28 March 2012
25 March 2012
உங்கள் பிளாக்கை பிரபலப்படுத்த 30க்கும் மேற்பட்ட திரட்டிகளின் தொகுப்பு
நம்முடைய வலைப்பூ பிரபலமாக வேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இருக்காது ... அவர்களுக்காக இந்த பதிவு.....
வலைப்பூக்கள் பிரபலமடைவதற்கு திரட்டிகளின் பங்கு அதிகம். இத்திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டால் போதும்.. பலரும் உங்கள் பதிவுகளைப் படிக்க ஒரு வாய்ப்பு உருவாகும். இத்தகைய திரட்டிகளின் தொகுப்பை கீழே கொடுத்திருக்கிறேன். பயன்படுத்திப்பாருங்கள்.
உங்கள் பிளாக்கரை முதன்மையாக்குவதில் முக்கியப் பங்கு இந்த திரட்டிகளைச் சாரும். அத்தகைய முப்பதுக்கும் மேற்பட்ட திரட்டிகள் ஒரே இடத்தில்.. காண இங்கு கிளிக் செய்யவும்.
உங்கள் பிளாக்கரை முதன்மையாக்குவதில் முக்கியப் பங்கு இந்த திரட்டிகளைச் சாரும். அத்தகைய முப்பதுக்கும் மேற்பட்ட திரட்டிகள் ஒரே இடத்தில்.. காண இங்கு கிளிக் செய்யவும்.
இந்த இணைப்பில் சென்று வலது மேல் மூளையில் download Original என்பதை கிளிக் செய்து பி.டி.எப் ஆக இருக்கும் கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பயன்படுத்தி பாருங்கள் பிடித்திருந்தால் கருத்துகளை சொல்லுங்கள்..
சிந்தனை கார்னர்:
"உலகில் மிகவும் கடினமானவை மூன்று மட்டுமே:
1. ரகசியங்களைக் காப்பது.
2 .பிறர் நமக்கு செய்த தீங்கை மறப்பது,
3 . ஓய்வு நேரத்தை பயனுள்ள வழிகளில் செலவழிப்பது"....
-- ஹிலோன்
----------------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த வலைப்பூ பிடித்திருந்தால்
உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லலாமே,,
----------------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த வலைப்பூ பிடித்திருந்தால்
உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லலாமே,,
----------------------------------------------------------------------------------------
Labels:
கம்ப்யூட்டர்,
கல்வி,
தகவல் களஞ்சியம்,
தினம் ஒரு தகவல்,
பொது அறிவு
23 March 2012
கோடை காலத்தை சமாளிக்கலாம் வாங்க - I
Labels:
ஆரோக்கியம்,
கோடை டிப்ஸ்,
தகவல் களஞ்சியம்,
தினம் ஒரு தகவல்
19 March 2012
உங்களை அடிமைப்படுத்தக்கூடியது "ஐஸ்கிரீம்"
அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட கூடியவரா நீங்கள் முதலில் இதை படியுங்கள்...
ஐஸ்கிரீம் பிரியர்களே ஜாக்கிரதை! ஐஸ்கிரீம் உங்களுக்கு உயிருக்கு உயிரானது தான். ஆனால் இதுவும் "கோகைன்" போதைபொருளை போல அடிமைபடுத்த கூடியது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் 'கோகைன்', 'ஐஸ்கிரீம்' இரண்டுக்கான தாகமும் ஒன்றுதான் என்கிறார்கள் இவர்கள்.
Labels:
ஆரோக்கியம்,
உடல் நலம்,
கோடை டிப்ஸ்,
தகவல் களஞ்சியம்,
தினம் ஒரு தகவல்
17 March 2012
பெட்ரோல் போடப் போகிறீர்களா?
உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா?
அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்.
எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக் கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.
பெட்ரோல் வணிகத்தில் வெப்பஅளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள்.
அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.
அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும்போதுதான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.
நன்றி; http://www.keetru.com/
பெட்ரோல் நிலையத்தின் உள்ளே நுழையும் முன்,
எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க,
அனைவரின் பாதுகாப்புக்காகவும்,
உங்களது செல்போன் சுவிட்ச்ஆஃப் செய்யப்பட்டுள்ளதா
என்று உறுதி செய்துகொள்ளுங்கள்.
11 March 2012
நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள்!
முதலில் கலோரி என்றால் என்ன? என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
நாம் உண்ணும் உணவு, உயிர்வளியுடன் சேர்ந்து எரி சக்தியாக மாற்றமடைகிறது. இவ்வுடல் சக்தி உருவாகக் காரணமாக அமையும் எரிபொருள் சக்தியே கலோரி ஆகும்.செல்லில் உள்ள மைட்டோகாண்டிரியா என்ற பகுதியில் தான் எரிதல் நடைபெறுகிறது. நம் உடல் நன்கு செயல்பட ஒரு குறிப்பிட்ட அளவு கலோரி நமக்குத் தேவை. இத்தேவை நம் உடல் பருமன், நாம் செய்யும் வேலை இவற்றைப் பொருத்து அமையும்.
நாம் பலவிதமான உணவுகளை உட்கொள்கிறோம். சாதாரண பிஸ்கெட்டில் இருந்து பிரியாணி வரை சுவை சுவையாய், வகை வகையாய் சாப்பிடுகிறோம். ஆனால் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து நமக்கு எவ்வளவு கலோரி சக்தி கிடைக்கிறது என நமக்குத் தெரியுமா?
பொதுவாக நாம் உட்கொள்ளும் சில உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள் விவரம்:
பால் பொருட்கள்
பால் 1 டம்ளர் (200 மில்லி) - 140 கலோரிகள்
காபி - 140 கலோரிகள்
ஆடை நீக்கிய பால் 1 டம்ளர் - 40 கலோரிகள்
வெண்ணெய் 1 டீ ஸ்பூன் - 150 கலோரிகள்
வெண்ணெய் 1 டீ ஸ்பூன் - 150 கலோரிகள்
நெய் 1 டீ ஸ்பூன் - 45 கலோரிகள்
பழங்கள்
வாழைப்பழம் 1 பெரியது - 60 கனலிகள்
மாம்பழம் 1 சிறியது - 100 கலோரிகள்
ஆப்பிள் 1 - 60 கலோரிகள்
மாம்பழம் 1 சிறியது - 100 கலோரிகள்
ஆப்பிள் 1 - 60 கலோரிகள்
ஆரஞ்சு (நடுத்தரம்) - 50-60 கலோரிகள்
நீர் நிறைந்த பழங்கள், காய்கறிகள் - 40 கலோரிகள்
கடின பழங்கள்,காய்கறிகள் - 60-100 கலோரிகள்
பழச்சாறு சர்க்கரையுடன் - 150 கலோரிகள்
பழச்சாறுசர்க்கரையின்றி - 100 கலோரிகள்
300 மில்லி பானங்கள் - 250 கலோரிகள்
பழச்சாறு சர்க்கரையுடன் - 150 கலோரிகள்
பழச்சாறுசர்க்கரையின்றி - 100 கலோரிகள்
300 மில்லி பானங்கள் - 250 கலோரிகள்
சமைத்த பண்டங்கள்
அரிசி 25 கிராம் - 80 கலோரிகள்
அரிசி 25 கிராம் - 80 கலோரிகள்
இட்லி 2 - 80 கலோரிகள்
உப்புமா - 150 கலோரிகள்
தோசை (2ஸ்பூன் எண்ணெய்) - 140 கலோரிகள்
பூரி (2) உருளை - 250 கலோரிகள்
பொங்கல் (நெய் இல்லாமல்) - 100 கலோரிகள்
பொங்கல் நெய்யுடன் - 190 கலோரிகள்
2 சப்பாத்தி எண்ணெய் சேர்த்தது - 120 கலோரிகள்
2 சப்பாத்தி எண்ணெயின்றி - 80 கலோரிகள்
1 வடை - 140 கலோரிகள்
பூரி (2) உருளை - 250 கலோரிகள்
பொங்கல் (நெய் இல்லாமல்) - 100 கலோரிகள்
பொங்கல் நெய்யுடன் - 190 கலோரிகள்
2 சப்பாத்தி எண்ணெய் சேர்த்தது - 120 கலோரிகள்
2 சப்பாத்தி எண்ணெயின்றி - 80 கலோரிகள்
1 வடை - 140 கலோரிகள்
வெஜிடபிள் பிரியாணி ஒரு கப் - 200 கலோரிகள்
பரோட்டா 1 - 120 கலோரிகள்
ஒரு சாப்பாடு (சைவம்) - 500-600 கலோரிகள்
அசைவ உணவுகள்
மீன் 50 கிராம் - 55 கலோரிகள்
இறைச்சி - 75 கலோரிகள்
முட்டை - 75 கலோரிகள்
மட்டன் பிரியாணி ஒரு கப் - 225 கலோரிகள்
கோழிக்கறி 100 கிராம் - 225 கலோரிகள்
கோழிக்கறி 100 கிராம் - 225 கலோரிகள்
மற்ற பண்டங்கள்
இனிப்பு பிஸ்கட் 15 கிராம் - 70 கலோரிகள்
கேக் 50 கிராம் - 135 கலோரிகள்
கேரட் அல்வா 45 கிராம் - 165 கலோரிகள்
ஜிலேபி 20 கிராம் - 100 கலோரிகள்
ரசகுல்லா - 140 கலோரிகள்
ஒரு மனிதனின் வயதிற்கேற்ப தேவைப்படும் கலோரிகள்
வயது ஆண் பெண்
20-30 3200 2300
20-30 3200 2300
30-40 3100 2200
40-50 3000 2160
50-60 2750 2000
60-70 2500 1800
>70 2200 1500
09 March 2012
தினம் ஒரு தகவல் - இன்று மின்சாரத்தை சேமிக்க சில டிப்ஸ்கள்
தவிர்க்கவே முடியாதது... தமிழகமும் மின் வெட்டும் என்றாகிவிட்டது!மின்சாரம் இருக்கும் நேரங்களில் அதை அதீதமாகச் செலவழிப்பது, மின் வெட்டு நேரத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே, மின் சிக்கனம் தேவை இக்கணம்.
டாஸ்க் லைட்டிங்’ எனும் முறையைப் பின்பற்றலாம். அதாவது, உங்கள் வேலைக்குத் தேவையான மின்சாரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். உதாரணமாக, படுக்கை அறையில் புத்தகம் படிக்கும் சமயம், மொத்த அறைக்குமான விளக்கை ஒளிரவிடாமல், டேபிள் லேம்ப்பை மட்டும் பயன்படுத்துவது.
Labels:
தகவல் களஞ்சியம்,
தினம் ஒரு தகவல்
08 March 2012
தாய்மார்களுக்காக: தாய்ப்பாலை தவிர்க்கலாமா?
ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் குழந்தையின் உடல் நலம், வளர்ச்சி குறித்த பல பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.
இந்தக் காலகட்டத்தில் ஒரு தாய் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் வழிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தை பிறக்கும் காலம்
ஒரு குழந்தை கருவில் உருவான காலத்தில் இருந்து 37 முதல் 40 வாரங்களில் பிறக்க வேண்டும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் முழுவளர்ச்சி பெற்ற, குறித்த காலத்தில் பிறந்த குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றன.
37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்கு முன் பிறந்த குழந்தைகள்.
41 வாரங்களுக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்குப் பின்பிறந்த குழந்தைகள்.
குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் முழுமையான வளர்ச்சி நிலையை அடையாததால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
பிறக்கும் குழந்தையின் எடை
ஒரு இந்தியக் குழந்தை பிறக்கும் போது இருக்க வேண்டிய சராசரி எடை 2.5 முதல் 3.5 கிலோ கிராம் ஆகும்.
எடை 2 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் இந்தக் குழந்தைகளை ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள் என்று அழைக்கிறோம்.
உடல் எடை அதிகரித்து, உடல் இயக்கங்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படும் வரை, இந்தக் குழந்தைகளை NEONATAL INTENSIVE CARE UNIT (NICU) என்று அழைக்கப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
எடை 1.5 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் அந்தக் குழந்தைகள் மிக ஆபத்தான நிலையில் உள்ளவையாகக் கருதப்பட்டு மிகப் பிரத்தியேகக் கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.
பராமரிப்பில் முக்கியமானவை:
தாய்ப்பால் கொடுத்தல்
மசாஜ்
குளிப்பாட்டுதல்,
தோல் பராமரிப்பு
கண்கள், தொப்புள் கொடி பராமரிப்பு
எடை
தடுப்பு ஊசிகள்
பிற உணவுகள் கொடுத்தல்
தாய்ப்பால்
தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன.
இன்றைய சமுதாயச் சூழலில் பல தாய்மார்களுக்குப் பாலூட்டும் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பிற்காலத்தில் குழந்தைகள் பல நோய்களை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.
தாய்ப்பால் ஊட்டுவதால் உள்ள நன்மைகள்:
தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது.
தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது.
குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது.
கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.
குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லா சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது.
Ovarian (முட்டையகம்), Uterine (கருப்பை), Endometrium (கருப்பை உட்சளிப் படலம்), Breast (மார்ப்பு) யில் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறையும்.
பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் செரிமானம் ஆகும்.
அலர்ஜி ஆகும் வாய்ப்புகள் குறைவு.
குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் பல நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.
தாய்ப்பால் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதைத் தடுக்கும். ஏனெனில் தாய்ப்பாலானது மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் உள்சுவரில் நடு பாதுகாப்பு படலத்தை ஏற்படுத்துகிறது.
தாய்ப்பால் கொடுப்பதால் லூக்கேமியா எனும் இரத்த சம்பந்தமான கான்சர் சர்க்கரை நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவதை தடுக்கிறது.
தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்’ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் ஊட்டுவதை எப்போது துவங்குவது?
குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் துவங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.
நார்மல் டெலிவரி எனில் பிரசவம் ஆன 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பாலூட்டத் துவங்கலாம்.
சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளி வந்த உடன் பாலூட்டத் துவங்கிவிடலாம்.
சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும்.
ஒரு சராசரி இந்தியத் தாயின் உடலில் ஒரு நாளில் சுரக்கும் பாலின் அளவு 700 மி.லிட்டர் முதல் 1000 மி. லிட்டர் வரை உள்ளது.
குழந்தைக்கு 1 வயது ஆகும் வரையிலும் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். ஒன்றரை வயதுவரை ஊட்டுவது நன்று.
சில தகவல்கள்.....
கொலஸ்ட்ரம்
பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த கொலஸ்ட்ரம் என்ற வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும்.
தாய்ப்பால்
பிரசவம் ஆன மூன்று நாட்களுக்குப் பின் சுரக்கத் துவங்கும் பாலில் குழந்தைக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருக்கும்.
ஊட்டும் போது முதலில் வரும் பால்
பாலூட்டத் துவங்கும் போது முதலில் வரும் பாலில் புரதம், மாவுச் சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆகியவை அதிகம் இருக்கும்.
கடைசியில் வரும் பால்
பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.
தடுப்பூசி, பிற உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கலாம்.
07 March 2012
தினம் ஒரு தகவல் - இன்று பேஸ்புக் ஒரு சிறப்புப் பார்வை
இந்த வலைத்தளம் 2004 - ஆம் ஆண்டு ஆரம்பமானது. மார்க் எலியட் ஜூகர்பெர்க் என்பவர் தனது நண்பர்கள் டஸ்டின் மாகேவிச் எடுராடோ சாவரின், கிரிஸ்ஹியூக்ஸ் ஆகியோருடன் இணைந்து இந்தத் தளத்தை உருவாக்கினார்.
தான் படித்த ஹார்வேட் பல்கலைக் கழகத்தில் விளையாட்டாய் உருவாக்கிய இந்தத் தளம் இன்று உலகெங்கும் பரவி 900 மில்லியன் பயன்பாட்டாளர்களுடன் பிரமிப்பூட்டுகிறது.
ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனரும் சராசரியாக 130 நண்பர்களைக் கொண்டிருக்கின்றனர் என்கிறது பேஸ்புக்கின் ஒரு ஆய்வு.
900 மில்லியனுக்கும் மேற்பட்ட பொருட்களில் மக்கள் இதின் வழியே ((Pages, Groups, Events and Community pages) )பயனிக்கிறார்களாம்.
இன்றைய ஃபேஸ்புக்கில் 13 வயதான நபர்கள் சேரலாம்
சராசரியாக ஒவ்வொரு பயனரும் 80 மேற்பட்ட ( community pages, groups and events) போன்றவைகளில் இணைக்கப்படுகிறார்கள்.
பேஸ்புக்கின் வழியாக ஒரு நாளைக்கு 250 மில்லியன் படங்கள் ஏற்றப்படுகிறது (image upload)
70 க்கும் அதிகமான மொழிகளில் பயன்படுத்தும் வகையில் இருப்பது இதன் சிறப்பு.
80 % சதவீததிற்கும் மேற்பட்ட பயனர்கள் United States அல்லாத வெளிநாட்டினரே!
பேஸ்புக்கின் வழியாக ஒரு நாளைக்கு 250 மில்லியன் படங்கள் ஏற்றப்படுகிறது (image upload)
70 க்கும் அதிகமான மொழிகளில் பயன்படுத்தும் வகையில் இருப்பது இதன் சிறப்பு.
80 % சதவீததிற்கும் மேற்பட்ட பயனர்கள் United States அல்லாத வெளிநாட்டினரே!
முகநூல் நிறுவனம் 2,000 ஊழியர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
பேஸ்புக்கை தினமும் 300,000 மேற்பட்ட பயனர்கள், மொழிபெயர்ப்பு பயன்பாட்டைப்(translations application) பயன்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.
பேஸ்புக் பயனர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 20 மில்லியன் பயன்பாடுகளை (Apps) இதன் வழியே நிறுவிக்கொள்கின்றனர்.
பேஸ்புக்கிற்கான இயங்குதளத்தையோ அல்லது பயன்பாட்டையோ ஒவ்வொரு மாதமும் 500 மில்லியனுக்கும் மக்கள் மற்ற தளங்களில் பயன்படுத்துகின்றனர்.
மாதந்தோறும் 7 மில்லியனுக்கு மேற்பட்ட பயன்பாடுகளும்(Applications), வலைதளங்களும்(Websites) பேஸ்புக்குடன் ஒருங்கிணைப்படுகின்றன.
350 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களின் மொபைலின்(Mobile) மூலமே பேஸ்புக்கை அணுகுகின்றனர்.
475 மேற்பட்ட மொபைல் தயாரிப்பாளர்கள் பேஸ்புக்கின் மொபைல் பயன்பாடுகளை பயன்படுத்துகின்றனர்.
பேஸ்புக்கை தினமும் 300,000 மேற்பட்ட பயனர்கள், மொழிபெயர்ப்பு பயன்பாட்டைப்(translations application) பயன்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.
பேஸ்புக் பயனர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 20 மில்லியன் பயன்பாடுகளை (Apps) இதன் வழியே நிறுவிக்கொள்கின்றனர்.
பேஸ்புக்கிற்கான இயங்குதளத்தையோ அல்லது பயன்பாட்டையோ ஒவ்வொரு மாதமும் 500 மில்லியனுக்கும் மக்கள் மற்ற தளங்களில் பயன்படுத்துகின்றனர்.
மாதந்தோறும் 7 மில்லியனுக்கு மேற்பட்ட பயன்பாடுகளும்(Applications), வலைதளங்களும்(Websites) பேஸ்புக்குடன் ஒருங்கிணைப்படுகின்றன.
350 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களின் மொபைலின்(Mobile) மூலமே பேஸ்புக்கை அணுகுகின்றனர்.
475 மேற்பட்ட மொபைல் தயாரிப்பாளர்கள் பேஸ்புக்கின் மொபைல் பயன்பாடுகளை பயன்படுத்துகின்றனர்.
வியாபாரிகளும், நிறுவனங்களும் தங்களுடைய பொருள்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வழியாக முகநூலைக் கருதுகின்றனர்.
ஒரே எண்ணம், விருப்பம் உடையவர்களை ஒன்றிணைக்கும் தளமாக உள்ளது.
பிரிந்து போன குடும்பங்கள் இந்த முகநூல் மூலம் ஒன்று சேர்ந்த நிகழ்வுகளும் உண்டு.
சிலர் நண்பர்கள், உறவினர்களிடம் தொடர்பு கொள்ளும் தளமாகக் கருதினாலும், வேறு சிலர் நேரடித் தொடர்பு இல்லாததால் முகநூல் மூலம் சமூகக் குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதுகின்றனர்.
அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இணைய முழுவதிலும் ஃபேஸ்புக்
தான் இரண்டாவது மிகப் பரவலமான இணையத்தளமாகும்.
06 March 2012
எடைக்கேற்ற அளவு தண்ணீர்
- 50 முதல் 60 கிலோ எடை கொண்டவர்கள் 24 மணி நேர தேவைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் பருகவேண்டும். இது வெறும் தண்ணீர் மட்டும் என்றில்லை. காய்கறி, பழங்கள், ஜூஸ், கூட்டு, குழம்பு, சாம்பார் போன்றவைகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரையும் இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.
- உடலில் இருந்து வெளியாகும் நீரை சமன் செய்வதற்காக தண்ணீர் பருகுகிறோம். ஒருவரது உடலில் இருந்து நாள் ஒன்றுக்கு ஒன்றரை லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது. மலம் வழியாக 200 முதல் 300 மி.லி. தண்ணீர் வெளியேறுகிறது.
- சுவாசம் வழியாக 300 முதல் 400 மி.லி. நீர் வெளியேறுகிறது. வியர்வை மூலம் 300 முதல் 400 மி.லி. வெளியேறுகிறது. இதை சரிக்கட்டத்தான் நாம் தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் பருக வேண்டியிருக்கிறது. கோடை காலத்தில் வியர்வை அதிகமாவதால் அதை ஈடுகட்டும் விதத்தில் பருகும் தண்ணீர் பொருட்களின் அளவை அதிகரிக்கவேண்டும்.
- ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் அளவு அதிகரிக்கும். அப்போது உட்கொள்ள வேண்டிய தண்ணீரின் அளவினை அதிகரிக்க வேண்டும்.
- கூடவே உடல் உஷ்ணத்தை தவிர்க்கவும் தண்ணீர் அதிகம் தேவைப்படும். கோடை காலத்திலும், காய்ச்சல் ஏற்படும் காலத்திலும் அதிகமான அளவு தண்ணீரை உட்கொள்ள வேண்டும். இப்போது கோடைகாலம் என்பதால் வெயில் அனலாய் கொளுத்துகிறது. மதிய நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியவில்லை.
- இந்த வெயில் காலத்தில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் டீஹைடிரேஷன் என்கிற நீர்ச்சத்தின்மை பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த பாதிப்பு ஏற்பட்டால் மூளை, இதயம், சிறுநீரகம் ஆகிய உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும்.
- டீஹைடிரேஷன் ஆரம்ப நிலையில் இருந்தால் தண்ணீர் மற்றும் பழச்சாறு தேவையான அளவு எடுத்துக்கொள்வதன் மூலம் அந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். அதனால், தண்ணீர் நிறைய குடியுங்கள். முக்கியமாக, அதை சுத்தமாக குடியுங்கள்.
- இந்த சீசனில் என்னென்ன பழங்கள் கிடைக்கின்றனவோ, அவற்றை வாங்கிச் சாப்பிடுங்கள்.வெயிலில் அதிக நேரம் அலையாதீர்கள். அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் பின்பற்றினால் நீர்ச்சத்து குறைவால் ஏற்படும் பாதிப்புகள் வராது.
---------------------------------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த வலைப்பூ பிடித்திருந்தால்
உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லவும்.
----------------------------------------------------------------------------------------------------------
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..?
நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஆனால் ஒரே நேரத்தில் இதை அருந்துவது நல்லதல்ல. 3 அல்லது 4 மணி நேர இடைவெளிக்கு ஒரு முறை நீர் அருந்த வேண்டும். மேலும், குழம்பு, ரசம், மோர், ஜூஸ் போன்றவற்றாலும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்துவிடுகிறது.
எனக்குத் தாகமே எடுப்பதில்லை. அதனால் நான் தண்ணீர் பெரும்பாலும் குடிப்பதில்லை ஆனாலும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சிலர் பெருமிதமாகக் கூறுவதுண்டு.
ஆரம்பத்தில் இவர்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பது போல் தோன்றும். ஆனால் நாளடைவில் சிறுநீரகங்களில் செயல்பாடுகள் செயலிழக்க ஆரம்பிக்கும்.
ஒருவர் 4 மணி நேரத்திற்குமேல் நீர் அருந்தாமல் இருப்பது தவறு. ஏனெனில் ஆரோக்கியமான மனிதர்கள் போதிய அளவு நீர் அருந்தாவிட்டால் உடலிலிருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் போகும் போது சிறுநீர் குழாயில் எரிச்சல் உண்டாகும். சிறுநீரகத்தில் கழிவுப் பொருட்கள் தங்கி சிறுநீரகக் கல்லாக மாறக்கூடும்.
சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும். இது இயல்பு நிலையில் உள்ளவர்களுக்கு. அதிகளவு நீர் அருந்துவதும் உடலுக்கு நல்லதல்ல. ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்யவேண்டியிருக்கும். மேலும் சிறுநீரகத்தின் செயல்பாடும் அதிகமாக இருக்கும். இது உடலுக்கு நாளடைவில் தீங்கை ஏற்படுத்தும்.
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அருந்துவதில் தவறில்லை. இது உடலுக்கு மிகவும் நல்லது. அதற்காக ஒரே நேரத்தில் 1 லிட்டருக்கு மேல் நீர் அருந்துவது தவறு. தினமும் இடைவெளி விட்டு ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தினால் உடலுக்கு போதுமானது. இவ்வாறு செய்துவந்தால் நன்கு பசி உண்டாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
பொதுவாக நீரிழிவு நோய், காசநோய், மதுப்பழக்கம் புகைப்பழக்கம் உள்ளவர்கள், முதியவர்கள், அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.
அதுபோல் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும்போதும், தேர்வு எழுதச் செல்லும்போதும், அல்லது அவசரமாக வெளியே செல்லும்போதும் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். இதில் கெடுதல் ஏதும் இல்லை.
குறைந்த அளவு நீர் அருந்துவதும், அளவுக்கு அதிகமாக நீர் அருந்துவதும் நல்லதல்ல. சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் நீர் அருந்துவதால் நீண்ட ஆரோக்கியத்தைப் பெறுவது நிச்சயம்.
Subscribe to:
Posts (Atom)