நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

01 November 2012

உபயோகமான இணையத்தளங்கள்

நாம் அன்றாட வாழ்க்கையில் இணையதளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதில் நன்மைகளும், தீமைகளும் சேர்ந்தே காணப்படுகிறது. அது பயன்படுத்துவரின் பயன்பாடுகளை பொருத்தது.

சில இணையதளங்கள் உலகத்தில் அதிகமானவரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றின் சிலவற்றை பார்ப்போம்.


இணையதளங்கள் பயன்படுத்துபவர்களை போல், இப்போது இணையதளங்களை சொந்தமாக வைத்து இருப்பவர்களும் ஏராளம். அவர்கள் தங்கள் முகவரி பெரிதாக இருப்பதாக எண்ணினால் அவற்றை சுருக்கி கொள்ள கீழ்காணும் இணையதளம் உதவி செய்கிறது. அவற்றிற்கான முகவரியை கீழே கிளிக் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்..

இணையதள முகவரி சுருக்கத்திற்கு இங்கு கிளிக் செய்க

நம் வாழ்க்கையில் புகைப்படங்கள் முக்கிய இடத்தை பிடிக்கின்றன.. பல்வேறு காலகட்டத்தில் புகைப்படங்களை எடுப்போம். அவற்றை மலரும் நினைவுகளாக சேமித்தும் வைத்துக்கொள்வோம். அவ்வாறான சேமித்த மலரும் நினைவுகளை வீடியோவாக மாற்றி கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றும் தோன்றலாம். அவ்வாறு வீடியோவாக மாற்றி தரவும் இணையதளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றிற்கான முகவரி கீழே

புகைப்படங்களை வீடியோவாக மாற்ற இங்கு கிளிக் செய்க


கீ போர்டில் டைப் செய்யும் போது சில எழுத்துக்கள் மற்றும் வடிவங்கள் இல்லை என்று கவலை கொள்வோம். இதுபோன்ற சமயங்களில நமக்கு கை கொடுக்க பிரத்யேக எழுத்துருக்கள் மற்றும் வடிவங்களை ஒரு இணையதளம் நமக்கு தருகிறது. அவற்றின் முகவரி பார்போம்.


நாம் எடுத்த புகைப்படங்கள் தரம் குறைவாக இருக்கும் சமயத்தில் அவற்றை எப்படி அழகாக மெருகேற்றலாம் என்று யோசித்துக்கொண்டிருப்போம். அவ்வாறான சமயங்களில் நமக்கு உதவி செய்ய ஒரு இணையதளம் காத்துக்கொண்டிருக்கிறது. இங்கு சென்று நம் எண்ணங்கள் போல் நாம் எடுத்த புகைப்படங்களை மெருகேற்றலாம், அவற்றிற்கான முகவரி

புகைப்படங்களை மேலும் அழகாக்க இங்கு கிளிக் செய்க


கணினியை பயன்படுத்துபவர் உலகத்தில் புதியதாக உருவாக்கப்படும் மென்பொருளை இந்த இணையத்தளத்தில் மூலமே அதிகமாக பதிவிறக்கம் செய்கின்றனர். எனவே இது கணினி உலகத்தின் மென்பொருள் களஞ்சியம் சொல்லப்படுகிறது. அவற்றிற்கான முகவரி 


இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில்....0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....