நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

21 July 2012

டி.என்.பி.எஸ்.சி-VAO-பெரும் பாலைவனங்கள்-பாகம் 2


பாலைவனம்


நாம் வாழும் இந்த உலகத்தில் மனிதன் வசிக்க முடியாத பல பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் பாலைவனங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாமே.


பாலைவனங்கள் என்றால் என்ன?
புவியியலின் படி எப்பகுதி மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறுகிறதோ அது பாலைவனம் எனப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு 250 மி.மீ.க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகளே பாலைவனங்கள் எனப்படுகின்றன. 

புவியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனம் ஆகும். பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகள் ஆகும். இங்கு பகலில் வெப்பம் வாட்டி எடுத்து விடும். அதே போல இரவில் குளிரும் அதற்கு இணையாக இருக்கும். பாலைவனங்கள் மனித வாழ்க்கை மேற்கொள்ள சாதகமாக இருப்பதில்லை.

பாலைவனங்கள் என்றால் நம் நினைவுக்கு வருவது சஹாராவே. இது மிகவும் பெரியது. இதன் பரப்பளவு ஏறத்தாழ அமெரிக்கா நிலப்பரப்புக்கு (98,26,630 கிமீ) ஒத்ததாகும்.  இந்த பாலைவனங்கள் எவைகள், அது எந்த நாடுகளில் காணப்படுகின்றன. அவற்றின் பரப்பளவு என்ன என்பதை காணலாம்.


பாலைவனம் பெயர்கள்அமைந்திருக்கும் நாடுகள்அதன் பரப்பளவு
சஹாரா வட ஆப்பிரிக்கா90,04,650
அரேபியன் மத்திய கிழக்கு 25,89,900
கோபி சீனா 12,94,950
படகோனியன் அர்ஜென்டினா 6,73,374
கிரேட் விக்டோரியா ஆஸ்திரேலியா 6,47,475
கலாஹாரி  தென் ஆப்பிரிக்கா  5,82,727
கிரேட் பாசின்  அமெரிக்கா   4,92,081
தார்  இந்தியா/பாகிஸ்தான் 4,53,232
கிரேட் சாண்டி ஆஸ்திரேலியா  3,88,485
காரா-கும் மேற்கு ஆசியா 3,49,636
கொலரேடோ  மேற்கு அமெரிக்கா3,36,687
கிப்சன்    ஆஸ்திரேலியா  3,10,788
சொனோரன்  அமெரிக்கா    3,10,788
கிசில்-கும்  மேற்கு ஆசியா2,97,838
தாக்ளாமக்கான்  சீனா    2,71,939
இரானியன்     ஈரான்2,58,990
சிம்ப்சன்/டோனிவட ஆப்பிரிக்கா1,45,034
மோஹேவ்  அமெரிக்கா 1,39,854
அட்டகமா  சிலி  1,39,854
நமீப்  ஆப்பிரிக்கா  33,668 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் பயனுள்ள அடுத்த பதிவில் சந்திப்போம்!

இந்த வலைப்பூ பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்....

0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....