நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

16 January 2012

சில நேரங்களில் சில மனிதர்கள்




      நியூயார்க் நதரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை நிலவியது. சிலர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்கள், சிலர் பத்திரிக்கைகள் படித்தபடி அமர்ந்திருந்தார்கள். தீடீரென்று அங்கு ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார்.  அவர் அந்த எழுத்தாளர் அருகே கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்தார். அந்த சிறுவர்கள் இருவரும் ஆறு வயதைத்தாண்டாதவர்கள் அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்த அமைதி காணாமல் போயிற்று. குழந்தைகள் சத்தம் போட்டு விளையாட ஆரம்பித்து, பின்னர் சண்டையிட்டுக் கொண்டு ஒருவொருக்கொருவர் பொருட்களை எடுத்து வீசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். அந்த தந்தையோ அந்த சிறுவர்களை கண்டிப்பதாக தெரியவில்லை. கண்களை திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
        
          அங்கு அமர்ந்திருந்த மற்றவர்கள் எரிச்சலுடன் அவரைப் பார்த்ததை அவர் அறியவில்லை. அந்த எழுத்தாளர் தன்னபிக்கை, பொறுமை பற்றியெல்லாம் நிறைய எழுதிக் குவித்த எழுத்தாளர். அவரே பொறுத்து பொறுத்து பார்த்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தன்னருகே கண்னை மூடிக்கொண்டு அமர்ந்திருந்த அந்த நபரிடம் சொன்னார். "உங்கள் பிள்ளைகள் மற்றவர்களைத் தொந்தரவு செய்கிறார்கள் அவர்களை கொஞ்சம் கட்டுபடுத்துங்களேன்".

           அந்த நபர் கண்களை மெள்ள திறந்தார். "ஆமாம்... ஏதாவது செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் தாய் இறந்து விட்டார் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவள் உடலைத் தர சிறிது நேரம் ஆகும் என்றதால், அங்கிருக்க முடியாமல் இங்கு வந்தேன். இனி என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தேன். அவர்களும் இதை எப்படி எடுத்துக் கொள்வது, என்ன செய்வது என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன்"... மன்னிக்கவும்.

        அந்த எழுத்தாளர் அதுவரை அந்த நபர் மீதும், அந்த சிறுவர்கள் மீதும் கொண்டிருந்த கோபமெல்லாம் ஒரு கணத்தில் காற்றாய் பறந்து போயிற்று. அதற்குப் பதிலாக இரக்கமும், பச்சாதாபமும் மனதில் எழ அவர் மனைவி இறந்ததற்கு வருத்தம் தெரிவித்து விட்டு ஏதாவது உதவி தேவையா என்று மனதாரக் கேட்டார்.

15 January 2012

உங்கள் பாஸ்வேர்ட் களவு போகாமல் இருக்க?

password


உங்கள் பாஸ்வேர்ட் களவு போக எவ்வளவு நேரமாகும்? – 10 நிமிடம் போதும்

ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.

ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.

நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரிய தாகிவிடும்.

நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான்.

உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும். பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எழுத்துக்களில் abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?


இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.



6 எழுத்துக்கள்:

சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 10 மணி நேரம்
+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள்

7 எழுத்துக்கள்

சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 23 நாட்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்

8 எழுத்துக்கள்

சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்

9 எழுத்துக்கள்

சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்

14 January 2012

புயலுக்கு எப்படி பெயர் வைக்கிறார்கள்?



கடலூர் மாவட்டம், புதுச்சேரி மக்களுக்கு கடந்த வருடம் சோகமாகவே நிறைவு பெற்றுள்ளது. இதற்கு காரணம் தானே பேயாட்டம் ஆடியதே... தானே புயல் கடலூர் மற்றும் புதுச்சேரியை சின்னபின்னமாக ஆக்கி இருக்கும் இந்த தருணத்தில் புயலுக்கு யார், எங்கு பெயர் வைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்...
கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது. ஆஸ்திரேலியா நாட்டவர்கள்தான் முதன் முதலில் புயலுக்கு பெயர் சூட்டினார்கள்.
1950- ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கியது. இதையடுத்து சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியது.
அதன்படி ஒவ்வொரு மண்டலத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய மண்டலத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த மண்டலத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மா, ஏமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த 8 நாடுகளும் பட்டியலாக தயாரித்து கொடுத்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள பெயர்கள்தான் ஒவ்வொன்றாக புயல்களுக்கு சூட்டப்படுகின்றன.
கடந்த 2004- ஆம் ஆண்டு முதல் வங்கக்கடல் புயல்களுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 5 முறை புயல் ஏற்பட்டது. அந்தப் புயல்களுக்கு பட்டியலில் உள்ள வரிசைப்படி லைலா, பந்து, பெட், கிரி, ஜல் என்று பெயரிடப்பட்டன. இதில் லைலா பெயரை பாகிஸ்தான், பந்து பெயரை இலங்கை, பெட் பெயரை தாய்லாந்து, கிரி பெயரை வங்கதேசம், ஜல் பெயரை இந்தியா தேர்வு செய்து கொடுத்திருந்தன.
இதில் லைலா, ஜல் இரு புயல்களும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. 2011- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் முதல் புயல் தோன்றியது. அந்தப் புயலுக்கு மாலத்தீவு நாடு தேர்வு செய்து கொடுத்திருந்த கெய்லா என்ற பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு இரண்டாவதாக தற்போதைய புயல் தமிழ்நாட்டை குறி வைத்து வந்த இந்த புயலுக்கு பட்டியலில் உள்ள பெயர்களில் இருந்து தானே என்ற பெயர் தேர்வு செய்து சூட்டப்பட்டுள்ளது.
இந்த தானே பெயரை வழங்கியது மியான்மா நாடாகும். இந்த வரிசையில் அடுத்தடுத்து வரும் புயல்களுக்கு முர்ஜன் (ஓமன்), நீலம் (பாகிஸ்தான்), மகசென் (இலங்கை), பைலின் (தாய்லாந்து), ஹெலன் (வங்கதேசம்), லெகர் (இந்தியா) என்று பெயர்கள் சூட்டப்பட உள்ளன.

05 January 2012

புயல் கடந்த நகரம்



அழகிய புதுவை கடற்கரை சாலை - புயலுக்குப் பின்  

புயல் கடந்த தெருக்கள் புதுச்சேரி 
புதுவை - கடலூர் - கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில்...
காற்றின் ஆக்ரோசம்
நிலைகுலைந்த வீடுகள் 

பொங்கும் கடல் - கடலூர்