ஏடிஸ் கொசு எப்படி பிறக்கிறது? இது கடித்தால் என்னவாகும்? டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன?
வழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஆனால் ஏடிஸ் கொசு தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் ஒரு பூச்சி வகையை சேர்ந்தது. தேங்காய் சிரட்டைகள், தெருவில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர் மூலம் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும்.
இந்த வகை கொசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ கடித்தால் உடனடியாக அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த கொசுக்கள் குழந்தைகளை கடிக்கும்போது எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர்.
ஒருவரை ஏடிஸ் கொசு கடித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன் எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள் தொடங்கும்பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்று அர்த்தம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.
டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.
STEP 1 : ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
STEP 2 : கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.
STEP 3 : அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும். (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)
STEP 4 : வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும்.
STEP 5 : இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.
STEP 6 : இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.
இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டில் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.
(அடையனும்..ஹூம்....நமக்கு இவ்வளவு அறிவு இருப்பதை தெரிந்து இதிலிருந்தும் தப்பிக்க ஒருவேளை பாழாய்ப் போன கொசுக்கள் புதிய யுக்தி எதையாவது கடைப் பிடிக்க ஆரம்பித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..)
நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன. இப்போது அந்த வேலையை கரைசல் உள்ள பாட்டில் கவனித்துக் கொள்ளும்.
இதன் பலனை 4x5 நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
3 வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.
எப்படியோ இந்த வழியிலாவது கொசுக்கள் ஒழிந்தால் சரி தான். இந்த எமன்களிடமிருந்து நம்மை காப்பாற்ற இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும்.
----------------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த வலைப்பூ பிடித்திருந்தால்
உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லலாமே,,
-----------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த வலைப்பூ பிடித்திருந்தால்
உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லலாமே,,
-----------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment
அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....