நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

29 January 2012

அறியாத சில விசயங்கள்


  • இரண்டு நாளைக்கு ஒருமுறை மீன் இறைச்சியை சாப்பிட்டால் மாரடைப்பு வருவது 30சதவீதம் குறையும் என ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • துப்பாக்கி சின்னத்தை தேசிய கொடியில் பொறித்திருக்கும் நாடு மொசாபிக்.
  • விமானத்தில் பயணம் செய்யும் போது, சாக்லேட் கொடுக்கின்றனர். ஏன் தெரியுமா? சில பயணிகளுக்குத் தலைச் சுற்றல், மயக்கம் போன்றவை விமானப் பயணத்தின் போது ஏற்படும். சாக்லேட்டில் உள்ள குளுகோஸ் இவை வராமல் தடுக்கிறது. அது மட்டுமல்ல... சாக்லேட்டின் வாசனையும், சுவையும் பயணிகளுக்கு வாந்தி வராமல் தடுக்கும். மஞ்சள் காமாலை வந்தவர்கள் உணவு விஷயத்தில் ஆர்வமின்றி இருப்பர். இவர்களின் சுவையையும், சக்தியையும் அதிகரிக்க இவர்கள் சாக்லேட் அல்லது புளித்த சுவை கொண்ட மிட்டாய் போன்றவற்றை சாப்பிடலாம். தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு சாக்லேட்டைமென்றால், சோர்வு குறைந்து சுறுசுறுப்பாக எழுத முடியும்.
  • பெருங்குடல் புற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் 2003ல் 57,000பேர் இறந்தனர். இதே காலத்தில் இந்த நோயினால் 150,000 மக்கள் பாதிக்கப்பட்டனர். நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்த இடத்தை இந்த நோய் பெறுகிறது.
  • ஒரு நாளைக்கு 7,000,000 மூளை அணுக்களுக்கு மனிதன் வேலை கொடுக்கிறான்.
  • பூமியிலிருந்து பார்க்கும் பொழுது வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது. ஆனால் விண்வெளியில் வானம் கறுப்பாகத் தோன்ற காரணம் என்ன?
    பூமியின் மேல் உள்ள காற்றுமண்டல அடுக்குகளில் ஏற்படும் ஒளிச் சிதறலால் நீல நிறம் தெரிகிறது. விண்வெளியில் இவ்விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை.
  • உடலில் ஏதேனும் வெட்டுக்காயம் ஏற்பட்டால் அப்போது இரத்த நாளங்கள் வெட்டுபடும் போது அதனின்று இரத்தம் பீறிக் கொண்டு வெளியேறும். ஆனால் சிறிது நேரத்தில் அது தானாகவே நின்று விடும். ஏனென்றால் இரத்தத்திலுள்ள் ·பைப்ரினோஜன்' எனப்படும் நார்புரதம் வெளிக்காற்றில் பட்டவுடன் ஒர் வலை போலப் பின்னிக் கொண்டு மேற் கொண்டு இரத்தம் வெளியேறாமல் காக்கும். இதற்கு இரத்தம் உறைதல் என்று பெயர்.
  • மண்பானையில் நுண் துவாரங்கள் உள்ளன. இதன் வழியாக நீர் கசியும். கசிந்த நீர் வெளிக்காற்றின் உஷ்ணத்தால் ஆவியாகும். ஆவியாவதற்குத் தேவையான அதிகப்படி உஷ்ணத்தைப் பானையில் உள்ள நீரிலிருந்தே எடுத்துக் கொள்ளும். அப்பொழுது நீரின் வெப்ப நிலை வெளிக் காற்றின் வெப்பத்தை விடக் குறைந்து காணப்படும். அதனால் பானைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கிறது.
****************************************************************************************************
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

*****************************************************************************************************

0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....