நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

03 February 2012

பொன்மொழிகள்





மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்து தான் பிறக்கின்றன
                    --- நபிகள் நாயகம்

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்
                   --- அன்னை தெரசா

ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.
                  --- காந்திஜி


யார் ஒருவ‌ன் த‌னக்கு உள்ள‌ கெள‌ர‌வ‌மும், ம‌ரியாதையும் போய் விடுமே என்று ப‌ய‌ந்தப‌டி இருக்கிறானோ, அத்த‌கைய‌வ‌ன் அவ‌மான‌த்தைத்தான் அடைகிறான்                          
              --- சுவாமி விவேகானந்தர்

மூட்டை தூக்கும் பொழுது பாரத்தினாலே நான் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, வெட்கத்தினால் ஒரு போதும் கஷ்டப்பட்டதில்லை
            --- தந்தை பெரியார்

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்
                  --- பெர்னார்ட்ஷா

தன்னை வென்றவன் தரணியை வெல்வான் 
                  --- அறிஞர் அண்ணா

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை
                --- லியோ டால்ஸ்டாய்

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது
                 --- அடால்ஃப் ஹிட்லர்

உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை
                --- வோல்டன்.

உங்களுக்கு உதவக்கூடிய கரங்கள் வேறெங்குமில்லை. அவை உங்கள் தோள்களின் மீதுதான் இருக்கின்றன
               --- லிடர்மென்

கடமையைச் செய்யும்போது மகிழ்ச்சியாகச் செய்யவில்லையென்றால், அதன் முடிவும் மகிழ்ச்சியாக இருக்காது
              --- நெப்போலியன் ஹில்

புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள். அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும் என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்
              --- பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்

ஒருவன் உன்னை ஒரு முறை அடித்தால் அது அவனுடைய தவறு.
அவனிடம் இரண்டாவது முறையும் அடி வாங்கினால் அது உன்னுடைய தவறு.           
               --- எமர்சன்

செய்து முடிக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் சாத‌னைக‌ள் அனைத்தும் செய்ய‌ முடியாத‌வைக‌ள் என்று முத‌லில் ப‌ல‌ரால் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌வைதான்.
                --- கால்லைல்

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
               --- பெஞ்சமின்

மனித வாழ்வு என்பது தாமரை இலையில் உருண்டோடும் பனித்துளி போன்றது
               --- தாகூர்

நாம் படிக்கப் படிக்க நம்மிடமிருக்கும் அறியாமையை அறிந்து கொள்கிறோம்! 
              --- ஷெல்லி

மாணவர்களிடம் மறைந்திருக்கும் உண்மையான திறமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கமாகும். மாறாக மாணவர் மண்டையில் எதையாவது திணிக்க முயல்வதல்ல கல்வி
              --- அல்பிரட் ஐன்ஸ்டைன்


***************************************************************************************************
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

*****************************************************************************************************

0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....