வழக்கமான பகோடாவிற்கு பதில் முட்டைக்கோஸ் தூள் பகோடா செய்து பார்ப்போம். வித்தியாசமான சுவையுடன் சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். சத்தானதும் கூட. செய்முறை இதோ..
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் -- 200௦ கிராம்
பெரிய வெங்காயம் -- 2
பச்சை மிளகாய் -- 2
மிளகாய் தூள் -- 1/2 டீஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி -- ஒரு கைப்புடி
கடலை மாவு -- ஒரு கப்
அரிசி மாவு -- ஒரு கைப்புடி
சோடா உப்பு -- ஒரு சிட்டிகை
உப்பு -- தேவையான அளவு
சமையல் எண்ணெய் -- தேவையான அளவு
செய்முறை
- முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், பச்சைக் கொத்தமல்லி தழை இவைகளை பொடியாக அறிந்து கொள்ளவும்.
- பூண்டு தட்டி வைத்து கொள்ளவும்.
- கடலை மாவு, அரிசி மாவுடன், நறுக்கிய முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி மற்றும் பூண்டு சேர்க்கவும். இந்தக் கலவையில் சோடா உப்பை தெளிதாற்போல் விட்டு கிளறிக் கொள்ளவும்.
- சமையல் எண்ணெய் 2 டீஸ்பூன் எடுத்து காய வைத்து சூடான எண்ணையை பகோடா மாவில் ஊற்றி பிசையவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பகோடா மாவை உதிர்த்தாற்போல போட்டு மொருமொருவென பொன்னிறமானதும் எடுக்கவும்.
- மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற பலகாரம் இது.
Thanks: Mrs Geetha Thaivasigamani
****************************************************************************************************
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
*****************************************************************************************************
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
*****************************************************************************************************
1 comments:
உங்கள் பதிவுகளை hotlinksin.com இணையதளத்தில் பகிர்ந்திடுங்கள்.
Post a Comment
அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....