நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

12 August 2013

பிறப்பு சான்றிதழ் (ஒரு விழிப்புணர்வு பதிவு)

ந்திய அரசு குடிமக்களுக்கு வழங்கும் பாஸ்போர்ட், ரேசன் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்களிக்கும் உரிமை முதலான அநேக வசதிகளைப் பெற பிறப்பு சான்றிதழ் அத்தியாவசியமான ஒரு ஆவணமாகும். அதுபோன்று, சொத்து வாரிசுரிமை, திருமணம் செய்ய தகுதியடைந்ததைச் சட்டரீதியாக கோருதல், பாடசாலை முதல் அரசு உத்தியோகம் வரை சேர்க்கைகளுக்கு என பல்வேறு விஷயங்களுக்குப் பிறந்த தேதியினை அரசில் ஆவணப்படுத்தியிருப்பது கட்டாயம்.

இந்தியாவில், 1969 ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டப்படி, பிறந்த ஒவ்வொரு குழந்தையும் 21 தினங்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அதற்காக, கிராம/நகர பதிவுத்துறை, மாவட்டப் பதிவுத்துறை, மாநில பதிவுத்துறை, மத்திய பதிவுத்துறை என சிறப்பாக கட்டமைத்து இணைக்கப்பட்ட பொது பதிவுத்துறையினை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

ஒருவர் பிறப்புச் சான்றிதழ்பெற, பிறந்தத் தேதியினைப் பதிவு துறையில் பதிவு செய்திருக்க வேன்டும்.

பதிவு அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட பதிவு விண்ணப்பப்படிவம் வாயிலாக, குழந்தை பிறந்த 21 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட ஏரியாவிலுள்ள பதிவு அதிகாரியிடம் பிறப்பினைப் பதிவு செய்ய வேண்டும்.

குழந்தை பிறந்த மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

ஒருவேளை குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் பதிவுத்துறையில் பிறப்பு பதிவுசெய்யப்படவில்லை என்றாலோ அல்லது வீடுகளில் பிறப்பு நடந்திருந்தாலோ, ஏரியா காவல்துறை மூலம் பிறப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னர் பதிவுத்துறை அதிகாரிகளால் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

(குறிப்பு: அந்த பிறப்பு சான்றிதழ் நகராட்சியில் இருந்து பெற்றுக்கொள்ளும் போது அதில் எழுத்து பிழைகள் இருந்தால் உடனே திருத்தி கொள்வது மிக அவசியம்)

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்.......


0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....