நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

23 March 2012

கோடை காலத்தை சமாளிக்கலாம் வாங்க - I

ரம்பித்துவிட்டது கோடை வெயில்! வாட்டியெடுக்கும் இந்த வெம்மையின் தாக்கம் அக்னி நட்சத்திரத்தில் உச்சம் தொட்டு, நம்மை சுட்டெரித்தபின்தான் மலையேறும். அதுவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ‘கசகச… நசநச’தான்.



இந்தக் கோடை உஷ்ணத்தின் தாக்கத்தைத் தவிர்க்க முடியாது. என்றாலும், இயன்றவரை நம்மை வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். சருமப் பாதுகாப்பு, உணவு முறை, கோடை நோய்கள், குளுகுளு தோட்டம், வீட்டின் அமைப்பில் மாற்றம் என உங்களுக்கு கோடையிடமிருந்து தப்பிக்க கோடை துணுக்குகள் இங்கே அணிவகுக்கின்றன..

வெயில் தரும் சரும பிரச்னைகள் என்ன?

வியர்வை, வேர்க்குரு, கறுத்துப் போவது, கண்கள் சோர்வது என இந்த கோடை நமக்காக வைத்திருக்கும் சருமப் பிரச்னைகள் ஏராளம். அவற்றிலிருந்து விடுபட

இதோ பத்து துணுக்குகள்…

1. வெயிலின் தாக்கத்தை மட்டுப்படுத்த சன் ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்தலாம். அது தரமான லோஷனாக இருக்கவேண்டியது அவசியம்.

2. சன் ஸ்கிரீன் லோஷன் போட்டவுடன் வெயிலில் வெளியேறாமல், பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் கழித்து, சருமத்தில் லோஷன் செட் ஆனவுடன் வெளியே கிளம்பினால்தால் அது முழுமையாகவும் எஃபெக்டிவ்வாகவும் வேலை செய்யும்.

3. உதடு வெடித்து உலர்ந்து போய் கிடக்கிறதா..? வாஸ்லின் அல்லது ‘லிப் பாம்’ உபயோகிக்கலாம். தயிர், வெண்ணெய் போன்றவற்றை உதட்டில் தடவுவதும் நல்ல பலன் தரும்.

4. வெம்மையால் முகம் கறுத்து, எண்ணெய் வழிந்து, அழுக்கு சேர்ந்து பொலிவிழக்கும். வெயிலில் வெளியில் சென்று வந்ததும் காய்ச்சாத பாலை பஞ்சில் தோய்த்து, முகத்தில் சற்று அழுத்தி தேய்த்தெடுக்க, வியர்வையால் சேர்ந்த அழுக்குகள் நீங்கும். கடைகளில் கிடைக்கும் ‘க்ளென்சிங் மில்க்’ என்பதையும் பயன்படுத்தலாம்.

5. கோடைக் காலத்தில் அதிக வியர்வையால் தலையில் பிசுபிசுவென்றாகி அழுக்கு சேர, முடி கொத்துக் கொத்தாக கொட்டும். இதற்கு, அடிக்கடி தலைக்குக் குளித்து கேசத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் தினமும் இரண்டு டீ ஸ்பூன் நெல்லிச்சாறு குடிப்பது பிரச்னைக்குத் தீர்வைத் தரும்.

6. வெயிலில் கேசம் அதிகம் வறண்டு போகாமல் இருக்க, தினமும் இரவு தலைக்கு எண்ணெய் வைத்து, காலையில் அலசலாம். இதனால் பொடுகும் அண்டாது.

7. வாரம் இருமுறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க, உடலின் உஷ்ணம் இறங்கும். குழந்தைகளுக்கும்கூட!

8. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாடாய்ப்படுத்தும் விஷயம்… வேர்க்குரு. வியர்வை வெளியேறும் சருமத் துளைகள், அழுக்கினால் அடைபடுவதால் உண்டாவதுதான் இந்த வேர்க்குரு.

9. கொழுப்புச் சுரப்பிகளின் நுண்துளை வாய்ப்பகுதி வியர்வை, அழுக்கினால் அடைபடுவதால், அதிகமாக பருக்களும் தோன்றும். குறிப்பாக, கோடையில் இளம் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும்.

10. ‘ஒரு நாளைக்கு ஒரு முறைதான் குளிப்பேன்’ என்று கொள்கைப் பிடிப்போடு இருக்காமல், தினமும் காலை, இரவு என இரண்டு முறை குளிப்பதுடன், அடிக்கடி முகம், கை, கால் கழுவிக் கொள்ளலாம். கோடை முழுக்க இறுக்கமான உடைகளைத் தவிர்த்து, வியர்வையை உறிஞ்சும் காற்றோட்டமான பருத்தி ஆடைகள் அணியலாம்.

நலமுடன் வாழ்க!!
சிந்தனை கார்னர்:
"தொட்டுவிடும் தூரத்தில் வெற்றியும் இல்லை....
அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை"....
                                                                                           -- பில்கேட்ஸ்
----------------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த வலைப்பூ பிடித்திருந்தால் 
உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லவும்

----------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....