நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

12 July 2012

காலத்தால் அழியாத பழமொழிகள்

great words

பழங்கால பழமொழிகள் இன்றும் நடைமுறையில் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இன்று பார்ப்போம்.

  • அகத்தினழகு முகத்தில் தெரியும்
  • அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்
  • அடியாத மாடு படியாது
  • அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது
  • அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
  • அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
  • அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும்
  • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
  • அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்
  • அரசன் குடுமியையும் அம்பட்டன் பிடிப்பான்
  • அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன
  • அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்
  • ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
  • ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்
  • ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்
  • ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற
  • ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
  • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது
  • ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே
  • ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை
  • ஆறிலும் சாவு நூறிலும் சாவு
  • ஆனைக்கும் அடிசறுக்கும்
  • இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்
  • இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை
  • உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது
  • உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
  • எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்
  • எறும்பூரக் கல்லும் தேயும்
  • ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
  • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
  • கடுகு சிறிதானாலும் காரம் பெரிது
  • கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்
  • கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
  • கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
  • கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல
  • கழுதை அறியுமா கற்பூர வாசனை?
  • கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்
  • கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை
  • காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
  • காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்
  • காகம் திட்டி மாடு சாகாது
  • காய்த்த மரம்தான் கல்லடிபடும்
  • காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்
  • காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
  • குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு
  • குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்
  • குரைக்கிற நாய் கடிக்காது
  • கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு
  • கொல்லன் தெருவில் ஊசி விற்பது போல்
  • கோழி மிதித்துக் குஞ்சு சாகாது
  • கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்
  • சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல
  • சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்
    • சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது
    • சுவரிருந்தால் தான் சித்திரம் வரையலாம்
    • தடியெடுத்தவன் தண்டக்காரன்
    • தம்பியுள்ளான் படைக்கஞ்சான்
    • தன் வினை தன்னைச் சுடும்
    • தனிமரம் தோப்பாகாது
    • தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன
    • தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு
    • தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
    • நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்
    • நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை
    • நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்
    • நிறைகுடம் தளும்பாது
    • பசி வந்தால் பத்தும் பறந்திடும்
    • பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்
    • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது
    • பனை மரத்தடியில் பால் குடித்தது போல
    • பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்
    • பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்
    • புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது
    • பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்
    • பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்
    • போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
    • மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
    • மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்
    • மின்னுவதெல்லாம் பொன்னல்ல
    • முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு
    • முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல
    • முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்
    • முடியுள்ள சீமாட்டி எப்படியும் முடிப்பாள்
    • மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்
    • யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்
    • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
    • விரலுக்குத் தக்கதே வீக்கம்
    • விளையும் பயிரை முளையிலே தெரியும்
    • வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்
    • வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்
    • வெளுத்ததெல்லாம் பாலல்ல
    • பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்
    • பூவிற்றகாசு மணக்குமா?
    • பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்
    • பேராசை பெருநட்டம்
    • பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
    • வேலிக்கு ஓணான் சாட்சி
    • தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்
    • சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும?
    ----------------------------------------------------------------------------------------
    உங்களுக்கு இந்த வலைப்பூ பிடித்திருந்தால் 
    உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லலாமே,,

    -----------------------------------------------------------------------------------------


    11 July 2012

    TNPSC குரூப் IV (07-07-2012) கேள்விகளுக்கான விடைகள்


    07-07-2012 நடைப்பெற்ற TNPSC Group IV 2012 (07-07-2012) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம்.. 


    PDF வடிவில் இருக்கும் இந்த விடைகளை, நீங்கள் எழுதியுள்ள விடைகளோடு ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள்.. 

    தேர்வுத்தாளின் விடைகளைப் பெற இந்த இணைப்பில் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.....


    1
    GENERAL KNOWLEDGE
    2. GENERAL TAMIL
    3. GENERAL ENGLISH

    4.  HINDU RELIGIOUS (SAIVAM & VAINAVAM) 


    மூன்று பகுதிகளுக்கான வினா விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. டிக் மார்க் செய்துள்ள விடைகள் சரியானதாக இருக்கும்..

    வெற்றிப் பெற அனைவருக்கும் வாழ்த்துகள்.. சில தளங்கள் தங்களது ட்ராபிஃக் ரேங்கை அதிகப்படுத்தும் நோக்குடன் நேற்றிலிருந்து தவறான தகவல்களை அளித்து வருகிறது.. அரசு இணையதளத்தை தவிர மற்ற தளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...

    அடுத்து வரும் TNPSC குரூப் II மற்றும் VAO தேர்விற்கு தயாராகுங்கள்...


    வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்...


    ----------------------------------------------------------------------------------------
    உங்களுக்கு இந்த வலைப்பூ பிடித்திருந்தால் 
    உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லலாமே,,

    -----------------------------------------------------------------------------------------

    10 July 2012

    பயனுள்ள மருத்துவ குறிப்புகள்-பாகம் I

    மருத்துவம்

    • சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளான வர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
    • வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்... உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.
    • நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.
    • காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.
    • வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்... வெறும் கொய்யா இலைகளை மெல்வது தான்.
    • சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.
    • வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
    • நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.
    • உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.
    • மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்,
    ----------------------------------------------------------------------------------------
    உங்களுக்கு இந்த வலைப்பூ பிடித்திருந்தால் 
    உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லலாமே,,

    -----------------------------------------------------------------------------------------

    09 July 2012

    தெரிந்து கொள்ள வேண்டிய தினங்கள்


    உலகின் முக்கிய தினங்கள்
    ஜனவரி
    26
     உலக சுங்க தினம்
    ஜனவரி
    30
     உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
    பிப்ரவரி
    14
     உலக காதலர் தினம்
    மார்ச்
    08
     உலக பெண்கள் தினம்
    மார்ச்
    15
     உலக நுகர்வோர் தின