நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

07 March 2012

தினம் ஒரு தகவல் - இன்று பேஸ்புக் ஒரு சிறப்புப் பார்வை


ந்த வலைத்தளம் 2004 - ஆம் ஆண்டு ஆரம்பமானது. மார்க் எலியட் ஜூகர்பெர்க் என்பவர் தனது நண்பர்கள் டஸ்டின் மாகேவிச் எடுராடோ சாவரின், கிரிஸ்ஹியூக்ஸ் ஆகியோருடன் இணைந்து இந்தத் தளத்தை உருவாக்கினார்.

தான் படித்த ஹார்வேட் பல்கலைக் கழகத்தில் விளையாட்டாய் உருவாக்கிய இந்தத் தளம் இன்று உலகெங்கும் பரவி 900 மில்லியன் பயன்பாட்டாளர்களுடன் பிரமிப்பூட்டுகிறது.

ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனரும் சராசரியாக 130 நண்பர்களைக் கொண்டிருக்கின்றனர் என்கிறது பேஸ்புக்கின் ஒரு ஆய்வு.
900 மில்லியனுக்கும் மேற்பட்ட பொருட்களில் மக்கள் இதின் வழியே ((Pages, Groups, Events and Community pages) )பயனிக்கிறார்களாம்.

இன்றைய ஃபேஸ்புக்கில் 13 வயதான நபர்கள் சேரலாம்

சராசரியாக ஒவ்வொரு பயனரும் 80 மேற்பட்ட ( community pages, groups and events) போன்றவைகளில் இணைக்கப்படுகிறார்கள்.

பேஸ்புக்கின் வழியாக ஒரு நாளைக்கு 250 மில்லியன் படங்கள் ஏற்றப்படுகிறது (image upload)

70 க்கும் அதிகமான மொழிகளில் பயன்படுத்தும் வகையில் இருப்பது இதன் சிறப்பு.

80 % சதவீததிற்கும் மேற்பட்ட பயனர்கள் United States அல்லாத வெளிநாட்டினரே!

முகநூல் நிறுவனம் 2,000 ஊழியர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

பேஸ்புக்கை தினமும் 300,000 மேற்பட்ட பயனர்கள், மொழிபெயர்ப்பு பயன்பாட்டைப்(translations application) பயன்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

பேஸ்புக் பயனர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 20 மில்லியன் பயன்பாடுகளை (Apps) இதன் வழியே நிறுவிக்கொள்கின்றனர்.

பேஸ்புக்கிற்கான இயங்குதளத்தையோ அல்லது பயன்பாட்டையோ ஒவ்வொரு மாதமும் 500 மில்லியனுக்கும் மக்கள் மற்ற தளங்களில் பயன்படுத்துகின்றனர்.

மாதந்தோறும் 7 மில்லியனுக்கு மேற்பட்ட பயன்பாடுகளும்(Applications), வலைதளங்களும்(Websites) பேஸ்புக்குடன் ஒருங்கிணைப்படுகின்றன.

350 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களின் மொபைலின்(Mobile) மூலமே பேஸ்புக்கை அணுகுகின்றனர்.

475 மேற்பட்ட மொபைல் தயாரிப்பாளர்கள் பேஸ்புக்கின் மொபைல் பயன்பாடுகளை பயன்படுத்துகின்றனர்.


வியாபாரிகளும், நிறுவனங்களும் தங்களுடைய பொருள்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வழியாக முகநூலைக் கருதுகின்றனர்.

ஒரே எண்ணம், விருப்பம் உடையவர்களை ஒன்றிணைக்கும் தளமாக உள்ளது.

பிரிந்து போன குடும்பங்கள் இந்த முகநூல் மூலம் ஒன்று சேர்ந்த நிகழ்வுகளும் உண்டு.

சிலர் நண்பர்கள், உறவினர்களிடம் தொடர்பு கொள்ளும் தளமாகக் கருதினாலும், வேறு சிலர் நேரடித் தொடர்பு இல்லாததால் முகநூல் மூலம் சமூகக் குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதுகின்றனர்.

அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இணைய முழுவதிலும் ஃபேஸ்புக் 
தான் இரண்டாவது மிகப் பரவலமான இணையத்தளமாகும்.

0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....