நாம் வாழும் இந்த உலகத்தில் மனிதன் வசிக்க முடியாத பல பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் பாலைவனங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாமே.
புவியியலின் படி எப்பகுதி மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறுகிறதோ அது பாலைவனம் எனப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு 250 மி.மீ.க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகளே பாலைவனங்கள் எனப்படுகின்றன.
புவியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனம் ஆகும். பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகள் ஆகும். இங்கு பகலில் வெப்பம் வாட்டி எடுத்து விடும். அதே போல இரவில் குளிரும் அதற்கு இணையாக இருக்கும். பாலைவனங்கள் மனித வாழ்க்கை மேற்கொள்ள சாதகமாக இருப்பதில்லை.
பாலைவனங்கள் என்றால் நம் நினைவுக்கு வருவது சஹாராவே. இது மிகவும் பெரியது. இதன் பரப்பளவு ஏறத்தாழ அமெரிக்கா நிலப்பரப்புக்கு (98,26,630 கிமீ) ஒத்ததாகும். இந்த பாலைவனங்கள் எவைகள், அது எந்த நாடுகளில் காணப்படுகின்றன. அவற்றின் பரப்பளவு என்ன என்பதை காணலாம்.
பாலைவனம் பெயர்கள் | அமைந்திருக்கும் நாடுகள் | அதன் பரப்பளவு |
சஹாரா | வட ஆப்பிரிக்கா | 90,04,650 |
அரேபியன் | மத்திய கிழக்கு | 25,89,900 |
கோபி | சீனா | 12,94,950 |
படகோனியன் | அர்ஜென்டினா | 6,73,374 |
கிரேட் விக்டோரியா | ஆஸ்திரேலியா | 6,47,475 |
கலாஹாரி | தென் ஆப்பிரிக்கா | 5,82,727 |
கிரேட் பாசின் | அமெரிக்கா | 4,92,081 |
தார் | இந்தியா/பாகிஸ்தான் | 4,53,232 |
கிரேட் சாண்டி | ஆஸ்திரேலியா | 3,88,485 |
காரா-கும் | மேற்கு ஆசியா | 3,49,636 |
கொலரேடோ | மேற்கு அமெரிக்கா | 3,36,687 |
கிப்சன் | ஆஸ்திரேலியா | 3,10,788 |
சொனோரன் | அமெரிக்கா | 3,10,788 |
கிசில்-கும் | மேற்கு ஆசியா | 2,97,838 |
தாக்ளாமக்கான் | சீனா | 2,71,939 |
இரானியன் | ஈரான் | 2,58,990 |
சிம்ப்சன்/டோனி | வட ஆப்பிரிக்கா | 1,45,034 |
மோஹேவ் | அமெரிக்கா | 1,39,854 |
அட்டகமா | சிலி | 1,39,854 |
நமீப் | ஆப்பிரிக்கா | 33,668 |
இன்ஷா அல்லாஹ் மீண்டும் பயனுள்ள அடுத்த பதிவில் சந்திப்போம்!
இந்த வலைப்பூ பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்....
0 comments:
Post a Comment
அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....