நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

26 August 2012

சாதனை மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்நீல் ஆம்ஸ்ட்ராங்கின் முழு பெயர் நீல் ஆல்டென் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 1930-ம் ஆண்டில் ஆகஸ்டு 5-ந்தேதி ஒகயோவில் உள்ள வபாகொனெட்டாவில் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை ஆடிட்டராக பணிபுரிந்தார். எனவே அவர் பல இடங்களுக்கு சென்று பணிபுரிந்தார். ஆகவே இவர் வபாகொனெட்டாவில் உள்ள தனது தாத்தா, பாட்டியுடன் தங்கியிருந்தார். அவர்களுடன் குழந்தை பருவத்தை கழித்தார்.


சிறு வயதில் இவருக்கு விமானம் என்றால் கொள்ளை பிரியம். எனவே, அது குறித்த படிப்பை படித்தார். பின்னர் அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மையத்தில் தனது 30ம் வயதில் பணியில் சேர்ந்தார்.  தொடர்ந்து அவர் படிப்படியாகமுன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்நிலையில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவு குறித்த பல்வேறு சோதனைகள‌ை மேற்கொண்டு வந்தது. இதற்காக அப்பல்லோ விண்கலம் தயார் செய்யப்பட்டது. அப்பல்லோ ஒன்று மற்றும் இரண்டு என தயாரிக்கப்பட்டு இறுதியில் அப்பல்லோ 11 என்ற விண்கலம் மூலம் தானும், தன்னுடன் உடன் புரிந்த சக விண்வெளி வீரர்களான விமானி எட்வின்புஷ் அல்டிரின், மற்றொரு விண்வெளி வீரரான மைக்கேல் கொலினல் ஆகியோருடன் சந்திரனுக்கு சென்றார்.1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி (நியூயார்க் நேரப்படி) இரவு 10.50 மணிக்கு சந்திரனில் இறங்கினார். இதன் மூலம் சந்திரனில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அப்போது இவரது சாதனையை உலகம் முழுவதிலும் இருந்து 5 கோடியே 28 லட்சம் மக்கள் கண்டுகளித்து பரவசம் அடைந்தன. ஆம்ஸ்ட்ராங் இறங்கிய 20 நிமிடங்கள் கழித்து ஆல்டிரின் சந்திரனில் இறங்கினார். மைக்கேல் கொலினஸ் அப்பல்லோ-11 விண்கலத்தில் இருந்து அதை இயக்கி கொண்டிருந்தார். சந்திரனில் இறங்கிய நீல்ஆம்ஸ்ட்ராங்குடன் அல் டிரினும் இணைந்து கொண்டு நடந்து ‌சென்று நிலவின் ஈர்ப்பு சக்தி மற்றும் பாறை மாதிரிகள் மற்றும் போட்டோக்களை எடுத்து கொண்டனர். அமெரிக்க தேசிய கொடியையும் சந்திரனில் பறக்க விட்டு சாதனை படைத்தனர். 


சந்திரனில் காலடி எடுத்து வைத்து நீல் ஆம்ஸ்ட்ராங் சாதனை செய்த விவகாரம் 20-ம் நூற்றாண்டின் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

சந்திரனில் இருந்து பூமி திரும்பிய நீல்ஆம்ஸ்ட்ராங் நாசாவின் விண்வெளி மையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது காற்று மண்டலம் அல்லாத சந்திரனில் தான் எடுத்து வைத்த முதல் காலடி, குழந்தை தவழ்வது போன்று மகிழ்ச்சியாக இருந்தது என வர்ணித்தார். 
நீல்ஆம்ஸ்ட்ராங் “நாசா” விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பப்பிவில் ஆலோசகராக பணி புரிந்து வந்தார். சின்சினாட்டி பல்கலைக் கழகத்திலும் இன்ஜினியரிங் பாட பிரிவில் பேராசிரியராகவும் பணி புரிந்து வந்தார்.

அவரைப் பற்றிய சிறுகுறிப்பு
தேசியம்அமெரிக்கர்
பிறப்பு

ஆகஸ்டு 5, 1930
ஒகைய்யோ,
ஐக்கிய அமெரிக்கா
இறப்புஆகஸ்டு
25 2012
(வயது 82)
முந்தைய
தொழில்
விமானி

விண்வெளி பயண நேரம்

8 நாட்கள் 14மணி
12 நிமிடம்

பயணங்கள்ஜெமினி 8, அப்பல்லோ 11

விண்வெளி சாதனை மனிதன் இன்று நம்மை விட்டு பிரிந்து சென்றாலும் அவரின் பெயரும், அவரின் சாதனையும் நிலவு உள்ள வரை நம் நினைவினை விட்டு மறையாது என்பது தான் உண்மை...

இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் சந்திப்போம்....

1 comments:

தீரன் said...

தல ஒரு சின்ன டவுட்டு இந்த லிங்க படிச்சு பாத்துட்டு எனக்கு உடனே உங்க தளம் மூலமா பதில வெளியிடுங்க இல்ல இந்த பதிவ அழிங்க சரியா கோபப்படாதிங்க http://sriullaththilbalan.blogspot.ae/2012/09/blog-post_7109.html

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....