நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

06 March 2012

அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..?நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஆனால் ஒரே நேரத்தில் இதை அருந்துவது நல்லதல்ல. 3 அல்லது 4 மணி நேர இடைவெளிக்கு ஒரு முறை நீர் அருந்த வேண்டும். மேலும், குழம்பு, ரசம், மோர், ஜூஸ் போன்றவற்றாலும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்துவிடுகிறது.எனக்குத் தாகமே எடுப்பதில்லை. அதனால் நான் தண்ணீர் பெரும்பாலும் குடிப்பதில்லை ஆனாலும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சிலர் பெருமிதமாகக் கூறுவதுண்டு.

ஆரம்பத்தில் இவர்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பது போல் தோன்றும். ஆனால் நாளடைவில் சிறுநீரகங்களில் செயல்பாடுகள் செயலிழக்க ஆரம்பிக்கும்.

ஒருவர் 4 மணி நேரத்திற்குமேல் நீர் அருந்தாமல் இருப்பது தவறு. ஏனெனில் ஆரோக்கியமான மனிதர்கள் போதிய அளவு நீர் அருந்தாவிட்டால் உடலிலிருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் போகும் போது சிறுநீர் குழாயில் எரிச்சல் உண்டாகும். சிறுநீரகத்தில் கழிவுப் பொருட்கள் தங்கி சிறுநீரகக் கல்லாக மாறக்கூடும்.

சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும். இது இயல்பு நிலையில் உள்ளவர்களுக்கு. அதிகளவு நீர் அருந்துவதும் உடலுக்கு நல்லதல்ல. ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்யவேண்டியிருக்கும். மேலும் சிறுநீரகத்தின் செயல்பாடும் அதிகமாக இருக்கும். இது உடலுக்கு நாளடைவில் தீங்கை ஏற்படுத்தும்.

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அருந்துவதில் தவறில்லை. இது உடலுக்கு மிகவும் நல்லது. அதற்காக ஒரே நேரத்தில் 1 லிட்டருக்கு மேல் நீர் அருந்துவது தவறு. தினமும் இடைவெளி விட்டு ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தினால் உடலுக்கு போதுமானது. இவ்வாறு செய்துவந்தால் நன்கு பசி உண்டாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

பொதுவாக நீரிழிவு நோய், காசநோய், மதுப்பழக்கம் புகைப்பழக்கம் உள்ளவர்கள், முதியவர்கள், அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.

அதுபோல் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும்போதும், தேர்வு எழுதச் செல்லும்போதும், அல்லது அவசரமாக வெளியே செல்லும்போதும் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். இதில் கெடுதல் ஏதும் இல்லை.

குறைந்த அளவு நீர் அருந்துவதும், அளவுக்கு அதிகமாக நீர் அருந்துவதும் நல்லதல்ல. சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் நீர் அருந்துவதால் நீண்ட ஆரோக்கியத்தைப் பெறுவது நிச்சயம்.

1 comments:

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....