"பிறரின் இறப்பிற்கு கண்ணீர் கொடு"
"பிறரின் கண்ணீருக்கு இரத்தம் கொடு"
"பிறரின் கண்ணீருக்கு இரத்தம் கொடு"
இரத்தத்தில் A, B, AB, O மற்றும் அதில் பாஸிட்டிவ் நெகடிவ் ஆகிய உட்பிரிவுகள் உள்ளன. இரத்தத்தின் பிரிவுகளை கண்டுபிடித்தவர் கார்ல் லாண்ட்ஸ்டீனர். அவர் பிறந்த ஜூன் 14ம் தேதி தான் இரத்த தான நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
"மனித நேயத்தை சொற்களால் அல்ல
இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்”
விபத்து மற்றும் அறுவை சிகிச்சைகளின் போது இரத்தம் தேவைப்படுவதால் நாம் தானம் செய்யும் இரத்தம் ஒருவருடைய உயிர் காக்கும் பணிக்கு உதவுகிறது.
ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும்.
3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும்.
உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.
"அனைவரையும் இரத்த சொந்தங்களாக்க
இரத்த தானம் செய்வோம்"
யார் யார் இரத்த தானம் செய்யலாம்
- 17 முதல் 60 வயது வரையுள்ள எல்லா ஆண்களும் பெண்களும் இரத்ததானம் செய்யலாம்.
- இதில் இரத்த தானத்தின்போது எடுக்கப்படும் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் மட்டுமே.
- இரத்ததானம் செய்பவரின் இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு மேல் இருக்க வேண்டும்.
- இரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.
- மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம்.
- இரத்ததானம் செய்ய இருபது நிமிடங்களே ஆகும்.
- இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.
- இரத்ததானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம்.
- சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா-காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தீவிரமான தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள்
- வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பால் வினை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
- கடந்த ஒரு வருடத்தில் மஞ்சள் காமலையால் பாதிக்கப்பட்டவர்கள், மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், சமீபத்தில் நோய் தடுப்பு ஊசி போட்டவர்கள், கர்பிணிப் பெண்கள், குழந்தைக்கு பால் கொடுப்பவர்கள், மாதவிடாய் காலத்தில் இருப்பவர்கள்.
- இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது.
- எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்ததானம் கண்டிப்பாக செய்யக்கூடாது.
- இரத்த தானம் என்ற வாக்கியத்திலேயே தானம் என்று இருப்பதால் இரத்தத்தை தானம் மட்டுமே செய்ய வேண்டுமே தவிர விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.
- இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்
- இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
- இரத்ததானம் செய்வதால் இரத்த அழுத்தம் குறைகிறது.
- மாரடைப்பு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....