நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

28 July 2012

ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்



ஒலிம்பிக் போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு வழங்கப்பட உள்ள பதக்கங்கள் எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை ... 


இது குறித்த சில சுவாரஸ்சியமான தகவல்களை பார்க்கலாம்
  • ஒவ்வொரு ஒலிம்பிக் பதக்கமும் உருவாக்கும் போது, சுமார் 1,300 பாரன்ஹீட் வெப்பநிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு 2 மில்லியன் எடையுடன் கூடிய அச்சு வைத்து 15 நிமிடங்கள் அழுத்தம் அளிக்கப்படுகிறது.
  • 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியின் வெற்றியாளர்களுக்கான பதக்கம் தயாரிப்பில் மொத்தம் 800 பேர் ஈடுபட்டனர்.
  • இதுவரை வழங்கப்பட்டுள்ள ஒலிம்பிக் பதக்கங்களிலேயே, 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வழங்கப்பட உள்ள பதக்கங்களின் எடை சற்று அதிகமாக உள்ளது.
  • 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியின் பதக்கங்களை வடிவமைத்தவர் பிரபல இங்கிலாந்து கலைஞர் டேவிட் வாக்கின்ஸ்.
  • ஒவ்வொரு பதக்கத்தின் உருவாக்கத்திற்கும் சுமார் 10 மணி நேரம் தேவைப்படுகிறது. இதற்காக கொலோசஸ் என்ற பிரத்யேக அழுத்த முறை பின்பற்றப்படுகிறது.
  • ஒலிம்பிக் பதக்கத்தின் முன் பக்கத்தில் சிறகுகளுடன் இருக்கும் நபரின் உருவம் கிரேக்க விளையாட்டு கடவுளான 'நைக்'கை குறிக்கிறது. இவர் பார்த்தினானில் இருந்து இங்கிலாந்து நகருக்குள் நுழைவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு ஒலிம்பிக் தங்கப்பதக்கத்திலும் 1.34 சதவீதம் மட்டுமே தங்கம் இருக்கும். மீதமுள்ள பகுதி தாமிரத்தால் ஆனது. (ஒவ்வொரு தங்கப்பதக்கத்திலும் 6 கிராம் அளவு தங்கம் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உத்தரவு).
  • ஒவ்வொரு ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கமும் 92.5 சதவீதம் வெள்ளினால் செய்யப்பட்டது.
  • லண்டன் ஒலிம்பிக் போட்டிக்காக 4,700 பதக்கங்கள் தயாரிக்கப் பட்டுள்ளது.
  • பதக்கம் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட உலோக தாது சர்வதேச தரத்திலானது. இதற்காக சால்ட் லேக் சிட்டி, உத் மற்றும் மங்கோலியா பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து உலோக தாது பெறப்பட்டுள்ளது.
  • லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்கள், இங்கிலாந்தில் உள்ள வால்ஸ் பகுதியை அடுத்த போன்டைகுலன் என்ற கிராமத்தில் உள்ள 'த ராயல் மின்ட்' என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்கள் இவ்வளவு சிறப்பு அம்சங்கள் கொண்டது. இந்தியாவில் இருந்து சென்றுள்ள வீரர்கள், வீரர்கனைகள் பதக்கங்களை வென்று நாடு திரும்புவார்கள் என ஆவலுடன் எதிர்ப்பார்போம்...

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் 

இந்த பிளாக் பற்றிய உங்கள் கருத்துரைகளை சொல்லுங்கள்,,,

0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....