நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

25 February 2012

உங்களுக்கும் காத்துகிட்டு இருக்கு என்கவுண்ட்டர்....

சட்டங்கள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்... மாற்று கருத்துக்கு இடமே இல்லை. உலகத்துலேயே கடுமையான சட்டம் உள்ள அரபு நாடுகளில் கூட யாரையுமே விசாரணை இல்லாமல் தண்டிப்பதில்லை. சென்னையில குளிர் கொஞ்சம் அதிகம் போல, அதனால் தான் இந்த கொள்ளை காரங்க நைட் தூங்கும் போது கூட ஷீ போட்டுக்கிட்டு தான் தூங்கினாங்க போல இருக்கு. என்னமா ரீல் விடுறானுங்க.  (இது கதை இல்ல நிஜம்ங்க சத்தியமா  நம்புங்கோ)

கேமரா இல்லாத வங்கிகளில் கொள்ளை நடந்ததுன்னு சொன்னாங்க, ஆனா போலிஸ் கலர் போட்டோ வெளியிட்டு பத்து மணி நேரத்துக்குள்ள என்கவுண்ட்டர். 30 லட்சம் கொள்ளை அடித்தவர்களுக்கு என்கவுண்ட்டராம், ஆனா ஒரு லட்சத்து எழுபது ஆறாயிரம் கோடி அடிச்சவங்க நீதிமன்றத்துல ஜாமீன் கேட்டு காத்திருக்காங்க.. பல கொலைகளை செய்து விட்டு ரவுடிகள் ஊரில் சுற்றி கொண்டு தான் இருகிறார்கள் .... (இனிமே அஞ்சு வருசத்துக்கு கொள்ளைகள் நடக்காது அப்பாடா.இதற்கு அரசியல்வாவாதிகளுக்கு மட்டும் விதிவிலக்கு!)  

இறையாண்மை கூட பணம் இருந்தா வேற மாதிரி போல. திருடனாய், பொது மக்களாய் கொள்ளை அடித்தால் இது தான் கதி. பொழக்க தெரியாத பசங்க, இவங்களும் அரசியல் வாதியோ, அரசு அதிகாரியாகவோ ஆயிற்று அப்புறம் கொள்ளை அடிச்சிருக்கணும், அப்ப ஜாமீன் கொடுத்து, சல்யுட் அடிச்சு அனுப்பி விட்டுருப்பாங்க. 5 பேர அரெஸ்ட் பண்ண துப்பில்லாம சுட்டுருக்காங்க.. இதுக்கு பாராட்டு வேற.. நல்ல வேளை பழக்க தோசத்துல தோஷத்தில் நில அபகரிப்பு வழக்கு போடாமல் இருந்தாங்களே. அதுவே பெரிய விஷயம். (அரசியல இதெல்லாம் சாதரணமப்பா!!)

ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருக்கும் சிலரை அவ்வீட்டைச் சுற்றி வளையம் அமைத்திருக்கும் காவல்துறையினரால் உயிருடன் பிடிக்க முடியாதா? மயக்கம் ஏற்படுத்தும் கையெறிகுண்டைத் தூரத்திலிருந்து வீட்டிற்குள் வீசினால் மட்டும் போதுமே, எவ்வித தாக்குதலோ சேதாரமோ இன்றி அவ்வீட்டிலிருப்பவர்கள் அனைவரையும் உயிருடன் பிடிக்க முடியுமே? இதற்கான வசதி தமிழகக் காவல்துறையினரிடம் இல்லையா...

கொஞ்சம் விட்டா திமுக ஆட்சியில் பயிற்சி பெற்ற கொள்ளையர்கள்ன்னு சொல்லுவாங்க. காக்கி சட்டைகளை மட்டுமே நம்பி ஆட்சி நடத்தி விடலாம் என்கிற நம்பிக்கை தப்பு. அப்படின்னா இதுக்கு பேரு ஜனநாயக நாடு இல்லை. சந்தேகத்தின் பேரில் கைது செய்வதே தவறென வாதாடும் நாட்டில், சந்தேகத்தின் பேரில் சுட்டே கொல்வது சரியா... 

தண்டனைகள் மிகக்கடுமையாக இருக்கவேண்டியது தான், ஆனால் அதை யார் நிர்ணயிப்பது என்பது தான் முக்கியம். பணம் இருக்கிறவங்க கிட்ட சட்டம் மண்டியிடுவதும் பணம் இல்லாதவங்ககிட்ட பாம்பாய் சீறுவதும் இங்கே தாங்க நடக்குது. தண்டிப்பதற்கு முன்னாடி யார் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்படவேண்டும். என்கவுண்டர் என்பது ஒரு தப்பை மறைக்க இன்னொரு தப்பு செய்வது. என்ன இருந்தாலும் சட்டத்தை கையில் எடுக்க இவர்கள் யார்? இந்த கொள்ளை அடிச்சா முப்பது லட்சத்துக்கு முன்னாள், ஐந்து உயிர் என்பது மிகப்பெரிய விஷயம். 

இதை ஆதரிக்கும் புண்ணியவான்களே, உங்க வீட்டு பிள்ளைங்க இதே மாதிரி திருட்டு கேஸ்ல மாட்டிக்கிட்டு என்கவுட்டர்ல சுட்டா சரின்னு சொல்லுவீங்களா? இதை ஆதரித்து சினிமா வசனமா எழுதுறீங்க, ஜனநாயகம், அரசியலைமைப்புன்னா என்னன்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க. இதற்கு அரபு நாடுகள உதாரணம் காட்டிரிங்க அங்கு என்கவுண்ட்டர் இல்லைங்கோ ...  அது என்ன லாஜிக்ன்னே புரியல, எல்லா என்கவுண்ட்டர்களிலும் கண்டிப்பாக இரண்டு போலிஸ்க்கு மட்டும் காயம் ஏற்படுது. ஒருவேளை அந்த ரெண்டு பேரு தான் சிரிப்பு போலிசோ?

விரைவில் எதிர் பார்க்கலாம் தலைப்பு செய்திகளில் பிக்பாகெட் அடித்தவன் என்கௌண்டேரில் சுட்டு வீழ்த்தப்பட்டான், என்கவுண்ட்டர்க்கு எதிர்ப்பா பதிவு போட்டவர்கள் என்று பட்டியல் நீளும்.. (போலீஸ் காரைய்யா இது முழுவதுமாக என் சொந்த கருத்துக்கள் இல்லையா ... சில தளங்களிருந்து திரட்ட பட்டவையா i am approval). நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சத  சொல்லுங்க... எதுக்கல்லாம் என்கவுண்ட்டர் போடலாம்னு!!!!

0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....