோடி சிகரெட்டுகள் தமிழ்நாட்டில் விற்கப்படுவதாகவும் சிகரெட் நிறுவனங்கள் கூறுகின்றன. இதிலிருந்து மனிதனுக்கு மத்தியில் அது ஏற்ப்படுத்தியிருக்கும் தாக்கத்தையும், எந்த அளவுக்கு மனிதன் அதன் பால் ஈர்க்கப்படுகிறான் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
படித்தவர்களிடம் இதன் தாக்கம் அதிகம்: பொதுவாகவே எழுத படிக்க தெரியாதவர்களிடம் தான் எந்த ஒரு தீய பழக்கமும் பரவும். காரணம் அதை பற்றிய அறிவு அவர்களிடம் குறைவு என்பதற்குதான். மாறாக படித்து பட்டம் வாங்கி கிழித்ததாக சொல்பவர்கள், தான் இந்த புகை பிடிக்கும் போதைக்கும்,புகையிலையின் போதைக்கும் அடிமையாகிவருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. படிக்காத கிராமபுரத்தில் உள்ளவர்களிடம் குறிப்பாக பெண்கள் மத்தியில் புகையிலைப் பழக்கம் கணிசமாகக் குறைந்து வருவதாகவும், படித்த, நகர்ப்புற 30 வயதுக்குக் குறைவான பெண்கள் மத்தியில் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள், என்று பாகுபாடு இல்லாமல் பெருகி வரும் இந்த போதை பழக்கத்தால் உண்டாகும் விளைவுகளை பார்ப்போம்,,,
                     "உயிரைக் குடிக்கும் உயிர்கொல்லி"

புகையிலையில் நிகோடின், பென்சோ பைரீன் என இரு நச்சுப் பொருட்கள் உள்ளன. இவற்றை "உயிரைக் குடிக்கும் உயிர்கொல்லிகள்" எனலாம். நிறமற்றவை, தனித்த நிலையில் இவை கொடிய நஞ்சுகள்.

ஒரு துளி நிகோடின், ஒரு முயலின் மேல் பட்டால் அது நடுங்கும், அதிர்ச்சி கொள்ளும்; இரு சிகரெட்டுகளில் உள்ள நிகோடினை ஊசிமூலம் செலுத்தினால் மடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகள் ஊதினால், ஒரு வாரத்தில்  400 மில்லி கிராம் நிகோடினை உட்செலுத்தியதற்து சமம். உடனே மரணம் உண்டாகும். ஒருவர் ஒரு நாளைக்கு 200 சிகரெட்டுகள் குடித்தால், ஓர் ஆண்டில் 840 கன சென்டிமீட்டர் புகைத்தார் (Tobacco Tar) உட்கொண்டது ஆகும்.

புகையின் தீமைகள்:
 • சிகரெட்டுப் புதை உடலின் எல்லா உறுப்புகளையும் பாதிக்கிறது. முதலில் பாதிக்கப்படுவது நுரையீரல் தான்.
 • இதயத்தில் குருதிநாளங்களை நிகோடின் குறுகலடையச் செய்கிறது. மாரடைப்பிற்கு முக்கிய காரணமே நரம்புகள் குறுகுவதே. கார்பன்டைஆக்சைடும் குருதி நாளங்களைக் குறுக வைக்கிறது
 • புகைப்பவர்கட்கு வைட்டமின் 'சி' குறைகிறது. குறையவே குருதி நாளங்களில் கொலஸ்ட்ரால் கூடி அதன் வழியைக் குறுகச் செய்கிறது
 • புகைத்துப் புகைத்துச் சுவை மாறுவதால், செரிமானம் கெட்டு விடுகிறது
 • கொழுப்பு உணவினை உண்ணும் வேட்கை அதிகமாகிறது. அதன் விளைவு குருதிக் கொலஸ்ட்ரால் கூடி மாரடைப்புக்கு வழிகோலுகிறது
 •  போதைக்கு அடிமையானவர்களுக்கு அடுத்த அதிர்ச்ச்சி என்னவென்றால், ஆண்மையின்மை. புகையிலையில் உள்ள அந்த  [நிகோடின்] நச்சு தன்மை விந்தணுக்களின் வீரியத்தை குறைத்து விடுகிறது. இதனால் குழந்தை பாக்கியம் என்பது கேள்விக்குறியாக்கி விடுகிறது. இது கணவன் -மனைவி மத்தியில் கசப்புணர்வை உண்டாக்கி விடுகிறது.
 • புத்தி கூர்மையும் மங்கச்செய்கிறது இந்த புகை பழக்கம். ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டுக்கு மேல் புகைப்பவர்களுக்கு புத்திக் கூர்மையின் அளவு 90 புள்ளிகளாகவும், ஆரோக்கியமான மற்றும் நல்ல மனநிலையில் உள்ளவர்களின் புத்திக் கூர்மை 84 முதல் 116 புள்ளிகள் வரை காணப்படுவதாகவும் ஆய்வுகள் அறிவிக்கின்றன
 • புகையிலையில் உள்ள நிகோடின், பென்சோபைரின் போன்றவை புற்று நோய்க்கும் பாதை வகுக்கும்.
 • எய்ட்ஸ், காசநோய், மலேரியா போன்ற நோய்களை விட புற்றுநோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
புகையிலையில் அம்மோனியா, ஆல்டிஹைடு, பினால் போன்ற காரம் மிகுந்த பொருட்கள், ஆர்செனிக் எனும் நச்சுப் பொருள், கார்பன் மோனாக்சைடு என்னும் நச்சு வாயும், நிகோடின், பென்சோபைரின் போன்ற நஞ்சுகளும் உள்ளன. புகைக்கும்போது இவையெல்லாம் உள்ளே சென்று அதனதன் வேலையைக் காட்டி விடுகின்றன.

இந்த புகை பழக்கத்தினால் சிறிது சிறிதாக நம்மையே நாம் மாய்த்து வருகிறோம். இப்படி நம்மை நாமே மாய்த்துக் கொள்வது தற்கொலைக்கு சமமானது. விஷத்தை அருந்தி ஒரே அடியாக உயிர் துறப்பதற்கு பதிலாக இந்த பழக்கத்தினால் சிறிது சிறிதாக உயிர் துறந்து வருகிறோம் என்பது தான் உண்மை.

இவ்வளவு கொடிய விஷம் உள்ள சிகரெட்டை நாம் விட்டொழிக்க வேண்டும். இல்லையேல் புகைவது சிகரெட்டாக இருந்தாலும் எரிவது நாமாகத்தான் இருப்போம்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்....09 January 2013

கேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்...

Gas

LPG சிலின்டர் நாம் வீடுகளில் தற்போது பயம் அற்று பயன் படுத்துகிறோம். ஆனால் முந்தைய காலங்களில் LPG சிலின்டர் என்றாலே பயந்து பயன்படுத்தாமல் இருப்பார்கள் பலர் .காலப்போக்கில் அது பழகிப்போய் இப்போதெல்லாம் எங்கும் காஸ் ஸ்டவ் தான் . அதாவது LPG என்று சொல்லப்படுகிற நீர்ம பெட்ரோலிய வாயு ( Liquefied Petroleum Gasas) தான் நமது வீட்டின் சமையல் அறைகளில் பயன்படுத்தபடுகிறது . ஆனால அவ்வப்போது பல தீ விபத்துக்கள் நடைபெற்று கொன்று தான் இருக்கிறது . குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு கூடசென்னையில் உள்ள வண்ணாரபேட்டையில் கியாஸ் கசிந்து நான்கு பேர் பலியானார்கள் மேலும் இரண்டு நபர்கள் படுகாயம் அடைந்தார்கள் .இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க நாம் கவனிக்க வேண்டிய விடையங்கள் இருக்கிறது அதனை நாம் இங்கு பார்க்கலாம்

LPG நாம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில காரியங்களை
நாம் பார்க்கலாம் .!!

LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே , அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும். சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு . கீழ் உள்ள படத்தை பாருங்கள் .

இதுலே D13 இருக்கு, கவனிச்சீங்களா? இதுக்கு என்ன அர்த்தம்?


 


இது வருஷத்தை நான்காகப் பிரிச்சு நான்காம் கால் பகுதியைக் குறிக்குது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை

இது இந்த சிலிண்டரின் காலாவதியைக் குறிப்பிடும் சொல். அதாவது 2013 டிசம்பர் வரைக்கும்தான் இந்த சிலிண்டருக்கு ஃபிட்னெஸ்(Fitness) இருக்கு. இதுக்கப்புறம் அதுலே உள்ள பாகங்கள் ஏதாவது பழுதடையும் வாய்ப்பு இருக்கு. பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை.

காலாவதியானவைகளை இன்னொருமுறை அதுக்குண்டான பரிசோதனைகளைச் செய்து சரியாக்கி மறுபடி புது அட்டையுடன் பயனுக்கு விடலாம்

சிலிண்டர் வெடித்து மரணம் என்றெல்லாம் பத்திரிக்கைச் செய்தி வர்றதை நாமும் எத்தனை முறை வாசிச்சு இருக்கோம்.

இதுவரை இப்படி சிலிண்டருக்கு ஒரு காலாவதி இருக்குன்னு எனக்குத் தெரியவே தெரியாது. உங்களில் சிலருக்குத் தெரியாம இருந்திருக்கலாம்.

சரி, எப்போ இது காலாவதின்னு தெரிந்துகொள்ளுவது ?

இங்கே பாருங்க எப்படின்னு ஒரு சுலப வழி.

The alphabets stand for quarters -
 • A என்பது மார்ச் (முதல் காலாண்டு)
 • B என்பது ஜூன் (இரண்டாம் காலாண்டு)
 • C என்பது செப்டம்பர் (மூன்றாம் காலாண்டு)
 • D என்பது டிசம்பர் (நான்காம் காலாண்டு)
சிலிண்டரின் ஆயுள் காலம் அந்த சிலிண்டருக்கு மேல் குறிப்பிடபடி எழுதப்பட்டிருக்கும் .

உதாரணமாக D-13 என்று இருந்தால் டிசம்பர் 2013 என்று அர்த்தம்

இதில் 4 ஆங்கில எழுத்துகள் (A, B, C, D) என்று வரும் . இந்த நான்கு எழுத்துகளும் முதல் காலாண்டு (மார்ச் வரை) , இரண்டாம் காலாண்டு ( ஜூன் வரை) , மூன்றாம் காலாண்டு (செப்டம்பர் வரை), நான்காம் காலாண்டு (டிசம்பர் வரை) என்று பொருள்படும் . தொடர்ந்து எழுதபட்டிருக்கும் இரண்டு எண்களும் வருடத்தை குறிக்கும் .

பொதுவாக LPG வாயுவுக்கு மணம் கிடையாது. ஆனால் ஏதும் கசிவு ஏற்பட்டுளதா என்பதை கண்டுகொள்ள தான் அதனுடன் மணம் உண்டு பண்ணும் காரணிகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் ஏதேனும் LPG மணம் ஏற்பட்டால் உடனடியாக எந்த மின்சார இணைப்புகளும் கொடுக்க கூடாது. ஏன் எனில் அதன் மூலம் எளிதில் தீ பிடிக்க வாய்ப்புண்டு .

பொதுவாக LPG, சாதாரண காற்றை விட அடர்த்தியாக உள்ள காரணத்தினால் , ஏதேனும் கசிவு ஏற்பட்டால் தரையை ஒட்டி தான் பரவி காணப்படும் . அதனால் தரை பகுதியில் நல்ல காற்றோட்டம் உருவாகும் படி எல்லா கதவுகளையும் (கசிவு ஏற்பட்டால்) திறந்து வைப்பது நல்லது .

சிலிண்டர்கள் எப்பொழுதும் நேராக (vertically) தான் வைக்க வேண்டும். படுக்க (Horizontally) வைக்க கூடாது . அதிக அழுத்தத்தில் LPG உள் நிரப்பப்பட்டிருப்பதால் சிலிண்டரின் வால்வில் ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டால் சிலிண்டர் வெகு வேகமாக பின் நோக்கி (Like Rocket) தள்ளப்படும் . அதனால் ஏற்ப்படும் விளைவு மிக மோசமானது .

வீடுகளுக்கு சிலிண்டர் மாற்றும் போது, நமக்கு வர்ற சிலிண்டரில் இந்த விவரத்தைக் கவனிச்சுப் பாருங்க. காலாவதியானதை 'வேணாம்'ன்னு கண்டிப்பாச் சொல்லுங்க. இந்த விவரத்தை நமக்குத் தெரிஞ்சவுங்க, தெரியாதவங்கன்னு இல்லாம கூடியவரை அனைவருக்கும் சொல்லுங்க.

விபத்து, மரணம் இவைகளைத் தடுக்க, ஏதோ நம்மால் ஆன ஒரு காரியம். எதுக்கும் எல்லாரும் அதிகம் கவனமா இருங்க.

 நன்றி: இன்றுஒருதகவல்பக்கம் 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்.....


05 January 2013

பாலியல் குற்றங்களுக்கான காரணங்கள்

புது டெல்லியில் மருத்துவப் படிப்பு மாணவிக்கு நேர்ந்த பாலியல் கொடுமையும், அதேபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகர் காவல் நிலைய எல்கைக்குள்ளும், திருவாரூர் மாவட்டம் வேதாரண்யத்தில் பள்ளி மாணவிகளுக்கும், சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த சம்பவமும் அதனால் கண்டனங்கள், போராட்டங்கள் எழுப்பி மக்கள் கோவமும், கவலையும் அடைந்திருக்கிறார்கள் 

ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்த சிலர் அதுவும் குறிப்பாக மகளிர், துபாய், சவுதி அரேபியா மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் கடுமையான சட்டங்கள் போன்று இயற்றப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

ஒரு பெண்மணி கூறும்போது, 'தான் துபையில் பல ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், அங்கே குற்றம் செய்தவர்களுக்கு மக்கள் மத்தியில், குற்றவாளிக்கு கசையடியும், மரண தண்டனையும் நிறைவேற்றுவதினைப் பார்த்ததாகவும் கூறினார். 

அது மட்டுமல்லாமல் சில அரசியல் தலைவர்கள் குறிப்பாக இந்திய நாட்டு ஜனாதிபதி மகனும், பாராளுமன்ற உறுப்பினரானவரும், ஆந்திர மாநில காங்கிரஸ் மந்திரியும், மதுரை ஆதீனமும் பெண்கள் கண்ணியமான உடை அணிந்தால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கலாம் என்று கூறி முற்போக்கு மகளிரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர். இன்னும் சிலர், பெண்கள் இரவு நேரத்தில் கணவரில்லாத ஆண்களுடன் செல்வதால் இதுபோன்ற குற்றம் நடக்கின்றது என்றனர்.

மதுரை ஆதீனம் ஒருபடி மேல் போய் பெண்கள் முஸ்லிம் மத பெண்கள் போல் உடை அணிய வேண்டும் என்று கருத்துக் கூறி இருக்கிறார்.

ஒரு மத்திய சமூக நலத் துறை அமைச்சர் பாலியல் குற்றம் செய்யும் மைனர் சிறுவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இன்னும் சிலர் சினிமா, தொலைக் காட்சியில் வரும் பாலியல் தூண்டும் செய்திகள் தான் இளைஞர்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று கூறுகின்றனர். மத்திய அரசும் இதுபோன்ற குற்றம் வராது தடுக்க அல்லது தண்டனை வழங்க என்ன செய்ய வேண்டும் என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வர்மா அவர்கள் தலைமையில் ஒரு கமிட்டி நியமித்துள்ளது.

இந்த அனைத்து தகவல்களும் தீ பற்றிய பின்பு அணைக்கும் செயலாக உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால் இஸ்லாமிய ஷரியாத் சட்டம் வருமுன் காக்கும் சட்டம் என்றால் மிகையாகாது.

ஏக அல்லாஹ் இறக்கி வைத்த திருக்குரானும், மனித வாழ்விற்கு நன்னெறி போதித்த நபி பெருமானாரின் நற்போதனைகளும் மனிதனை மாக்காளாக மாறாது பாதுகாத்துக் கொள்ளும் கேடையமாக அமைந்திருக்கின்றது என்றால் மிகையாகாது. 

போதை தலைக்கேறிவிட்டால் தாயென்றும், தாரமென்றும் குடிகாரர்கள் பார்ப்பதில்லை என்பதால் குடியினை தடை செய்து உள்ளது, அதற்கு இப்போது நடக்கும் அவலங்களே போதுமானது.

உடல் அங்கங்கள் கணவருக்கு மட்டும் தான் காட்டவேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதினால் பெண்கள் கண்ணியமாக இருக்க வழி செய்துள்ளது இஸ்லாம். தனக்குத் திருமணமானவளைத் தவிர அடுத்தப் பெண்களைப் பார்க்கும்போது தலை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்றும், பெண்களிடம் கண்ணியம் தவறும் மிருக குணம் படைத்தவர்களுக்கு அவர்கள் உணரும் படி கடுமையான சட்டங்கள் வரையறுக்க பட்ட சட்டப் பொக்கிஷம் தான் ஷரியத் சட்டம். 

அது சரி நமது நாட்டிலும் கற்பழிப்பிற்கு கடுமையான சட்டங்கள் குற்றவியல் சட்டத்தில் உள்ளதே பின் எப்படி இந்தத் தவறுகள் நடக்கின்றது எனக் கேட்கலாம். 

நமது நாட்டில் பாலியல் குற்றவாளிகளை முகத்தினை மறைத்து நீதி மன்றத்திற்கு அனுப்பும் செயலினைப் பார்த்திருப்பீர்கள். 

ஆனால் ஷரியத் சட்டத்தில் குற்றம் செய்யும் நபர் வெட்கி தலை குனியும் அளவிற்கு பொது மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவதால் அவன் எங்கு என்றாலும் அவனை சமூக புறக்கணிப்புக்கு ஆளாக நேருடுகிறது. அவ்வாறு செய்யாததினால் ஆழ்வார் திருநகரில் பள்ளிச் சிறுமியினை கற்பழித்து கொன்ற கயவன் ஏற்கனவே அதுபோன்ற குற்றம் செய்து ஜாமீனில் விடுதலையாகி மறுபடியும் குடி வெறியில் அதே தவறினைச் செய்திருக்கின்றான்.

மனிதனால் இயற்றப் பட்ட சட்டத்தினுக்கும், இறைவனால் வழங்கப் பட்ட ஷரியத் சட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகள்

1) மனிதனால் இயற்றப் பட்ட சட்டம் பாராளுமன்றம், சட்டமன்றம் போன்றவைகளின் கைப்பாவையாகி உள்ளது.அது காலப் போக்கில் தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது.

ஆனால் சரியத் சட்டம் ஏக அல்லாஹ் அருளால் இறக்கி வைக்கப் பட்டுள்ளது. அது ஒரு நிலையான சட்டம். மனிதன் வாழ்வில் அத்தனை தேவைகளுக்கும் வழி காணப்பட்டுள்ளது.

2) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் நிலையானதல்ல. உதாரணத்திற்கு மது காங்கிரசு தமிழகத்தில் ஆண்டபோது திறந்து விடப் படவில்லை. ஆனால் அதற்குப் பின் வந்த அரசுகள் மதுவினை ஒரு வருமானம் வரும் துறையாக கருதினர். இன்றைக்கு மது விற்பனையால் ஆண்டுக்கு பதினெட்டாயிரம் கோடி வருமானம் என கணக்குக் காட்டப் படுகிறது.

ஆனால் ஷரியத் சட்டத்தில் மதுவினைக் குடிப்பதற்கும், விற்பனை செய்வதிற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்டுப்பாடு நேரத்திற்கு, அரசுக்கு ஏற்ப மாறுபட்டதில்லை.

3) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் வருங்கால சந்ததி பற்றி சிந்திப்பதில்லை. ஏனென்றால் அந்தச் சட்டத்தினால் பயன் பெறுபவர் பெரும்பாலும் அரசியல் வாதிகள் என்பதால்.

ஆனால் அல்லாஹ்விற்கு வருங்கால சந்ததியினைப் பற்றிய சிந்தனை இருப்பதால் அவர்கள் பயன்படும் படி சட்டங்கள் உள்ளன. உதாரணத்திற்கு பெண்கள் தங்கள் அங்க அடையாளங்கள் தன்னால் கைப்பிடிக்கும் கணவனுக்கு மட்டும் தெரிய வேண்டும் என்ற அளவிற்குத் தான் உடை உடுத்த வேண்டும் என்ற கட்டுப் பாடு உள்ளது. கணவனுடன் தான் பெரும்பாலும் பயணம் செய்யவேண்டும் அல்லது பெற்றோர் அல்லது உடன்பிறந்தோர் ஆகியோருடன் தான் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப் பாடு உள்ளது. அதுபோன்று செய்யாது தனிப் பட்ட ஆணுடன் இரவு நேரத்தில் பயணம் செய்ததால் டெல்லியில் துரதிஷ்டமான சம்பவம் நடந்தது என்றால் மிகையாகாது.

4) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் குறிப்பிட்ட ஒரு நாடு, அதன் மக்களைச் சார்ந்து இருக்கும்.

ஆனால் இஸ்லாமிய நாடு அனைத்திற்கும் பொதுவான சட்டமாக ஷரியத் சட்டம் அமையும். இஸ்லாமில்லாத நாடுகளிலும் ஷரியத் சட்டம் இந்திய தண்டனைச் சட்டத்தினைத் தவிர கடைப் பிடிக்கப் பட்டு வருவதினைக் காணலாம்.

5) மனிதனால் இயற்றப் படும் சட்டம் பொது இடத்தில் நன்னடத்தையும், அநாகரியத்தினை தடுப்பதாக அமைந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி அமைவதில்லை.

ஷரியத் சட்டம் நன்மையினைக் காத்து, தீமையினை தடுப்பதாக அமைந்துள்ளது. உதாரணத்திற்கு ஜினா என்ற விபச்சாரம் இஸ்லாத்தில் தடை செய்யப் பட்டுள்ளது. ஆனால் மனிதனால் ஏற்படுத்திய சட்டம் விபச்சாரத்திற்கு லைசென்ஸ் வழங்கும் அளவிற்கு உள்ளது.

6) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் நீதிப் படிப்பினை போதிக்கும் சட்டமாக அமையவில்லை.

ஆனால் சரியத் சட்டம் நீதி படிப்பினை போதிக்கும் சட்டமாக அமைந்துள்ளது.

7) மனிதனால் வடிவமைக்கப் பட்ட சட்டம் பொது அமைதிக்குப் பங்கம் வராதவரை அல்லது அந்தக் குற்றம் வெளி உலகிற்கு தெரியாதவரை குற்றமாகாது. திருமணமாகாத இருவர் ஒப்புதலுடன் உடல் உறவு கொள்வது குற்றமில்லை. 

ஆனால் மறைவானவற்றை அறியும் திறன் கொண்ட அல்லாஹ்வால் இயற்றப் பட்டச் சட்டம் மறைவான தீய செயலிலிருந்தும் மனிதனை காக்கின்றது. கணவன் அல்லாத வேறு ஒருவருடன் உடல் உறவு கொள்வதினை ஷரியத் சட்டம் ஏற்றுக் கொள்வதில்லை.

8) மனிதனின் சுயக் கட்டுப் பாடு தளரும்போது தவறுகள் நடக்கின்றன. இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனிதனும் சந்தர்ப்பம் கிடைக்காத பாலியல் குற்றவாளியாகத் தான் இருக்கின்றான். 

ஆனால் ஷரியத் சட்டமும், நபி பெருமானாரின் போதனைகளும் மனித ஒழுக்கத்தின் நீரூற்றாகும். ஆகவே தான் தனி மனிதனும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் நிதானம் இழப்பதில்லை.

இஸ்லாமிய ஷரியத் தண்டனைகள்: 

ஜினா: மனவியினைத் தவிர கள்ள உடல் உறவு கொண்டவனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் அவன் வெக்கித் தலை குனியும் அளவிற்கு நூறு கசையடிகள் தரப்படும்.

ஹோமோசெக்ஸ்: என்ற புணர்விற்கு மரண தண்டனை உண்டு. ஆனால் உலகில் பல நாடுகள் அதனை அங்கீகரிக்கின்றன என்பது வெட்ககேடு என்றால் மிகையாகாது.

மது குடித்தால் இருபது முதல் நாற்பது வரையிலான கசையடி.

இவைகளை படித்து உணரரும் போது கற்பழிப்புகான காரணம் என்ன என்று நம்மால் உணரமுடியும்! அல்லாஹ் ஒருவனே அனைத்தையும் நன்கு அறிந்தவன்!

நன்றி: cuddalore Muslim Friend

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்....

இணையத்தில் பாதுகாப்பாக உலாவ வேண்டுமா?

wot


இணையத்தில் பாதுகாப்பாக உலாவ இதை படியுங்கள்...

இணையத்தை பயன்படுத்துபவர்கள் ஏராளம், ஆனால் நாம் பயன்படுத்தும் எல்லா இணையதளங்களும் பாதுகாப்பானதா என்பது சந்தேகம் தான். அவற்றின் பாதுகாப்பை நாம் எப்படி தெரிந்து கொள்வது,  அதன் பாதிப்பிலிருந்து தப்பிப்பது பற்றிய சின்ன பதிவு தான் இது.

இணையதளத்தில் பாதுகாப்பாக உலாவ ஒரு இணையதளம் நமக்கு பயன்படுகிறது. அவற்றிற்கான இணையதளத்தில் உட்புகுந்து கொண்டு அதில் காணப்படும் Add-on என்ற Button யை கிளிக் செய்து கொண்டு, அதை நம்முடைய கணிணியில் உள்ள உலாவியில் நிறுவி கொள்ள வேண்டும். பின்பு நம் பயன்படுத்தும் உலாவியை(browser) மூடி விட்டு மீண்டும் ஒருமுறை உலாவியை திறக்கவும். இப்போது அந்த மென்பொருளானது நமது கணிணியில் நிறுவப்பட்டுவிடும். இதற்கு பிறகு நாம் திறக்கும் வலைதளங்களில் ஏதேனும் வைரஸ் இருந்தால் அதை தெரிவித்து அதை தடுக்கும், அதனால் நாம் இணையத்தில் பாதுகாப்பாக உலாவலாம்.

அதற்கான இணையதள முகவரி கீழே....

அந்த இணையதள இணைப்பிற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்

நன்றி: Tamil Computer

நீங்களும் பயன்படுத்துங்கள், உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்...

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் .....