நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

27 January 2012

முதலுதவி அளிக்க கற்றுக்கொள்வோம் பாகம் - 2


முதலுதவி அளிப்பதற்கு சில பொதுவான விதிகள் இருக்கின்றன. அவற்றின் தொடர்ச்சியை பார்ப்போம்.

மயக்கம்
:
 


மூளைக்குப் போய்ச் சேர வேண்டிய ரத்தம் போதிய அளவு போகாமல் போனால் மயக்கம் ஏற்படுகிறது. குறுகிய காலம் மட்டுமே இது ஏற்படும்.
மயக்கத்தால் பெரிய ஆபத்து இல்லை என்று சொல்லி விட முடியாது. எதற்காக மயக்கம் ஏற்பட்டது என்பதை உணர முடியாத பட்சத்தில் உடனடி மருத்துவ உதவி பெற வே ண்டியது அவசியம்.


எப்படிச் சமாளிக்கலாம்?

  1. பின்புறமாக சாய வைக்கலாம். கால்களை உயர்த்தி விடுவது நல்லது.
  2. காற்றுக் குழாயைச் சரிபார்க்கவும். வாந்தி வருகிறதா என்று கவனிக்கவும்.
  3. சுவாசம், இருமல் போன்றவை இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லையென்றால் சிறிசிஸி ஐத் தொடங்கவும். தகுந்த உதவி வரும் வரை அல்லது பாதிக்கப்பட்டவரின் நிலைமை சீராகும் வரை சிறிசிஸிஐத் தொடரவும்.
  4. தலை மட்டத்தை விட உயரமாகக் காலை உயர்த்தவும். இப்படிச் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீரடையும், இறுக்கமாக உடைகளைத் தளர்த்துங்கள். ஒரு நிமிடம் அவகாசம் கொடுத்துப் பாருங்கள். விழித்துக் கொள்ளவில்லை என்றால் அவசர சிகிச்சைப் பிரிவை நாடவும்.

அதீத ரத்தப் போக்கு
:

பாதிக்கப்பட்டவரின் ரத்தப் போக்கை நிறுத்த முயற்சி செய்வதற்கு முன்னால் உங்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொள்வது நல்லது. முடிந்தால், கையுறை அணிந்து கொள்ளுங்கள். கிருமிகள் தொற்றிக் கொள்வதைத தவிர்க்கலாம். ஏதேனும் பாகங்கள் பிதுங்கி வெளியில் வந்து விட்டால் அவற்றை மீண்டும் உள்ளே தள்ள முயற்சி செய்ய வேண்டாம். கட்டுப்போட்டு மட்டும் வைக்கவும். தவிரவும்,
கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.

  1. கீழே படுக்க வைக்கவும். உடலைவிட தலையைச் சற்றுத் தாழ்த்தி வைப்பது நல்லது. கால்களையும் உயர்த்தி வைக்கவும். இப்படிச் செய்தால் ரத்தம் மூளைக்குள் வேகமாகப் பாய்ந்தோடுவதைத் தடுக்கலாம். எந்த இடத்திலிருந்து ரத்தம் பெருகுகிறதோ அந்த இடத்தைக் கொஞ்சம் உயர்த்தியது போல் தூக்கி வைத்தால் நல்லது.
  2. கையுறை அணிந்து கொண்டபின், காயத்திலுள்ள அழுக்குகளை நீக்கலாம். உள்ளே குத்திக் கிடக்கும் பொருளை பலவந்தமாக இழுக்க முயலக்கூடாது. காயத்தைச் சுத்தப்படுத்த முயற்சி செய்ய வேண்டாம்.
  3. ரத்தம் வரும் இடத்தை அழுத்திப் பிடிக்க வேண்டும். கட்டுப்போட்டு நிறுத்தலாம். அல்லது கையுறை அணிந்த கையால் அழுத்திப் பிடிக்கலாம்.
  4. ரத்தப் போக்கு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்க வேண்டும்.
  5. கட்டுப்போட்ட பின்னும் ரத்தப் போக்கு தொடர்ந்தால் கட்டைப் பிரிக்க முயற்சி செய்ய வேண்டாம்.
  6. ரத்தப் போக்கு நிற்காத பட்சத்தில் குருதிக் குழாயை (arteries & veins) அழுத்திப் பிடிக்கலாம். முழங்கைக்கும், அக்குளுக்கும் இடைப்பட்ட பகுதியில் கைக்கு உண்டான குருதிக் குழாய் உள்ளது. காலுக்கான குருதிக் குழாய் முட்டிக்கும், இடுப்புக்கும் மத்தியில் உள்ளது. இவற்றை அழுத்திப் பிடிக்கலாம்.
  7. ரத்தப்போக்கு நின்றுவிட்டதே என்பதற்காக போட்டு வைத்திருந்த கட்டைப் பிரிப்பது சரியல்ல. உடனடியாக, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.
  8. உட்புறமாக ரத்தக் கசிவு இருந்தால் அவசர சிகிச்சைப் பிரிவை அணுகுவது தான் ஒரே வழி.
    சில அறிகுறிகள்
    • காது, மூக்கு, மலக்குடல், பெண்ணின் கருப்பை, வாய்க்குழாய் போன்ற பகுதிகளிலிருந்து ஏற்படும் ரத்தக் கசிவு.
    • இருமும் போது, வாந்தி எடுக்கும் போது ரத்தம் வெளிப்படுதல்.
    • கழுத்தில், மார்பில், அடி வயிறு போன்றவற்றில் அடிபட்டால் ரத்தம் கசிதல்.
    • மார்பு, வயிறு, மண்டை ஓட்டை ஊடுருவி அடிபட்டால்

அதிர்ச்சி
:

அதிர்ச்சி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உதாரணமாகச் சொல்லலாம். இழப்பு, அலர்ஜி, தொற்று, இன்னபிற. அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களை இனம் காண சில அடிப்படைகள்.

  • தோல் ஜில்லிட்டு இருக்கும். வெளுத்துப் போய் காணப்படும்.
  • நாடித் துடிப்பு குறையும். சுவாசம் சீராக இருக்காது. அல்லது வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். 
  • ரத்த அழுத்த அளவு குறையும்.
  • கண்கள் எதையோ வெறித்துப் பார்த்தபடி இருக்கும். கண் விழி அகன்று இருக்கும்.
  • மயக்கமடைந்த நிலையிலோ அல்லது விழிப்புடனோ இருப்பார்கள். விழிப்புடன் இருந்தால், குழப்பத்துடன், வலுவிழந்து காணப்படுவர். பதட்டம் அதிகரிக்கும்.

அடிபட்டதால் அதிர்ச்சியடைந்தவர்களை என்ன செய்ய வேண்டும்
?

  • மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளலாம்.
  • சாய்ந்த நிலையில் படுக்க வைக்கலாம்.
  • நாடித் துடிப்பு, இருமல், சுவாசம் இயல்பாக இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லை என் றால் சிறிசிஸிஐத் தொடங்கவும்.
  • தோதான நிலைக்கு அழைத்துச் செல்லவும். இறுக்கமான உடைகளைத் தளர்த்தவும். தாகம் என்று கேட்டால் கூடத் தண்ணீர் தர வேண்டாம்.
  • ரத்தத்துடன் வாந்தி எடுத்தால், அவரைக் கவனமாக மீட்பு நிலைக்கு எடுத்துச் செல்லவும்.
  • காயத்துக்கு மருத்துவ உதவி பெற்றுத் தரவும்.

மூக்கு வழியாக ரத்தம் கசிதல்:


பரவலான சங்கதி இது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் பெரும்பாலும் மூக்கின் உட்புறத்திலிருந்துதான் ரத்தக் கசிவு ஏற்படும். வயதானவர்களுக்கும் நடுத்தர வயதுக்காரர்களுக்கும் கூட மூக்கின் உட்புறத்திலிருந்து ரத்தம் கசியலாம். அதே சமயம், ஆழமான கசிவாகவும் இருக்கலாம். இறுக்கமாகிப் போன ரத்தக் குழாய் காரணமாகவோ அல்லது அதிக ரத்த அழுத்தத்தின் காரணமாகவோ கூட இந்தக் கசிவு ஏற்பட்டிருக்கலாம். பல சமயங்களில் இந்தக் கசிவை நிறுத்த முடியாது. தேர்ந்த மருத்துவ சிகிச்சை தேவை.

என்ன செய்யலாம்?

  • உயர்த்திய நிலையில் இருந்தால் ரத்தக் கசிவு நிற்கலாம்.
  • ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு மூக்கைக் கிள்ளுவது போல் அழுத்திப் பிடிக்கலாம். அந்தச் சமயத்தில், வாய் வழியாக சுவாசிக்கலாம்.
  • மூக்கைச் சிந்தக் கூடாது. கீழே குனியவும் கூடாது.
உடனடி அவசர சிகிச்சை எப்போது தேவைப்படும்?
  • 20 நிமிடங்களுக்கும் அதிகமாக ரத்தப் போக்கு இருந்தால்
  • மீண்டும் மீண்டும் ரத்தக் கசிவு ஏற்பட்டால்
  • கீழே விழுந்ததாலோ தலையில் அடிபட்டதாலோ மூக்கில் ரத்தக் கசிவு ஏற்பட்டால்.

காது
:

வெளிப் பொருள்கள் காதில் சிக்கிக் கொண்டால் வலி அதிகரிக்கும். கேட்கும் திறன் குறையும். ஏதேனும் பொருள் காதில் சிக்கிக் கொண்டால், உடனடியாகக் கண்டுபிடித்து விடலாம். குழந்தைகளால் இது முடியாது.

என்ன செய்யலாம்?

  • குச்சி போன்ற பொருள்களால் காதைக் குடைவது தவறு. அப்படிச் செய்தால் சிக்கிக்கொண்ட பொருள் உள்ளே போய்விடக் கூடும்.
  • காதில் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரியும்படி இருந்தால். லாவகமாக அதை வெளியில் எடுக்க முயற்சி செய்யலாம்.
  • மெதுவாகத் தலையைச் சாய்த்துப் பொருளை கீழே விழ வைக்க முயற்சி செய்யலாம்.
  • ஏதேனும் பூச்சி புகுந்துவிட்டால், மினரல் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைக் காதில் மிதக்க விடலாம். காது மடலால் மெலிதாக அசைத்து அந்தப் பூச்சியை எண்ணெயில் விழ வைக்கலாம். பூச்சி மிதக்க ஆரம்பித்தவுடன் வெளியில் எடுக்க முயற்சி செய்யலாம்.
    பூச்சியைத் தவிர பிற பொருள்களை வெளியில் எடுக்க, எண்ணெயைக் காதில் ஊற்றக்கூடாது.
    அப்படியும் பிரச்னை தீரவில்லை என்றால் மருத்துவ உதவி பெறுவது அவசியம்.

கண்:

வெளிப்புறப் பொருள் கண்ணில் சிக்கிக் கொண்டால்
என்ன செய்யலாம்?

  • கையைக் கழுவிக்கொள்ளவும்.
  • நன்றாக வெளிச்சம் உள்ள பகுதியில் சம்பந்தப்பட்டவரை உட்காரச் சொல்லவும்.
  • கண்ணில் சிக்கிக் கொண்ட பொருள் தென்படுகிறதா என்று பார்க்கவும். இமையை கீழ்ப்புறமாக மடக்கி அவரை மேலே பார்க்கச் சொல்லவும். மேல்புற இமையைப் பிடித்துக் கீழப்புறமாக அவரைப் பார்க்கச் சொல்லவும்.
  • கண் இமையில் அந்தப் பொருள் சிக்கியிருந்தால் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு வெளியில் எடுக்கலாம்.

கவனம்:


  • கருவிழியில் சிக்கியிருக்கும் பொருளை வெளியில் எடுக்க முயற்சி செய்ய வேண்டாம்.
  • கண்ணை கசக்க வேண்டாம்.

அவசர சிகிச்சை எப்போது பெறலாம்
?

  • வெளியில் எடுக்க முடியாத பட்சத்தில்
  • கரு விழியில் சிக்கிக் கொண்டால்
  • பார்வை சரிவரத் தெரியாமல் அவர் அவதிப்பட்டால்
  • வலி இருந்தால்
  • சிக்கிக் கொண்ட பொருளை வெளியில் எடுத்த பின்னும் எரிச்சல் இருந்தால்

மூக்கு:

வெளிப்புறப் பொருள் மூக்கில் நுழைந்துவிட்டால்

  • உபகரணங்களைக் கொண்டோ, பஞ்சைக் கொண்டோ வெளியில் அகற்ற முயல வேண்டாம்.
  • மூச்சை உள்ளிழுக்க வேண்டாம். வாய் வழியாக சுவாசிக்கலாம்.
  • மெதுவாக மூக்கைச் சிந்துவதன் மூலம் பொருளை வெளியேற்றலாம். கண்ணுக்குத் தெரியும் பொருளாக இருந்தால் Tweezers (கிடுக்கி) கொண்டு வெளியில் அகற்றலாம்.
  • முயற்சி தோல்வியடைந்தால், உடனடி மருத்துவ உதவி அவசியம்.

தோல்:

தோலில் ஏதேனும் குத்தி விட்டால்
, ஜிஷ்மீமீக்ஷ்மீக்ஷீs கொண்டு அகற்றலாம் குத்திய இடத்தை சோப், தண்ணீர் கொண்டு கழுவலாம்.

தோலை ஊடுருவி முழுமையாக உள்ளே சென்றுவிட்டால்?

  • சோப், தண்ணீர் விட்டுக் கழுவவும்.
  • நெருப்பில் காட்டப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியை எடுத்துக் கொள்ளவும்.
  • மெலிதாக தோலில் செருகி, குத்திய பொருளை மேல்நோக்கி நகர்த்தலாம்.
  • தென்பட்டு விட்டால், பொருளை வெளியில் எடுத்து விடலாம். சில சமயம், பெரிதுபடுத்திக் காட்டும் பூதக் கண்ணாடி தேவைப்படலாம்.
  • குத்தப்பட்ட பகுதியைக் கழுவி காயவிடவும். ஆன்டிபயாடிக் களிம்பு தடவலாம்.
  • இயலவில்லை என்றால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.

26 January 2012

முதலுதவி அளிக்க கற்றுக்கொள்வோம் பாகம் - 1


ஒரு கையேடு இருந்தால் போதும். எல்லா சந்தர்ப்பங்களிலும் நாமாகவே சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று நினைத்து விடாதீர்கள். காரணம், சிகிச்சை முறைகள் நபருக்கு நபர், சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஆனாலும், சில பொதுவான விதிகளை மட்டும் இங்கே தொகுக்கப்படுகின்றது. அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.
 

முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று:

1. உயிரைப் பாதுகாக்க வேண்டும்.
2. நிலைமை மோசமாவதைத் தடுக்க வேண்டும்.
3. சீக்கிரத்தில் குணமளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 


எல்லாவற்றையும் விட முக்கியமானது தைரியம். பாதிக்கப்பட்டவர்களைத் தேற்றி, ஆறுதல் சொல்ல வேண் டும். பயப்படக் கூடாது. தவிரவும், வேறு சில பொறுப்புகளும் உள்ளன.
  1. உடனடியாக நிலைமையை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். பதற்றப்படக் கூடாது. தகுந்த உதவி கிடைக்க உதவ வேண்டும்.
  2.  தீ விபத்தில் சிக்கிக் கொண்ட ஒருவருக்கு முதலுதவி அளிக்க வேண்டும் என்றால் முதலில் முதலுதவி அளிக்க முன்வருபவருக்குத் தன்னைப் பாதுகாக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிறகு, பாதிக்கப்பட்டவர். பிறகு, அருகில் இருப்பவர்.
  3. பாதிப்பின் தன்மையை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
  4.  உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மீது நம் கவனம் முதலில் திரும்ப வேண்டும்.
  5.  சம்பந்தப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கோ, வீட்டுக்கோ, மருத்துவரிடமோ அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். தக்க வாகனங்களைத் தயார் செய்ய வேண்டும்.
  6. மருத்துவ உதவி கிடைக்கும் வரை சம்பந்தப்பட்டவருக்கு அருகேயே இருக்க வேண்டும்.
  7. நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும்.
தீக்காயம் தீவிர காயம்:

சிகிச்சை முறை:

  • 10 நிமிடங்களுக்கு ஓடும் நீரில் காயத்தைக் காண்பிக்கவும்.
  • ஆம்புலன்ஸைத் தொடர்பு கொள்ளவும்.
  • பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும்.
  •  கடிகாரம், நகை போன்ற தோலில் ஒட்டக்கூடிய பொருள்களை உடனடியாக அகற்றி வி டுங்கள்.
  • நல்ல சுத்தமான முறையில் காயத்தை மூடி வைக்கவும்.
சிறிய காயங்கள்

சிகிச்சை முறை:

  • பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும்.
  • தபால் தலை அளவை விட பெரிய அளவில் தீக்காயம் ஏற்பட்டிருந் தால், மருத்துவ உதவிபெற வேண்டியது அவசியம். பெரிய தீக்காயங்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அத்தியாவசியம்.
துணிகளில் தீப்பற்றிக் கொண்டால்:
  • பதற்றப்பட்டு ஓடவேண்டாம். அப்படிச் செய்தால் தீ வேகமாகப் பரவும்.
  • தீக்காயம் ஏற்பட்டவரை உடனடியாகத் தரையில் படுக்க வைக்கவும்.
  • தீக்காயம் ஏற்பட்டவரை கனமான கோட்டாலோ, போர்வையாலோ சுற்றவும். நைலான் வகைகளைக் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
  • பற்றிக்கொண்ட தீ அணையாமல் எரிந்து கொண்டிருந்தால், கீழே படுக்க வைத்து உருட்டலாம்.
அனைத்து விதமான தீக்காயங்களுக்கும் பொதுவான விதிமுறைகள்:

● ஆயின்மெண்ட், க்ரீம், களிம்பு வகைகளை பயன்படுத்தவே கூடாது.
● பிளாஸ்திரி வகைகளை பயன்படுத்தக் கூடாது.
● கொப்புளங்களை உடைக்கக் கூடாது.
 

பெரியவர்களுக்கு ஏற்படும் திடீர் நோய்ப்பிடிப்பு

வலிப்பு நோய்

காக்கை வலிப்பு என்று பரவலாக அழைக்கப்படும் வலிப்பு நோய் ஏற்படும் போது உடலிலுள்ள பல தசைகள் சுருங்குகின்றன. மூளையில் ஏற்படும் மின் அதிர்வுகளின் விளைவு இது. வலிப்பு ஏற்படும் போது, நினைவு தப்பிப் போகும். பாதிக்கப்பட்ட நபர் மூர்ச்சையடைந்து விடுவார்.

வலிப்பு நோய் எதனால் ஏற்படுகிறது?

  1. தலைக் காயத்தினால்
  2.  மூளை பாதிக்கும் நோய்களால்
  3. மூளையில் பிராணவாயு, குளுக்கோஸ் அளவு குறையும் போது
  4. விஷம் சாப்பிடுவதால், மது அருந்துவதால்
வலிப்பு நோய் திடீர் என்று தாக்கும். தாக்குவதற்கு முன்னால் சில அறிகுறிகளைக் கண்டுகொள்ளலாம். புதிய சுவை, புதிய வாசத்தை உணர முடியும். வலிப்பு எந்த வகையில் வந்தாலும் சரி, எப்போது வந்தாலும் சரி, உடனடியாக சில விஷயங்களை நாம் செய்தாக வேண்டும். முதலில், அவர்களுக்குக் காற்றோட்டம் தேவை. அதை ஏற்படுத்தித் தர வேண்டும். பிறகு, அவரது நாடித் துடிப்பையும் சுவாசத்தையும் சரிபார்க்க வேண்டும். சுற்றியிருக்கும் பொருள்களால் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

கண்டுபிடிப்பது எப்படி?

பொதுவான காரணிகள்

  • திடீரென மயக்கமடைதல்
  • ஆர்ச் வடிவில் பின்புறம் வளைதல்
  • தாக்குப்பிடிக்க முடியாமல் திணறல், வலிப்பு ஏற்பட்டால் கீழ்க்கண்ட மாற்றங்கள் நிகழும்
  • சத்தம் போட்டுக்கொண்டே திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுதல்
  • அசைவில்லாமல் இருத்தல்
  • சுவாசம் தடைபடுதல்
  • திணறல், தாடைகள் இறுகுதல், இரைச்சலுடன் கூடிய சுவாசம், உதட்டையோ நாக்கையோ கடித்தல், கட்டுப்பாட்டை இழந்து விடுவது.
  • சில நிமிடங்களில் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்புதல். என்ன நடந்தது என்பதையே உணராமல் இருத்தல்.
  • சோர்வடைந்து, உடனே தூங்குதல்.
முதலுதவி செய்பவரின் பணி
  • காயமடையாமல் பாதுகாக்க வேண்டும்.
  • நினைவு தப்பிப் போனால், அருகிலுருந்து கவனித்துக் கொள்ளுதல்.
  • உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை.
  • சம்பந்தப்பட்டவர் கீழே விழ நேர்ந்தால், அவரைத் தாங்கிப் பிடித்தல்.
  • காற்றோட்டம் ஏற்படுத்தலாம். கும்பல் கூடாமல் பார்த்துக் கொள்ளுதல்.
  • கூரான பொருள்கள், சூடான பானங்கள் போன்றவை அருகில் இல் லாமல் பார்த்துக் கொள்ளுதல்.
  • எப்போது வலிப்பு ஆரம்பித்தது என்று குறித்து வைத்துக்கொள்ளுதல்.
  • அவரது தலையைப் பாதுகாக்க வேண்டும். முடிந்தால் தலையணையில் அவரது தலையைச் சாய்த்து வைக்கலாம்.
  • கழுத்துப் பகுதியில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்தலாம்.
வலிப்பு நின்றவுடன் என்ன செய்ய வேண்டும்?
  • காற்றுக் குழாயைத் திறந்து சுவாசம் சீராக இருக்கிறதா என்று பார்க்கலாம்.
  • சுவாச மீட்பும் மார்பை அழுத்தும் செயலையும் (அடிப்படை உயிர்பாதுகாப்பு முறை) செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
  • அவர் சீராக சுவாசித்துக் கொண்டிருந்தால் குணமடைவதற்குத் தோதான நிலையில் அவரைச் சாய்த்துப் படுக்க வைக்கவும்.
  • நாடித் துடிப்பு, சுவாசம் இரண்டையும் தொடர்ந்து கவனிக்கவும்.
  • எத்தனை நேரம் வலிப்பு நீடிக்கிறது என்று குறித்து வைத்துக் கொள்ளவும்.
    கவனம்
  • நிலைமை மோசமாக இருந்தால் மட்டுமே அவரை வேறொரு பகுதிக்கு அழைத்துச் செல்லலாம்.
  • அவரது வாயில் எதையும் திணிக்கக் கூடாது.
  • பலவந்தப்படுத்தி அவரை அமைதிப்படுத்த முயற்சி செய்ய வேண்டாம்.
எச்சரிக்கை

கீழ்க்கண்ட முறையில் ஏதாவது நடந்தால் உடனடியாக ஆம்புலன்ஸைத் தொடர்பு கொள்ளவும்.

  •  பத்து நிமிடங்களுக்கு மேல் அவர் பேச்சு மூச்சின்றி இருந்தால்
  • ஐந்து நிமிடங்களுக்கு மேல் வலிப்பு தொடர்ந்தால்
  • முதல் முறையாக வலிப்பு ஏற்பட்டால், தொடர்ந்து வலிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந் தால்.
  • வலிப்பு வந்ததன் காரணத்தை அவர் உணராது போனால்

நன்றி:  Mohamed

19 January 2012

பெண்ணுரிமை பற்றி



பெண்ணுரிமை பற்றி இந்த நூற்றாண்டில் பலர் பேசுகின்றனர். அவர்களின் பேச்சுகளில் மட்டுமே  அவர்றை காணமுடிகிறது. நிஜ வாழ்க்கையில் பெண்களை போதை பொருட்களாகவே பார்க்கின்றனர்.  ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு அழகிய உரிமைகளை கொடுத்து அதை நடை முறை படுத்தியும் இஸ்லாம் காண்பித்து இருக்கிறது. அதில் சிலவற்றை பார்ப்போம்.

பிறப்புரிமை


பெண்கள் பிறப்பதை கேவலமாக கருதிய அறியாமை காலத்தில் வெறும் போக பொருளாக பயன்படுத்தபட்ட மடமை காலத்தில் அவளும் இறைவனின் பிரஜை என்றும், அவளும் இப்பூமியில் வாழ தகுதியுடைய ஆத்மா என்றும் கூறி அவள் பிறக்கும் உரிமையை பெற்று தந்த உன்னதமான மார்க்கம் இஸ்லாம்.

'நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள், அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவை (வாழக்கை வசதிகளையும்) அளிக்கின்றோம். அவர்களை கொல்லுதல் நிச்சயமாக பெரும் பிழையாகும். 

                                - திருக்குர்ஆன் 17: 31

விஞ்ஞானம் வளர்ந்த இவ்வுலகத்தில், பெண்சிசு கொலை செய்யும் பல நவீன மனிதர்களுக்கு இதுவே தக்க பதிலடியாகும்.

கல்வியுரிமை


பெண் பிறப்பதே கேவலமாக எண்ணிய காலத்தில் கல்வி கற்கும் உரிமை கேட்டால் கேள்விக்குறி மட்டுமே மிஞ்சும்.

பெண்ணுக்கு படிப்பெதற்கு என்று கூறிய மடயர்களை ஒழித்து "சட்டங்கள் ஆழ்வதும் பட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்று 20ம் நூற்றாண்டு கவிஞன் பாரதி சொல்லிவிட்டு போனார் . ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே, கல்வியை கற்பது ஆண், பெண் இருபாலர் மீதும் கட்டாய கடமை என்று உரிமையையும் கடமையாக வலியுறுத்திய செம்மல் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், அந்த அறியாமை காலத்திலேயே சட்ட வல்லுனராக, மார்க்கம் கூறும் மேதையாக விளங்கிய பெண்மணி தான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள். எந்த அளவிற்கு என்றால் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் தெரியவில்லை என்ற பதிலை நான் கண்டதில்லை என்று அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

திருமண உரிமை


ஆயிரம் காலத்துப் பயிர்" என்றும் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது" என்றும் பேசும் பிற மதத் திருமணக் கோட்பாடுகளை முற்றிலும் உடைத்துத் தகர்க்கும் இஸ்லாம், திருமணத்தை "ஒரு வாழ்க்கை ஒப்பந்தம்" என்ற எளிய சித்தாந்தமாக உலகிற்கு அறிமுகப் படுத்தியத, இருமனம் இணையும் திருமணம் உறவில் தன்னை மணக்கும் மணவாளனை தேர்வு செய்யும் உரிமையையும், மஹர் என்னும் மணக்கொடையை கேட்கும் உரிமையையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.
 
'...அவர்களை திருமணம் விஷயத்தில் நிர்பந்திக்கூடாது..' 
                        - திருக்குர்ஆன்(17:31)

'நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடையை) மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்.' 

                        - திருக்குர்ஆன்(17:31)

மகன் கற்ற கல்விக்கும், அவனது அழகுக்கும் வட்டியுடன் கணக்கு போட்டு பைசா விடாது வாங்கும் (வர தட்சணை கைக்கூலி) வர்க்கத்தை திருத்தவும், பெண்களின் உரிமையை நிலை நாட்டவுமே இறைவன் இவ்வசனத்தை இறக்கியுள்ளான்.

விவாகரத்து உரிமை


திருமண உறவில் பிரச்னை ஏற்பட்டு பிளவு ஏற்படும் நிலை வந்தால் அவனை விட்டு விலகவும் இஸ்லாம் உரிமையினை அளித்துள்ளது. ஒவ்வாத கணவனோடு ஒட்டி தான் வாழ வேண்டும் என்றோ, அவனது அடிக்கும் குத்துக்கும் அடங்கி தான் போக வேண்டும் என்றோ கூறவில்லை. மாறாக விருப்பம் இல்லையா விலகி விடு என்று கூறி 'ஹீலவள்' என்ற உரிமையை வழங்கியுள்ளது மார்க்கம்.

சொத்துரிமை


திருமணம் முடித்து கொடுத்த பின் பெண்ணை கைக்கழுவி விடும் சமுதாயத்தில் பெற்றோரின் சொத்தில் பங்கு கேட்டும் உரிமையையும் அல்லாஹ் கொடுத்துள்ளான்.

'பெற்றோரோ நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்தில்) பெண்களுக்கும் பாகமுண்டு, அது குறைவாக இருந்தாலும் சரி அதிகமாக இருந்தாலும் சரியே'. 

                     - திருக்குர்ஆன் 4: 7

சம்பாதிக்கும் உரிமை


பெண் அவளுக்கு பாதுகாவலர் இல்லாத சமயத்தில் தன் தேவைகளை பூர்த்தி செய்ய அவள் சம்பாதித்துக் கொள்ளலாம். அவளுக்கு பொறுப்பாளர் இருக்கும் போது அவரின் அனுமதியுடன் சம்பாதிக்க செல்லலாம் என்ற சுதந்திர உரிமையை இஸ்லாம் கொடுத்து உள்ளது

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான் 

                        - (அல்குர்-ஆன் 4:32)
 

மேற்கண்ட வசனத்தில் பெண்கள் சம்பாதித்ததில் அவர்களுக்கு பங்கு உண்டு என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து பெண்கள் சம்பாதிக்கலாம் என்ற அனுமதி நேரடியாக வழங்கப்படுகின்றது.
 

பெண்கள் வேலை செய்து சம்பாதிப்பதை மார்க்கம் தடைசெய்யவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் விவசாயப் பணியை செய்திருக்கிறார்கள். அதை நபி(ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். இதை பின்வரும் ஹதீஸ்களில் அறியலாம்.


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் ("இத்தா'வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், "ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள் ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்'' என்றார்கள்.
                       - முஸ்லிம் (2972)

சாட்சியம் அளிக்கும் உரிமை


பெண் பெண்ணாக மதிக்கப்படாத காலத்திலேயே அவள் சாட்சியம் சொல்லக்கூடிய அளவிற்கு உயாந்நதவர்கள் என்று அவளை உயர்த்தி அந்த உரிமையையும் இறைவன் வழங்கியுள்ளான்.

'... (கடனுக்கு பெண்கள் இருவரை சாட்சியாளர்களாக எடுத்துக் கொள்ளுங்கள்..'' 

                           - திருக்குர்ஆன் 2: 282

பர்தா 


இறைவன் வழங்கியுள்ள இந்த உன்னதமான உரிமைகளை எல்லாம் அறியாத மூடர்கள் பர்தாவை கண்டதும் இஸலாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று கூப்பாடு போடுகிறார்கள். காம வெறியர்களின் பார்வையிலிருந்து பாதுகாக்கும் இந்த பாதுகாப்பு, உடலுக்கு மட்டும் போடவில்லை. பார்வைக்கு நடைக்கு மற்றும் உள்ள அனைத்திற்கும் தான். ஏனென்றால் பெண்மை என்ற மென்மை பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். சந்தை மாடுகளை போல் அவிழ்த்து, காண்பவர் கண்களுக்கு விருந்து படைக்க அது ஒன்றும் கடையில் விற்கப்படும் காட்சி பொருள் அல்ல. கற்பை பாதுகாப்பது அடிமை தனமா? மேலே கூறிய எந்த உரிமையையும் பெண்களுக்கு கொடுக்காமல் பர்தாவை மட்டும் கொடுத்து மூலையில் முடக்கி உட்கார சொன்னால் தான் அடிமை தனம் எனலாம்.

'... நபியே..நீர் கூறுவீராக! மூஃமினான பெண்கள், தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ளட்டும். தாங்கள் மறைத்து வைக்கும் அலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்'. 

                           - திருக்குர்ஆன் 24: 31

 இப்படி பாதுகாப்புடன் அவள் ஆசிரியை பணி மட்டுமல்ல ஆகாயத்தை எட்டி பிடிக்கும் பணியையும் செய்யலாம்ஃ இதை விடுத்து அரை குறை ஆடையுடன் அரை கால் டவுசரும் போடும் உரிமையும் ஆ;ணகளை பொல் வெளியில் சுற்றி திரியும் உரிமையும் வேண்டும் என்பவர்களுக்கு பர்தா மட்டும் அல்ல, சொல்லப்படும் அனைத்து ஒழுக்க மாண்புகளும் உரிமை பறிப்பாக தான் தெரியும். விழா கோலம் பூண்டு உலா வரவும் உல்லாச பறவை போல் பறந்து காணும் கண்களுக்கெல்லாம் குளிர்ச்சி ஊட்டும் காட்சி பொருளாக இருக்க வேண்டும் என்ற உரிமை வேண்டும் என்று நினைக்கும் ஒரு சிலருக்கு இஸ்லாத்தில் மட்டும் அல்ல கலாச்சாரம் மிக்க எந்த நாட்டிலும் எந்தவொரு வீட்டிலும் இடமிருக்காது.


நன்றி: அனைத்து இஸ்லாமிய தளங்கள்


குறிப்பு: இந்த கட்டுரையில் தவறுகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள். திருத்தி கொள்ள முயல்கிறேன். 

17 January 2012

இரத்ததானம் பற்றி அறிவோம்



                                           "பிறரின் இறப்பிற்கு கண்ணீர் கொடு"
                                          "பிறரின் கண்ணீருக்கு இரத்தம் கொடு"

இரத்தத்தில் A, B, AB, O மற்றும் அதில் பாஸிட்டிவ் நெகடிவ் ஆகிய உட்பிரிவுகள் உள்ளன.  இரத்தத்தின் பிரிவுகளை கண்டுபிடித்தவர் கார்ல் லாண்ட்ஸ்டீனர். அவர் பிறந்த ஜூன் 14ம் தேதி தான் இரத்த தான நாளாக கடைபிடிக்கப்படுகிறது.


                              "மனித நேயத்தை சொற்களால் அல்ல
                            இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்”

விபத்து மற்றும் அறுவை சிகிச்சைகளின் போது இரத்தம் தேவைப்படுவதால் நாம் தானம் செய்யும் இரத்தம் ஒருவருடைய உயிர் காக்கும் பணிக்கு உதவுகிறது.
ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். 
உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

                           "அனைவரையும் இரத்த சொந்தங்களாக்க
                                         இரத்த தானம் செய்வோம்"


யார் யார் இரத்த தானம் செய்யலாம்
  • 17 முதல் 60 வயது வரையுள்ள எல்லா ஆண்களும் பெண்களும் இரத்ததானம் செய்யலாம்.
  • இதில் இரத்த தானத்தின்போது எடுக்கப்படும் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் மட்டுமே.
  • இரத்ததானம் செய்பவரின் இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு மேல் இருக்க வேண்டும்.
  • இரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.
  • மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம்.
  • இரத்ததானம் செய்ய இருபது நிமிடங்களே ஆகும்.
  • இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.
  • இரத்ததானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம்.


ரத்த தானம் செய்யக் கூடாதவர்கள்
    • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா-காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தீவிரமான தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள்
    • வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பால் வினை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
    • கடந்த ஒரு வருடத்தில் மஞ்சள் காமலையால் பாதிக்கப்பட்டவர்கள், மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், சமீபத்தில் நோய் தடுப்பு ஊசி போட்டவர்கள், கர்பிணிப் பெண்கள், குழந்தைக்கு பால் கொடுப்பவர்கள், மாதவிடாய் காலத்தில் இருப்பவர்கள்.
    • இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது.
    • எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்ததானம் கண்டிப்பாக செய்யக்கூடாது.
    • இரத்த தானம் என்ற வாக்கியத்திலேயே தானம் என்று இருப்பதால் இரத்தத்தை தானம் மட்டுமே செய்ய வேண்டுமே தவிர விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.

  • இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்
  • இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
  • இரத்ததானம் செய்வதால் இரத்த அழுத்தம் குறைகிறது.
  • மாரடைப்பு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.