நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

16 January 2012

சில நேரங்களில் சில மனிதர்கள்
      நியூயார்க் நதரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை நிலவியது. சிலர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்கள், சிலர் பத்திரிக்கைகள் படித்தபடி அமர்ந்திருந்தார்கள். தீடீரென்று அங்கு ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார்.  அவர் அந்த எழுத்தாளர் அருகே கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்தார். அந்த சிறுவர்கள் இருவரும் ஆறு வயதைத்தாண்டாதவர்கள் அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்த அமைதி காணாமல் போயிற்று. குழந்தைகள் சத்தம் போட்டு விளையாட ஆரம்பித்து, பின்னர் சண்டையிட்டுக் கொண்டு ஒருவொருக்கொருவர் பொருட்களை எடுத்து வீசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். அந்த தந்தையோ அந்த சிறுவர்களை கண்டிப்பதாக தெரியவில்லை. கண்களை திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
        
          அங்கு அமர்ந்திருந்த மற்றவர்கள் எரிச்சலுடன் அவரைப் பார்த்ததை அவர் அறியவில்லை. அந்த எழுத்தாளர் தன்னபிக்கை, பொறுமை பற்றியெல்லாம் நிறைய எழுதிக் குவித்த எழுத்தாளர். அவரே பொறுத்து பொறுத்து பார்த்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தன்னருகே கண்னை மூடிக்கொண்டு அமர்ந்திருந்த அந்த நபரிடம் சொன்னார். "உங்கள் பிள்ளைகள் மற்றவர்களைத் தொந்தரவு செய்கிறார்கள் அவர்களை கொஞ்சம் கட்டுபடுத்துங்களேன்".

           அந்த நபர் கண்களை மெள்ள திறந்தார். "ஆமாம்... ஏதாவது செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் தாய் இறந்து விட்டார் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவள் உடலைத் தர சிறிது நேரம் ஆகும் என்றதால், அங்கிருக்க முடியாமல் இங்கு வந்தேன். இனி என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தேன். அவர்களும் இதை எப்படி எடுத்துக் கொள்வது, என்ன செய்வது என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன்"... மன்னிக்கவும்.

        அந்த எழுத்தாளர் அதுவரை அந்த நபர் மீதும், அந்த சிறுவர்கள் மீதும் கொண்டிருந்த கோபமெல்லாம் ஒரு கணத்தில் காற்றாய் பறந்து போயிற்று. அதற்குப் பதிலாக இரக்கமும், பச்சாதாபமும் மனதில் எழ அவர் மனைவி இறந்ததற்கு வருத்தம் தெரிவித்து விட்டு ஏதாவது உதவி தேவையா என்று மனதாரக் கேட்டார்.

1 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....