நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

19 March 2012

உங்களை அடிமைப்படுத்தக்கூடியது "ஐஸ்கிரீம்"அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட கூடியவரா நீங்கள் முதலில் இதை படியுங்கள்...

ஸ்கிரீம் பிரியர்களே ஜாக்கிரதை! ஐஸ்கிரீம் உங்களுக்கு உயிருக்கு உயிரானது தான். ஆனால் இதுவும் "கோகைன்" போதைபொருளை போல அடிமைபடுத்த கூடியது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் 'கோகைன்', 'ஐஸ்கிரீம்' இரண்டுக்கான தாகமும் ஒன்றுதான் என்கிறார்கள் இவர்கள்.இதுதொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்ட ஓரிகான் ஆராய்ச்சி நிறுவனத்தினர் கூறுகையில் "தொடர்ச்சியாக கோகைன் பயன்படுத்துவதுபவருக்கு எப்படி அவரின் மூளை மேலும் மேலும் அது வேண்டும் என்று விரும்புகிறதோ, அதை போல ஐஸ்கிரீம் சாப்பிடும் போதும் ஆசைப்படுகிறது" என்று கூறுகிறார்கள்.

தற்போதைய புதிய ஆய்வு, தொடர்ந்து துரித உணவு (Fast Food ) சாப்பிடுவோர் அதற்கு அடிமையாகக்கூடும் என்ற முந்தைய ஆய்வுக்கு வலுச் சேர்ப்பதாக உள்ளது. இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான டாக்டர் கைல் பர்கர், 'அதிக கொழுப்பு' அல்லது 'அதிக சர்க்கரை' உள்ள பொருட்களை அதிகமாகச் சாப்பிடுவது, அவற்றுக்கான மூளையின் எதிர்வினையை மாற்றுவது போலத் தோன்றுகிறது. அதாவது நாளாக நாளாக குறிப்பிட்ட உணவுப்பொருளால் கிடைக்கும் மகிழ்ச்சி குறையும் உணர்வு ஏற்படுகிறது என்கிறார். 

அவர் தொடர்ந்து கூறும்போது, 'தொடர்ந்து போதைபொருள் உபயோகிப்பரிடம் இந்தத் தன்மை காணப்படுகிறது அவர்கள் போதை பொருளைத் தொடர்ந்து உபயோகிக்க உபயோகிக்க, அதனால் கிடைக்கும் திருப்தி குறைவது போல உணர்கிறார்கள். அதனால், பழைய திருப்தியை அடைவதற்க்காக மேலும் அதிகமாக உண்ணவோ, போதைபொருளை அதிகமாகப் பயன்படுத்தவோ செய்கிறார்கள்' என்று விளக்கம் அளிக்கிறார். 

இது தொடர்பான ஆய்வில் 150 டீனேஜ் இளைஞர் - இளைஞிகள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களிடம் அவர்களது உணவுப் பழக்கம் தொடர்ச்சியான விருப்பம் குறித்த கேள்வி எழுப்பி பதில்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அந்த இளைஞர்களுக்கு 'சாக்லெட் மில்க் ஷேக்' பருகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பணத்தை கொடுப்பதற்கு முன் அவர்களுக்கு சாக்லெட் மில்க் ஷேக்கின் படம் காண்பிக்கப்பட்டு, அப்போது மூளையில் ஏற்படும் மாற்றங்கள் 'ஸ்கேன்' செய்யப்பட்டன 

ஆய்வில் பங்கேற்ற அனைவருமே ஐஸ்கிரீம் ருசிக்க விரும்பினர். ஆனால் அவர்கள் அதை அதிகமாகச் சாப்பிட சாப்பிட அதனால் ஏற்படும் மகிழ்ச்சி அவர்களுக்குக் குறைந்தது அதை ஈடுகட்ட அவர்கள் மேலும் மேலும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதும் தெரிய வந்தது.

நன்றி: தினத்தந்தி இளைஞர் மலர்
------------------------------------------------------------------------------------------------
 உங்களுக்கு இந்த வலைப்பூ பிடித்திருந்தால்
உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லவும்...
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....