நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

29 January 2012

முட்டைக்கோஸ் தூள் பகோடா



வழக்கமான பகோடாவிற்கு பதில் முட்டைக்கோஸ் தூள் பகோடா செய்து பார்ப்போம். வித்தியாசமான சுவையுடன் சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். சத்தானதும் கூட. செய்முறை இதோ..



தேவையான பொருட்கள் 

முட்டைக்கோஸ்                      --       200௦ கிராம்
பெரிய வெங்காயம்                  --        2
பச்சை மிளகாய்                         --        2
மிளகாய் தூள்                             --      1/2 டீஸ்பூன்      
பச்சைக் கொத்தமல்லி           --        ஒரு கைப்புடி
பூண்டு                                            --        2 பல்
கடலை மாவு                              --        ஒரு கப்
அரிசி மாவு                                  --         ஒரு கைப்புடி
சோடா உப்பு                               --         ஒரு சிட்டிகை
உப்பு                                               --          தேவையான அளவு
சமையல் எண்ணெய்             --           தேவையான அளவு



செய்முறை

  • முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், பச்சைக் கொத்தமல்லி தழை இவைகளை பொடியாக அறிந்து கொள்ளவும்.
  • பூண்டு தட்டி வைத்து கொள்ளவும்.
  • கடலை மாவு, அரிசி மாவுடன், நறுக்கிய முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி மற்றும் பூண்டு சேர்க்கவும். இந்தக் கலவையில் சோடா உப்பை தெளிதாற்போல் விட்டு கிளறிக் கொள்ளவும்.
  • சமையல் எண்ணெய் 2 டீஸ்பூன் எடுத்து காய வைத்து சூடான எண்ணையை பகோடா மாவில் ஊற்றி பிசையவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பகோடா மாவை உதிர்த்தாற்போல போட்டு மொருமொருவென பொன்னிறமானதும் எடுக்கவும்.
  • மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற பலகாரம் இது.
                                                                                                
                                                                                                   Thanks: Mrs Geetha Thaivasigamani



****************************************************************************************************
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

*****************************************************************************************************

1 comments:

Hotlinksin.com said...

உங்கள் பதிவுகளை hotlinksin.com இணையதளத்தில் பகிர்ந்திடுங்கள்.

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....