நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

21 April 2012

தம்புள்ள ஜும்ஆ பள்ளி வாசல் (இறை இல்லம்) தகர்ப்பு

இலங்கையின் தம்புள்ளை நகரில் அமைந்திருந்த 60 வருடங்களுக்கு முன்னர்
நிர்மாணிக்கப்பட்ட ஜும்மா பள்ளிவாசல் சிங்கள பவ்த பேரினவாதிகளால்
போலிஸ், இராணுவத்தினரின் முன்னிலையில் நேற்று (வெள்ளி கிழமை) பகல் தகர்க்கப் பட்டுள்ளது.அரபு நாட்டு பத்திரிகைகள், இலங்கை மற்றும் முக்கியமாக இந்திய முஸ்லிம் இயக்கங்கள், அரசியல், சமூக அமைப்புகள் என அனைத்துக்கும் கொண்டு செல்லுங்கள். எல்லா ஊடகங்களிலும் குறித்த செய்தியை இடம் பெற உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.

பள்ளிவாசலுக்கு எதிராக சிங்கள பவ்த்த பேரினவாதிகளின் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, பள்ளிவாசல் தகர்க்கப் படும் என்ற எச்சரிக்கை இரண்டு நாட்களுக்கு முன்னரே பகிரங்கமாக வெளியிடப்பட்ட நிலையில், முஸ்லிம் அமைச்சர்கள் இது குறித்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கவனத்துக்கு நேரடியாக பலமுறை கொண்டுவந்திருந்த நிலையில், இராணுவம், பொலிசாரின் முன்னிலையிலேயே மேற்படி தகர்ப்பு
இடம் பெற்றுள்ளது.

பொலிஸார், இராணுவம் வேடிக்கைபார்க்க அல்லாவின் இல்லம் உடைக்கப்பட்டது. பள்ளிவாயல் உடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக சிங்கள இணையம் பிரசுரித்த படங்கள் .
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு
                                              அல் குரான் 2:114

Source: www.kattankudi.info

1 comments:

Anonymous said...

சிங்கள அரசின் சில சலுகைகளுக்காக உங்கள் உலாமாக்கள் ஐநாவில் தமிழரின் துயரங்களுக்கு எதிராக சென்று கூச்சலிட்டனர். இப்போது புரிகிறதா சிங்களவனின் தாத்பரியம். எம்மை அடக்கி ஆண்டபின் அடுத்த குறி இஸ்லாமியர் மீது தான் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மதத்தை காட்டியே அரபுநாடுகளின் ஆதரவை ஐநாவில் கொலைவெறி சிங்களம் பெற்றது. அதற்கான கூலி இன்று சிங்களம் இன்று உங்களுக்கு பரிசாகக் கொடுத்துள்ளது,

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....