நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

11 March 2012

நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள்!


முதலில் கலோரி என்றால் என்ன?   என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

நாம் உண்ணும் உணவு, உயிர்வளியுடன் சேர்ந்து எரி சக்தியாக மாற்றமடைகிறது. இவ்வுடல் சக்தி உருவாகக் காரணமாக அமையும் எரிபொருள் சக்தியே கலோரி ஆகும்.செல்லில் உள்ள மைட்டோகாண்டிரியா என்ற பகுதியில் தான் எரிதல் நடைபெறுகிறது. நம் உடல் நன்கு செயல்பட ஒரு குறிப்பிட்ட அளவு கலோரி நமக்குத் தேவை. இத்தேவை நம் உடல் பருமன், நாம் செய்யும் வேலை இவற்றைப் பொருத்து அமையும்.

நாம் பலவிதமான உணவுகளை உட்கொள்கிறோம். சாதாரண பிஸ்கெட்டில் இருந்து பிரியாணி வரை சுவை சுவையாய், வகை வகையாய் சாப்பிடுகிறோம். ஆனால் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து நமக்கு எவ்வளவு கலோரி சக்தி கிடைக்கிறது என நமக்குத் தெரியுமா?

பொதுவாக நாம் உட்கொள்ளும் சில உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள் விவரம்:

பால் பொருட்கள்
பால் 1 டம்ளர் (200 மில்லி)  - 140 கலோரிகள்

காபி    -  140 கலோரிகள்
ஆடை நீக்கிய பால் 1 டம்ளர்  -   40 கலோரிகள்
வெண்ணெய் 1 டீ ஸ்பூன்   - 150 கலோரிகள்
நெய் 1 டீ ஸ்பூன் -   45 கலோரிகள்

பழங்கள்
வாழைப்பழம் 1 பெரியது - 60 கனலிகள்
மாம்பழம் 1 சிறியது - 100 கலோரிகள்
ஆப்பிள் 1  -  60 கலோரிகள் 
ஆரஞ்சு (நடுத்தரம்)  -  50-60 கலோரிகள் 
நீர் நிறைந்த பழங்கள், காய்கறிகள்  -  40 கலோரிகள்
கடின பழங்கள்,காய்கறிகள் -  60-100 கலோரிகள்
பழச்சாறு சர்க்கரையுடன் -  150 கலோரிகள்
பழச்சாறுசர்க்கரையின்றி -  100 கலோரிகள்
300 மில்லி பானங்கள் -  250 கலோரிகள்

சமைத்த பண்டங்கள்
அரிசி 25 கிராம் -  80 கலோரிகள்
இட்லி 2  -   80 கலோரிகள்
உப்புமா - 150 கலோரிகள்
தோசை (2ஸ்பூன் எண்ணெய்) - 140 கலோரிகள்
பூரி (2) உருளை -  250 கலோரிகள்
பொங்கல் (நெய் இல்லாமல்) - 100 கலோரிகள்
பொங்கல் நெய்யுடன் - 190 கலோரிகள்
2 சப்பாத்தி எண்ணெய் சேர்த்தது - 120 கலோரிகள்
2 சப்பாத்தி எண்ணெயின்றி -   80 கலோரிகள்
1 வடை - 140 கலோரிகள்
வெஜிடபிள் பிரியாணி ஒரு கப் -  200 கலோரிகள்
பரோட்டா 1 - 120 கலோரிகள்
ஒரு சாப்பாடு (சைவம்)  - 500-600 கலோரிகள்


அசைவ உணவுகள்
மீன் 50 கிராம் - 55 கலோரிகள்
இறைச்சி - 75 கலோரிகள்
முட்டை - 75 கலோரிகள்
மட்டன் பிரியாணி ஒரு கப் - 225 கலோரிகள்
கோழிக்கறி 100 கிராம் - 225 கலோரிகள்

மற்ற பண்டங்கள்
இனிப்பு பிஸ்கட் 15 கிராம் - 70 கலோரிகள்
கேக் 50 கிராம் - 135 கலோரிகள்
கேரட் அல்வா 45 கிராம் - 165 கலோரிகள்
ஜிலேபி 20 கிராம் - 100 கலோரிகள்
ரசகுல்லா - 140 கலோரிகள்

ஒரு மனிதனின் வயதிற்கேற்ப தேவைப்படும் கலோரிகள்


                                 வயது   ஆண்   பெண்

                                  20-30       3200        2300 
                                  30-40       3100        2200 
                                  40-50       3000        2160 
                                  50-60       2750        2000 
                                  60-70       2500        1800 
                                  >70          2200        1500 


0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....