நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

17 August 2013

ஆரோக்கியமான வழியில் தொப்பையை குறைக்க சில எளிய முறைகள்!


belly, stomac

உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் சிரமப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக உடலுக்கு கேடு தான் விளையும். எனவே தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவசரப்படாமல், ஒருசிலவற்றை சரியாகவும், நம்பிக்கையுடனும், நீண்ட நாட்களுக்கு மேற்கொண்டால், அதற்கான பலனைப் பெறுவது உறுதி.

ஆகவே தொப்பையால் சிரமப்படுபவர்களுக்கு, அதனைக் குறைக்க சில எளிமையான மற்றும் ஆரோக்கியமான ஆலோசனைகளை தமிழ் போல்டு ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து, தினமும் நம்பிக்கையுடன் பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பை குறைவது உறுதி.

எலுமிச்சை ஜூஸ்:
தொப்பையை குறைக்க எளிய ஒரு வழியென்றால், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, சிறிது உப்பு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைத்து, நாளடைவில் தொப்பை மறைந்துவிடும்.

வெள்ளை சாதத்தை தவிர்க்கவும்:
தினமும் வெள்ளை சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக, கோதுமை பொருட்களை உணவில் சேர்க்கலாம். வேண்டுமெனில் கைக்குத்தல் அரிசி, ப்ரௌன் பிரட், நவதானியங்கள், ஓட்ஸ் மற்றும் தினை போன்றவற்றை உணவில் சேர்த்தால், அவை உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

தண்ணீர் குடிக்கவும்:

தொப்பை குறைய வேண்டுமெனில், தினமும் போதுமான அளவில் தண்ணீரைப் பருக வேண்டும். இவ்வாறு அடிக்கடி போதிய இடைவெளியில் தண்ணீர் பருகினால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.


இனிப்பு உணவுகளை தவிர்க்கவும்:
இனிப்புகளை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதோடு, உடல் எடை மற்றும் தொப்பை குறைவதில் தடையை உண்டாக்கும்.

பூண்டு சாப்பிடவும்:
தினமும் காலையில் 2-3 பூண்டுகளை பச்சையாக சாப்பிட்டு, பின் எலுமிச்சை ஜூஸை குடித்தால், உடல் எடை ஆரோக்கியமான வழியில் விரைவில் குறைவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.

அசைவ உணவுகளை தவிர்க்கவும்:
வயிற்றில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களை நீக்க வேண்டுமெனில், முதலில் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பழங்களை சாப்பிடவும்:
தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு பௌல் பழங்களை சாப்பிட்டால், தொப்பை குறைவதோடு, உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும்.


பொரித்த உணவுகளை தவிர்க்கவும்:
தொப்பை குறைய வேண்டுமெனில், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடலில் கொழுப்புக்களை அதிகரிக்கும்.


காரமான உணவுகளை சாப்பிடவும்:
மசாலாப் பொருட்களான பட்டை, இஞ்சி மற்றும் மிளகு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இதனால் அதிலுள்ள காரமானது கொழுப்புக்களை கரைப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக்கி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

நாமும் இதனை மேற்கொண்டு ஆரோக்கியமாக தொப்பை இன்றி வாழ முயற்சி எடுக்கலாமே!!

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்.......

12 August 2013

பிறப்பு சான்றிதழ் (ஒரு விழிப்புணர்வு பதிவு)

ந்திய அரசு குடிமக்களுக்கு வழங்கும் பாஸ்போர்ட், ரேசன் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்களிக்கும் உரிமை முதலான அநேக வசதிகளைப் பெற பிறப்பு சான்றிதழ் அத்தியாவசியமான ஒரு ஆவணமாகும். அதுபோன்று, சொத்து வாரிசுரிமை, திருமணம் செய்ய தகுதியடைந்ததைச் சட்டரீதியாக கோருதல், பாடசாலை முதல் அரசு உத்தியோகம் வரை சேர்க்கைகளுக்கு என பல்வேறு விஷயங்களுக்குப் பிறந்த தேதியினை அரசில் ஆவணப்படுத்தியிருப்பது கட்டாயம்.

இந்தியாவில், 1969 ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டப்படி, பிறந்த ஒவ்வொரு குழந்தையும் 21 தினங்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அதற்காக, கிராம/நகர பதிவுத்துறை, மாவட்டப் பதிவுத்துறை, மாநில பதிவுத்துறை, மத்திய பதிவுத்துறை என சிறப்பாக கட்டமைத்து இணைக்கப்பட்ட பொது பதிவுத்துறையினை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

ஒருவர் பிறப்புச் சான்றிதழ்பெற, பிறந்தத் தேதியினைப் பதிவு துறையில் பதிவு செய்திருக்க வேன்டும்.

பதிவு அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட பதிவு விண்ணப்பப்படிவம் வாயிலாக, குழந்தை பிறந்த 21 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட ஏரியாவிலுள்ள பதிவு அதிகாரியிடம் பிறப்பினைப் பதிவு செய்ய வேண்டும்.

குழந்தை பிறந்த மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

ஒருவேளை குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் பதிவுத்துறையில் பிறப்பு பதிவுசெய்யப்படவில்லை என்றாலோ அல்லது வீடுகளில் பிறப்பு நடந்திருந்தாலோ, ஏரியா காவல்துறை மூலம் பிறப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னர் பதிவுத்துறை அதிகாரிகளால் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

(குறிப்பு: அந்த பிறப்பு சான்றிதழ் நகராட்சியில் இருந்து பெற்றுக்கொள்ளும் போது அதில் எழுத்து பிழைகள் இருந்தால் உடனே திருத்தி கொள்வது மிக அவசியம்)

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்.......


10 August 2013

டி.என்.பி.எஸ்.சி - ஓரெழுத்து ஒருமொழி (தமிழ்)

மிழில் சில எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகிறது. அவற்றை பற்றி பார்ப்போம்...                                                  தமிழ் ஓரெழுத்து சொற்கள்
 அ
 எட்டு
 ஆ
 பசு
  ஈ
 கொடு, பறக்கும் பூச்சி
  உ
 சிவன்
  ஊ
 தசை, இறைச்சி
  ஏ
 அம்பு
  ஐ
 ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
  ஓ
 வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
  கா
 சோலை, காத்தல்
  கூ
 பூமி, கூவுதல்
  கை
 கரம், உறுப்பு
  கோ
 அரசன், தலைவன், இறைவன்
  சா
 இறப்பு, மரணம், பேய், சாதல்
  சீ
 இகழ்ச்சி, திருமகள்
  சே
 எருது, அழிஞ்சில் மரம், சிவப்பு
  சோ
 மதில், அரண்
  தா
 கொடு, கேட்பது
  தீ
 நெருப்பு
  து
 கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
  தூ
 வெண்மை, தூய்மை,
  தே
 நாயகன், தெய்வம்
  தை
 மாதம், தையல்
  நா
 நாக்கு
  நீ
 நின்னை
  நே
அன்பு, நேயம்
  நை
 வருந்து, நைதல்
  நொ
 நொண்டி, துண்பம்
  நோவு
 நோவு, வருத்தம்
  நெள
 மரக்கலம்
  பா
 பாட்டு, நிழல், அழகு
  பூ
 மலர்
  பே
 மேகம், நுரை, அழகு
  பை
 பாம்புப்படம், பசுமை, உறை
 போ
 செல்
 மா
 மாமரம், பெரிய, விலங்கு
 மீ
 உயரம், மேலே, ஆகாயம்
 மு
 மூப்பு
 மூ
 மூன்று
 மே
 மேல், மேன்மை
 மை
 அஞ்சனம், கண்மை, இருள், செம்மறி ஆடு
 மோ
 மோதல், முகர்தல்
 யா
 மரம், அகலம்
 வா
 அழைத்தல்
 வீ
 பூ, அழகு, பறவை
 வை
 வைக்கோல், கூர்மை வைதல், வைத்தல்
 வெள
 கெளவுதல், கொள்ளை அடித்தல்


இவைகளில் பெரும்பாலான சொற்கள் புத்தகத்தில் மட்டுமே உள்ளன புழக்கத்தில் இல்லை. 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்....